சர்வைவரில் ஜொலிக்குது லுங்கியின் பெருமை... இப்படியெல்லாம் கூட இருக்கா??
சென்னை: இன்டர்நேஷனல் நிகழ்ச்சியில் லுங்கியின் பெருமையைப் பற்றி தெரிந்து கொண்ட ரசிகர்கள் வாய்விட்டு சிரித்து வருகின்றனர்.
இதை இப்படியும் யூஸ் பண்ணலாம் அப்படியும் யூஸ் பண்ணலாம் என்று இருட்டுக்குள் அதிரடி காட்டி இருக்கிறார் அம்ஜத் கான்.
நாங்கல்லாம் யாரு என்று கெத்து காட்டி இருக்கின்றனர் சர்வைவர் கண்டஸ்டாண்டுகள்.

இன்டர்நேஷனல் நிகழ்ச்சி
ஜீ தமிழில் ஆரம்பமாகி இருக்கும் சர்வைவர் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பும் ஆர்வமும் மிகுந்திருக்கிறது. ஒவ்வொரு ப்ரோமோவும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி கொண்டு இருக்கின்றது. அதுவும் இன்றைய நாள் இரண்டாவது நாளாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கப்போகிறது. ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு பெரிய ஷாக் கொடுக்கும் விதமாக லுங்கியைப் பற்றி கண்டஸ்டாண்டுகள் பேசி இருப்பது தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. அடடா என்னமா யோசிக்கிறாங்க என்று அனைவரும் ஷாக்கில் இருக்கின்றனர்.

முதல்நாளே மிரட்டல்
சர்வைவர் நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றார். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அதில் நடிகர், ஸ்டண்ட் நடிகர், பாடகர், விளையாட்டு வீரர் என பல தரப்பட்ட போட்டியாளர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் லக்கி நாராயணன், அம்ஜத் கான், விஜே பார்வதி, லட்சுமி பிரியா, லேடி கேஷ் காயத்ரி ரெட்டி, உமாபதி ராமையா, விக்ரம், விஜயலட்சுமி, ஐஸ்வர்யா சரண், நந்தா, ராம். சி, இந்திரஜா ரோபோ சங்கர் என பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர். இதில் இவர்களைத் தவிர இன்னும் இரண்டு போட்டியாளர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இவர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செம டைட்டில்
முதல் நாளிலே அர்ஜுன் இவர்கள் 16 பேரையும் காடர்கள் வேடர்கள் என்று இரண்டு அணியாக பிரிந்து விட்டார். இவர்களில் ஒரு டீம் காட்டினில் டாஸ்க் தொடங்குவதாகவும் இன்னொரு டீம் கடலிலே தொடங்குவதாகவும் இருக்கிறது. அதில் காட்டில் டாஸ்க் தொடங்கிய வேடர்களின் ப்ரோமோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது . காடர்கள் டீமில் விக்ரம் தலைவராகவும் சரண், ராம். சி, இந்திரஜா சங்கர், லேடி கோஷ், விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி, உமாபாரதி ராமையா போன்றோர் இருக்கின்றனர். அதுபோல வேடர்கள் டீமில் லட்சுமி பிரியா தலைவராகவும் அம்ஜத் கான், ஸ்ருஷ்டி டாங்கே, நந்தா, லக்கி நாராயணன், பெசன்ட் ரவி, ஐஸ்வர்யா, விஜே பார்வதி போன்றவர்கள் இருக்கின்றனர்.

லுங்கிக்கு விளம்பரமா?
டாஸ்க் தொடங்கிய முதல் நாளிலேயே வேடர்கள் டீம் காட்டுக்குள்ளே குளிரில் நடுங்கி கொண்டிருக்கின்றனர் அதற்காக தீப்பந்தங்களை அமைத்து குளிர் காய்ந்து கொண்டு இருக்கின்றனர். குளிருக்கு இதமாக இவர்கள் எந்த உடையை உடுத்தலாம் என்று தேடிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் ஏற்கனவே கொண்டுவந்த உடைகளில் ஒரு சிலதை மட்டும் தான் இவர்களோடு எடுத்துச் செல்ல அனுமதி கிடைத்திருந்தது. இதில் பலரும் இவர்களுக்கு கொடுத்த சிறிய பேக்கில் ஒரு சில உடைகளைத் தான் அதில் வைத்துகொள்ள அனுமதி கிடைத்திருந்தது. முக்கியமான உடைகளை மட்டும் சிலர் எடுத்து இருந்தனர். அதில் அம்ஜத் கான் லுங்கியை எடுத்து வைத்திருக்கிறார். இதை பார்த்த மற்ற போட்டியாளர்கள் லுங்கி எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து இரக்கிறீர்களா? என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்கு அவர் லுங்கி எடுத்துக்கொண்டு வந்தால் குளிரும் போது அப்படியே நைட் டைமில் கீழே கட்டிக்கலாம், போர்வையாக மூடிக் கொள்ளலாம், டவலாகவும் யூஸ் பண்ணிக்கலாம் என்று கூறியதைக் கேட்டதும் அனைவரும் ஆர்ப்பரிக்கின்றனர். சர்வர் நிகழ்ச்சியில் எப்படியோ லுங்கி பேமஸ் ஆகி விட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications