விஷாலுக்கும்- தன்ஷிகாவுக்கும் எத்தனை வயது வித்தியாசம் தெரியுமா? வதந்திகளுக்கு அவரே கொடுத்த விளக்கம்
சென்னை: நடிகர் விஷால் மற்றும் நடிகை தன்ஷிகா இருவரும் காதலித்து வரும் விஷயத்தை நேற்று வெளிப்படையாக அறிவித்திருந்தனர். இவர்களுடைய திருமணம் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இருக்கும் வயது வித்தியாசம் அனைவரையும் வியக்க வைத்து இருக்கிறது. அதே நேரத்தில் தங்களைப் பற்றிய வதந்திகளுக்கும் தன்ஷிகா விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் விஷால் சில மாதங்களுக்கு முன்பே தனக்கு விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்று அறிவித்து இருந்தார். அப்போது கூட இது உண்மையா? அல்லது விஷால் சும்மா கலாய்க்கிறாரா? என்ற கேள்விகளும் எழுந்து வந்தது. ஆனால் நேற்று காலையில் வெளியான செய்தி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

விஷால் திருமண அறிவிப்பு
அதாவது விஷால் மற்றும் தன்ஷிகா இருவரும் காதலிப்பதாகவும், இருவரும் தங்களுடைய திருமண தேதியை இன்று மாலை அறிவிப்பார்கள் என்றும் தகவல் வெளியானது. இது சோசியல் மீடியா முழுக்க பரவி வந்தது. இதுவரைக்கும் விஷாலுடன் பல நடிகைகள் பற்றிய கிசுகிசுப்பு வந்திருக்கிறது. ஆனால் தன்ஷிகாவுடன் எந்த இடத்திலும் விஷால் பற்றிய பேச்சு அடிபட்டதே கிடையாது. ஆனால் தன்ஷிகாவை தான் விஷால் காதலிக்கிறார் என்று நேற்று காலையில் வெளியான செய்தி பலருக்கும் வியப்பை கொடுத்து இருந்தது. ஆனால் மாலையில் இதை விஷால் மற்றும் தன்ஷிகா இருவரும் உறுதி செய்திருந்தனர்.
விஷால்- தன்ஷிகா வயது வித்தியாசம்
விஷாலுக்கு 47 வயதாகிறது. தன்ஷிகாவிற்கு 35 வயது ஆகிறது. இருவருக்கும் 12 வயது வித்தியாசம் இருக்கிறது. ஆனால் இருவரும் 10 வருடங்களுக்கு மேலாக இருவரும் நண்பர்களாக பழகி வருகிறோம் என்று தன்ஷிகா கூறி இருக்கிறார். ஆனால் கடந்த ஒரு வருடமாக தான் நாங்கள் காதலித்து வருகிறோம் இந்த விஷயத்தை ரகசியமாக வைத்துக்கொள்ள நினைத்தோம். ஆனால் இது லீக் ஆகிவிட்டது திருமணத்தின் போது தான் இதை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தோம். இப்போது விஷயம் வெளியே தெரிந்ததால் அதை நாமே சொல்லிவிடலாம் என்று நாங்கள் நினைத்திருக்கிறோம் என்று தன்ஷிகா பேசியிருக்கிறார்.

விஷால் பேச்சு
அதுபோல தன்ஷிகா மற்றும் விஷால் இருவருக்கும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். அதுபோல தன்ஷிகா பற்றி விஷால் பேசும்போது சாய் தன்ஷிகாவை சந்தோஷமாக வைத்துக்கொள்வேன். அவர் இப்போது எப்படி சிரித்துக் கொண்டிருக்கிறாரோ அவருடைய முகத்தில் இருக்கும் அந்த சிரிப்பு எப்போதும் இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். திருமணத்திற்கு பிறகும் சாய் தன்ஷிகா சினிமாவில் நடிப்பார் என்று கூறுகிறார்.
மரியாதை
மேலும் விஷால் பேசும் போது, இந்த நிகழ்ச்சிக்கு தன்ஷிகாவின் அப்பா வந்திருக்கிறார் அவருடைய ஆசிர்வாதத்துடன் அவருடைய அனுமதியுடன் தான் இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை நான் அறிவிக்கிறேன் என்றும் விஷால் பேசி இருந்தார். இதனால் விஷால் தன்னுடைய வருங்கால மனைவிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications