Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புசு புசு வந்தனா.. பளிச்சுன்னு ஸ்லிம் ஆன அதிசயம்.. வாய் பிளந்து பார்க்கும் நடிகைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த லாக்டோன் டைம்ல எல்லா கதாநாயகிகளும் வீட்டிலிருந்து போட்டிபோட்டு உடம்பை குறைத்து பிட்டாக மாறியிருக்கிறார்கள். அதுதான் லாக்டோனால் கிடைத்த மிகப் பெரிய பலன்.

முன்னாடி புசுபுசுன்னு இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போ சும்மா ஸ்லிம்மாக மாறி கவர்ச்சியை கூட்டி கலக்குகிறார்கள் அந்த வழியில் வந்தனாவும் வந்திருக்கிறார்.

வந்தனாவை நினைவிருக்கிறதா.. ரொம்ப பிரபலமான நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர்தான் இந்த வந்தனா. ஆனந்தம் சீரியல் மூலமாக அறிமுகமாகி அதகளம் செய்த வில்லி நடிகை இவர்.

ஆனந்த வில்லி

ஆனந்த வில்லி

ஆனந்தம் மூலமாக வந்தாலும், அதில் பிரபலம் கிடைத்தாலும் கூட தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்ததால் நிறைய சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார்.

காதல் முதல் கல்யாண் வரை வில்லி

காதல் முதல் கல்யாண் வரை வில்லி

காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் அதிர வைத்த வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல மெல்ல திறந்தது கதவு என பல சீரியல்களில் வில்லியாக தான் நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் நிஜத்தில் இவர் உண்மையில் அமைதியான கேரக்டர். சீரியல்களில் அப்படியே மாறுதலான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

முகத்திலேயே எல்லா உணர்வுகளும்

முகத்திலேயே எல்லா உணர்வுகளும்

அதுமட்டும் இல்ல எல்லாம் எக்ஸ்பிரஸனையும் தன்னுடைய கண் பார்வையிலேயே காட்டுகிறாராம். அதனாலதான் எனவே இவருக்கு வில்லி கேரக்டர் வாய்ப்பு நல்ல பொருந்தி இருக்கிறது போல. இவர் நளனும் நந்தினியும் படத்தில் நடித்த மைக்கேல் தங்கதுரையை காதலித்து 2011ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

மிஸஸ் சின்னத்திரை

மிஸஸ் சின்னத்திரை

பின்னர் கணவருடன் இணைந்து விஜய் டிவியில் மிஸஸ் சின்னத்திரை பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த லாக்டோனுக்கு முன்னாடி கும்முனு புசுபுசுன்னு இருந்த நம்ம வந்தனா இப்போ படு ஸ்லிம்மா கவர்ச்சியாக மாறி இணையதளத்தில் போட்டோக்களை அப்லோட் பண்ணி வைரலாக பரவி வருகிறார்.

நல்லா மெலிஞ்சாச்சு

நல்லா மெலிஞ்சாச்சு

அவரைப் பார்த்த ரசிகர்கள் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி மாறி விட்டீர்களே என்று கமெண்ட் மழையை பொழிகிறார்கள். அது மட்டும் இல்ல இப்போ இணையதளத்தில் அவர் போட்டிருக்கும் போட்டோஸ்கள் ரசிகர்கள் வியக்கத்தக்க எக்குத்தப்பாக வரும் கமெண்ட் போட்டிருக்கிறார்கள் இவர் பார்வை பார்த்தாலே கிறங்கிப் போய் இருக்கிறார்கள் ரசிகர்கள். இவர் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

வடிவேலு பாணியில்

வடிவேலு பாணியில்

இவருக்கு சும்மா வீட்டில் இருப்பது தான் ரொம்பவும் பிடிக்கும். அதனால் இந்த நிலைமையில் வீட்டிலிருந்து நல்லா என்ஜாய் பண்ணி கொண்டுதான் இருக்கிறாராம் . எல்லா நடிகைகளும் சீரியல் நடிப்பு இல்லாத இந்த நேரத்தை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று ஃபீல் பண்ணி கொண்டிருக்கும்போது இவர் மட்டும் இது நல்லா தானே இருக்கு என்று ஜாலியாக கூறிக் கொண்டிருக்கிறார்.

