பரந்த வயல்வெளி... தலையில வைக்கோல் கட்டு... இடுப்புல மண் பானை... ஆஹா... ஆஹா...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் குடும்பம் இப்போது கிராமத்தில் குழுமி இருக்காங்க.

இன்னிக்குத்தான் கிராமத்தின் ரம்யத்தை கண்முன்னே கொண்டு வந்திருக்காங்க...இப்போ இருக்கற பொம்பளை பிள்ளைங்களுக்கு இடுப்பில் குடத்தை வச்சு கூட பழக்கம் இருக்காது.

கேழ்வரகு களி சாப்பிட்டும் பழக்கம் இருக்காது. ஆனாலும் இப்போது கேழ்வரகு கூழ் அங்கங்கு சாலை டைகளில் கிடைக்கிறது.

செம்பா கார்த்திக்

செம்பா கார்த்திக்

கிராமத்து குலசாமி கோயில் திருவிழாவுக்கு செம்பா குடும்பம் போயிருக்காங்க. செம்பாவை அழைச்சுட்டு வரவேணாம்னு குருஜி சொன்னதா கார்த்திக் அப்பா சொல்லியும் செம்பாவை கார்த்திக் அழைச்சுட்டு வந்துடறான். இதனால் பெரியவர் எப்போதும் பயத்தில் இருக்கார்.

பொங்கல் செம்பாதான்

பொங்கல் செம்பாதான்

செம்பா தான் பிறந்த கிராமத்தை சுத்திப் பார்க்க போயிடறா...இங்கே பொங்கல் வைக்க நேரமாச்சு என்றாலும், செம்பாதான் வந்து அடுப்பைப் பத்த வைக்கணுமாம். மூத்த மருமகள்கள் ரெண்டு பேர் இருக்க எதற்கெடுத்தாலும் செம்பா என்பது ஒரே போர்.

செம்பாவின் அப்பா

செம்பாவின் அப்பா

செம்பாவின் அப்பாவுக்கும், செம்பாவின் மாமனாருக்கும் என்னவோ வில்லங்கம் நடந்து இருப்பது போல, செம்பா கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் முள் மேல நிற்பது போல முகத்தை வச்சுக்கிட்டு இருக்கார்.

பானை இடுப்பில்

பானை இடுப்பில்

வீட்டு பெண்களுக்கு வயல்வெளியில் ஒரு போட்டி வைக்கறாங்க. இது காண கண்கொள்ளா காட்சியாக இருக்கு. தலையில வைக்கோல் கட்டு, இடுப்பில் மண்பானை தண்ணீர்னு வச்சுக்கிட்டு, வயல் வரப்பில் கீழே விழாமல் நடந்து வர வேண்டும்.

கொள்ளை அழகு

கொள்ளை அழகு

அர்ச்சனா, வடிவு, வினோதினி என்று பெண்கள் தலையில் வைக்கோல் கட்டு வச்சுக்கிட்டு, இடுப்பில் மண்பானையை வச்சுக்கிட்டு வரப்பில் நடந்து செல்வது கொள்ளை அழகாக இருந்தது. போதாக் குறைக்கு வழுக்கி வேற விழுந்துடறாங்க.

செம்பா மட்டும்

செம்பா மட்டும்

செம்பா தலையில் வைக்கோல் கட்டு, இருப்பில் மண்பானையுடன் நடந்து வருகையில், யாரோ ஒருவர் செம்பா பயப்படாதே.. உங்கிட்ட கொஞ்சம் பேசனும்னு சொல்ல செம்பா மயக்கம் போட்டு வயலில் விழுந்துடறா. இதைக் கேட்ட மாமனார் மேலும் முகம் மாறிப் போகிறார்.

வெங்காயம் களி

வெங்காயம் களி

கேழ்வரகு களியும், தொட்டுக்க சின்ன வெங்காயம், பூண்டு சட்னியும் செய்து கொண்டு வர்றான் வேலைக்காரன். எல்லாரும் கிராமத்து மரத்தடி நிழலில் உட்கார்ந்து ருசிச்சு சாப்பிடறாங்க.

சில விஷயங்கள் கேட்க நல்லாருக்கும்..சில விஷயங்கள் பார்க்க நல்லாருக்கும்.ராஜா ராணி சீரியலின் இந்த எபிசோட் பார்க்க ரொம்ப நல்லாருந்துச்சு...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+