விஷாலுக்கு ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து! சாப்பிட முடியாது! தண்ணீர் மட்டும்! சுந்தர் சி சொன்ன தகவல்
சென்னை: இயக்குனர் சுந்தர் சி இயக்கிய மதகஜராஜா திரைப்பட ஃப்ரீ ரிலீஸின் போது வந்த விஷாலை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். விஷாலின் கைகள் நடுங்கி, அவரால் பேச முடியாமல் இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் விஷாலுக்கு நடந்த விபத்து குறித்து சுந்தர் சி அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம் 2013 ஆம் ஆண்டு திரைக்கு வர இருந்தது. ஆனால் சில பிரச்சனைகளால் அந்த படம் வெளியாவது சிக்கலாகிவிட்டது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி தான் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஷால், வரலட்சுமி சரத்குமார், சந்தானம், அஞ்சலி போன்ற பலர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் 12 வருடங்களுக்கு பிறகு வரும் 12ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான பிரஸ் மீட்டிங் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது சுந்தர் சி, விஷால், விஜய் ஆண்டனி, குஷ்பூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது விஷால் பேசும்போது அவருடைய கைகள் நடுங்கி அவரால் பேச முடியாமல் குரல் தழுதழுத்தது. அதை பார்த்ததும் பதறிப்போன விஜய் ஆண்டனி உட்பட சிலர் விஷாலை அங்கிருந்த சீட்டில் அமர வைத்தனர். பிறகு அவர் அந்த இடத்தில் தான் அமர்ந்திருந்தார். இதுவரைக்கும் எல்லா இடங்களிலும் கம்பீரமாக நானும் மதுரைக்காரன் தான் டா என்று சுற்றி கொண்டிருக்கும் விஷால் இன்று இப்படி இருக்கிறாரே என்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
அதனால் விஷாலுக்கு என்ன ஆச்சு என்று இணையத்தில் நேற்றிலிருந்து கேள்விகளும் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் நேற்று விஷால் பற்றி சுந்தர் சி பேசியதும் வைரலாகி வருகிறது. அதாவது இந்த திரைப்படத்தை நான் இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்ததற்கு முக்கிய காரணமே விஷால் தான்.
இந்த படத்திற்காக என்னைவிட அதிகமாக உழைத்தது விஷால்தான். சும்மாவே விஷாலிடம் இந்த கேரக்டர் வேண்டும் என்று சொன்னால் அதற்காக அவருடைய முழு உழைப்பையும் போட்டு விடுவார். நான் இந்த திரைப்படத்தில் கடைசி சாட்டில் சிக்ஸ் பேக் வேண்டும் என்று சொன்னேன். அதற்காக அவர் ஒரு வருடத்திற்கு சாப்பாடு எடுக்கவில்லை. முழுக்க முழுக்க தண்ணீர் மட்டும்தான் குடித்தார்.
அதுபோல கடைசி சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு இடத்தில் அவர் தலைகீழாக குதித்தார் அப்போது தலை நேராக தரையில் அடித்து விட்டது. அப்போது கழுத்து பக்கத்தில் இருந்து டக் என்று சத்தம் வந்தது, எனக்கு தூக்கி வாரி போட்டது. ஐயோ என்று பதறிப்போய் நாங்கள் பக்கத்தில் இருந்து அப்பல்லோ ஹாஸ்பிடலில் சேர்த்தோம். அங்கு எல்லா செக்கப் பார்த்துவிட்டு இவருக்கு அடிபட்ட மாதிரி வேற யாருக்காவது அடிபட்டு இருந்தால் நிலைமை ரொம்ப சிக்கலாயிருக்கும், இவர் இத்தனை நாட்களாக உடம்பை ஃபிட்டாக உடற்பயிற்சி செய்து வந்ததால் இவருக்கு பாதிப்பு குறைவு தான் என்று சொல்லிவிட்டார்.
ஆனாலும் அடுத்த நாளே விஷால் சூட்டிங் வைப்போம் என்று சொல்லிவிட்டார். எனக்கு தான் வருத்தமாக இருந்தது. ஆனால் அவருக்கு அவருடைய வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என்று அதற்காக எவ்வளவு கஷ்டங்களையும் தாங்குவார். அவருக்காக இந்த படம் வர வேண்டும் என்று நினைத்தேன்.
விஷாலின் உழைப்பை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ அது அவர்களுடைய விருப்பம் என்று விருப்பப்பட்டேன். இப்போ 12 வருஷத்துக்கு பிறகு இந்த படம் வரப்போகுது என்று கூறியிருக்கிறார்.
அதோடு விஷால் உடல் மெலிந்து கை நடுங்கியபடி பேசியதை பார்த்ததும் ரசிகர்கள் பதறிப் போய் இருக்கும் நிலையில் அவருக்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கூட இந்த படத்தின் பிரஸ் மீட்டிங்க்காங்க வந்திருக்கிறார். அவருக்கு காய்ச்சல் காரணமாகத்தான் குளிர் இருந்தது என்று பட குழு விளக்கம் கொடுத்திருந்தனர்.
அது போல இந்த திரைப்படத்தில் நடித்த மனோபாலா, மணிவண்ணன், மயில்சாமி, சிட்டிபாபு, சீனு ராமசாமி போன்ற நடிகர்கள் இன்று உயிருடன் இல்லை. அவர்களை நினைத்தும் நேற்று மேடையில் பீல் பண்ணி பேசி இருந்தனர்.
-
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications