Vinayagar Chaturthi: ஜீ தமிழில் காலை முதல் மாலை வரை.. சிறப்பு பட்டிமன்றம் முதல் சூப்பர் ஹிட் படங்கள் வரை!
சென்னை: அறிவு, வெற்றி, மற்றும் தடைகளை நீக்கும் கடவுளான விநாயகரின் பிறந்தநாளைக் கொண்டாடும் திருவிழாவே விநாயகர் சதுர்த்தி. இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆகஸ்ட் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபாடு செய்து, பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். விநாயகர் சதுர்த்தியன்று, நல்ல நேரம் பார்த்துப் பூஜை செய்வது சிறப்பாகும். இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி பூஜைக்கான சரியான நேரம் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை எனச் சொல்லப்படுகிறது.

ஜீ தமிழில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் நிகழ்ச்சிகள்
தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனல்களில் ஒன்றான ஜீ தமிழ், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரசிகர்களை மகிழ்விக்கச் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தச் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த முழு விவரங்கள் இதோ:
காலை 8:00 - 9:30 மணி வரை: சிறப்பு பட்டிமன்றம்
கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில், "மாற வேண்டியவர்கள் பிள்ளைகளா? பெற்றோர்களா?" என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது. வழக்கறிஞர் அருண், பேராசிரியர் பழனி, சொல்லரசி பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் பங்குபெற்று, சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் உரையாடலை நிகழ்த்த உள்ளனர்.
காலை 9:30 மணி: 'விருபாக்ஷா' திரைப்படம்
சாய் தரம் தேஜ், சம்யுக்தா மேனன் நடிப்பில் வெளியாகி, வசூல் மற்றும் விமர்சன ரீதியாகப் பெரும் வெற்றி பெற்ற 'விருபாக்ஷா' திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
மதியம் 12:00 மணி: 'தி ரோடு' திரைப்படம்
நடிகை திரிஷா, சந்தோஷ் பிரதாப் நடிப்பில் வெளியான 'தி ரோடு' திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. சாலை விபத்தில் கணவன் மற்றும் குழந்தையை இழந்த திரிஷா, அந்த விபத்தில் மறைந்திருக்கும் மர்மத்தைக் கண்டறியப் போராடுவதே இந்த படத்தின் கதை.
மதியம் 3:00 மணி: மெகா சங்கமம்
ஜீ தமிழின் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களான 'சரிகமப' மற்றும் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' போட்டியாளர்கள், மற்றும் ஜீ தமிழ் நட்சத்திரங்கள் இணைந்து, ஆட்டம், பாட்டம் என களைகட்டும் ஒரு 'விநாயகர் சதுர்த்தி மெகா சங்கமம்' நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
மாலை 5:00 மணி: 'DD நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம்
நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான வெற்றி பெற்ற ஹாரர்-காமெடி திரைப்படமான 'DD நெக்ஸ்ட் லெவல்' ஒளிபரப்பாக உள்ளது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்று அதிகமான வசூலையும் பெற்றது. அதேபோல ஓடிடியிலும் அதிகமான வியூஸ்களை அள்ளிக்கொண்டிருக்கும் நிலையில் இப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக இருக்கிறது.
எனவே, இந்த விநாயகர் சதுர்த்தி அன்று, தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாடி மகிழுங்கள்.


Click it and Unblock the Notifications
