For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உதவியை மறக்காத சூர்யா... விருமன் விஷயத்திலும் தொடரும் அமேசான் பாசம்...!!

Google Oneindia Tamil News

சென்னை:கார்த்தி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்ப்போடு எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் விருமன் படத்தின் தற்போதைய அப்டேட் ரசிகர்களுக்கு எனர்ஜி கொடுத்துள்ளதாம்.

ஏங்க, என்கிட்ட என்ன குறையை கண்டீங்க.. கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின்.. கப்சிப் ஆன மீட்டிங்..!ஏங்க, என்கிட்ட என்ன குறையை கண்டீங்க.. கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின்.. கப்சிப் ஆன மீட்டிங்..!

விருமன் திரைப்படம்

விருமன் திரைப்படம்

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனத்தின் சார்பில்.. குட்டிப்புலி,கொம்பன் படத்தின் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வரவிருக்கும் திரைப்படம் "விருமன்" கோடை விடுமுறை வெளியீடாக வெளிவர இருக்கும் இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் கைப்பற்றியுள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவுகிறது.

இரண்டாவது முறையாக வாய்ப்பு

இரண்டாவது முறையாக வாய்ப்பு

இதுவரை தான் நடித்த படங்கள் அனைத்துமே வெவ்வேறு இயக்குனர்களுக்கு வழங்கிவந்த கார்த்தி, முதன்முறையாக தனது கொம்பன் பட இயக்குனர் முத்தையா விற்கு இரண்டாவது முறையாக விருமன் படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். எவ்வளவோ நல்ல இயக்குனர்கள் படத்தில் நடித்திருந்தாலும், கொஞ்சம் சர்ச்சை இயக்குனராக பார்க்கப்படும் முத்தையா விற்கு கார்த்தி இரண்டாவது வாய்ப்பு வழங்கியது அனைவருக்கும் சற்று வியப்பாகவே இருந்தது.பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகள் அதிதி தமிழ் சினிமாவில் முதல் முறையாக கதாநாயகியாக இப்படத்தில்தான் அறிமுகமாகிறார்.யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

படம் ரிலீஸ்

படம் ரிலீஸ்

படம் நன்றாக இருக்கிறதோ..!! இல்லையோ..!? போட்ட காசை எடுத்து விடலாம் என்ற மினிமம் கேரண்டி முத்தையா படங்களுக்கு இருப்பதால், இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்து வருகிறது. மிக விரைவாக படத்தை எடுத்து முடிக்கும் பழக்கம் கொண்ட இயக்குனர் முத்தையா இந்த படத்தையும் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக வேகமாகவும் எடுத்து வந்து கொண்டிருக்கிறார். கோடை விடுமுறைக்கு படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு விட்டதால் அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் ஆகும் சிறிய படங்கள் ரிலீஸ் ஆன பின்பு படத்தை பொருத்து டீலிங் பேசும் ஒடிடி நிறுவனங்கள், பெரிய படங்களை பொறுத்தவரை படம் பூஜை போடப்பட்ட அன்றே படத்தை வாங்குவதற்கு பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிடுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே நிலவும் போட்டி காரணமாக எவ்வளவு தொகையாக இருந்தாலும் பெரிய படங்களை வாங்குவதற்கு ஒடிடி நிறுவனங்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. கொரனா முதல் ஊரடங்கின் போது தனது சூரரை போற்று படத்தை நேரடியாக அமேசான் ஓடிடி யில் ரிலீஸ் செய்தார் சூர்யா. அந்த நேரத்தில் பல எதிர்ப்புகள் இருந்தும் தனக்கு உறுதுணையாக இருந்த அமேசான் நிறுவனத்திற்கே விருமன் படத்தின் ஓடிடி உரிமையை விற்று விட்டதாகவும்,படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி வழக்கம்போல் இரண்டு வாரங்களில் அமேசானில் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

English summary
News about the upcoming movie starring Karthi is spreading on the social networking site.The current update of Viruman, one of the most anticipated films by the fans, has given energy to the fans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X