லைட்டா சோம்பேறி

லைட்டா சோம்பேறி

சூட்டிங் போறதை ஸ்கூல் பிள்ளைகள் போல அடடா போயே ஆகணுமா என்று கஷ்டமாதான் பீல் பண்ணுகிறார். குட்டி பிள்ளைகள் ஸ்கூலுக்கு போகாமல் மட்டம் போடும்போது எப்படி ஜாலியா பீல் பண்ணுவாங்களோ.. அவரும் அதேபோல பீல் பண்ணுகிறார். இப்போ வீட்டுல இருக்கிறது ரொம்ப ஜாலியா இருக்கு என்று என்ஜாய் பண்ணுகிறார். இந்த மூணு மாசத்துல இவர் வீட்டை விட்டு வெளியே போகவில்லையாம். அதுமட்டுமில்ல இவங்களுக்கு ஷாப்பிங் போறது பிடிக்கவே செய்யாதாம்.

 டிரஸ் இவருடையது.. வாங்கியது அம்மா

டிரஸ் இவருடையது.. வாங்கியது அம்மா

இவர் போடும் டிரஸ் உள்ளிட்ட அனைத்துமே இவர் வாங்கியது இல்லையாம். இவருடைய அம்மாதான் போய் வாங்கிட்டு வருவாராம். அப்படி ஒரு ஸ்வீட்டான லேஸி லேடிதான் நம்ம வந்தனா. இவருக்கு அமைதியாக இருக்கும் இடம் மட்டும்தான் ரொம்ப பிடிக்குமாம். ஷூட்டிங் டைம்ல மட்டும் தான் அவங்க பிரெண்ட்ஸ் கூட பேசுவாங்களாம். வீட்டுக்கு போனதும் ரொம்ப அமைதியாக யார்கிட்டயும் பேசாமல் ஜாலியா தனிமையை என்ஜாய் பண்ணுவாங்களாம். ந

போன் பண்ண மாட்டியா

போன் பண்ண மாட்டியா

பிரெண்ட்ஸ் எல்லாம் இவர்கிட்ட செல்லம்மா கோபமாக ஒரு போன் கூட பண்ண மாட்டியா என்று கேட்டார்களாம். இவங்க எட்டாங்கிளாஸ் படிக்கும்போது தெலுங்குல நடிக்க வாய்ப்பு வந்துச்சு. ராதிகா கூடதான் நடித்திருக்கிறார். அந்த சீரியலில் இவர் காலேஜ் படிக்கிற திமிரான வில்லி கேரக்டரில் பண்ணையார் பெண்ணாக நடித்தார். அந்த சீரியலில் ராதிகா, நிரோஷாவையும் கொடுமைப்படுத்தும் மாதிரியான கேரக்டரில் நடித்துள்ளார். அப்போ அவர் கூட நடிச்சவங்க எல்லாம் சொல்லுவாங்களாம் இவரைப் பார்த்து, நீ சைஸுக்கு ஏற்ப வில்லி இல்லை என்று.

லவ் பண்ணுங்கோ

லவ் பண்ணுங்கோ

இணையதளத்தில் இவர் போஸ்ட் போட்டதும் ரசிகர்கள் இவரது போட்டோக்களுக்கு கமெண்ட் போடுவது இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். என்னுடைய ரசிகர்கள் என்னை எவ்வளவு லவ் பண்ணுகிறார்கள் என்று அவர்கள் போடும் கமெண்ட்லேயே தெரிகிறது. ஒரு சின்ன தவறு செய்து இருந்தாலும் அதையும் சுட்டிக்காட்டுவது எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. எனக்கு இதே போல லவ் தொடர வேண்டும் என்று பாசமழை பொழிந்து இருக்கிறார். பிறகென்னப்பா,, வந்தனாவை தொடர்ந்து லவ் பண்ணுங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+