விஷால் மயங்கி விழுந்ததை விடுங்க! சென்னை விமான நிலையத்தில் யாருடன் போட்டோ எடுத்திருக்காரு பாருங்க!
சென்னை: என் அன்பு நண்பரை சந்தித்ததில் மகிழ்ச்சி என நடிகர் விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பல திறமைகளை கொண்ட என் அன்பு நண்பர் விஜய் சேதுபதியை சென்னை விமான நிலையத்தில் சந்தித்தேன். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் அவரை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ரொம்ப நாள் கழித்து அவரை சந்தித்தேன். எங்கள் உரையாடல் சில நிமிடங்கள் மட்டுமே இருந்தாலும் நன்றாக இருந்தது. கடவுள் உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு எப்போதும் ஆசிர்வதிப்பார். விரைவில் உங்களை மீண்டும் சந்திப்பேன் என நம்புகிறேன் என விஷால் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்கள்
இதை பார்த்த ரசிகர்கள் இருவரும் சேர்ந்து படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர். தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஏதோ கிடைக்கும் ரோல்களில் விஜய் சேதுபதி நடித்து வந்தார். அப்போது தென் மேற்கு பருவக் காற்று எனும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமானார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
இது அவருக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது. அந்த படத்திற்கு பிறகு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என தொடர்ந்து அவரது படங்கள் மிகப் பெரிய வரவேற்பை கொடுத்தன.
ஸ்டைல்
விஜய் சேதுபதியின் நடன ஸ்டைல், பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி என எல்லாவற்றிலும் வித்தியாசம் இருக்கும். அத்துடன் ரம்மி, ஆரஞ்சு மிட்டாய் படங்களிலும் நடித்திருந்தார். ஆனால் அது தோல்வியை கொடுத்தது.
வில்லன்
இதைத் தொடர்ந்து அவர் ஜவான் படத்தில் வில்லனாக நடித்தார். தமிழில் பேட்டை, விக்ரம், மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தார். மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 50 ஆவது படமாக மகாராஜா அமைந்தது. இந்த படம் ஹிட்டடித்தது.
மே 23 இல் ஏஸ் ரிலீஸ்
தற்போது அவர் ஏஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார். யோகிபாபு, ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் மே 23 ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் சங்க கட்டடம்
விஷாலை பொருத்தமட்டில் அவர் நம் வீட்டு பக்கத்து வீட்டு பையன் போல் இருப்பதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஷால் நடிகர் சங்கம் கட்டும் பணியில் பிஸியாக இருக்கிறார். இந்த கட்டடத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதி திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருமணம்
இந்த நிலையில் நடிகர் சங்கத்தில் பொறுப்பை ஏற்ற போது, கட்டடம் கட்டி முடித்ததும்தான் தனக்கு திருமணம் என்றார். அந்த வகையில் தற்போது அவருக்கு பெண் பார்த்தாகிவிட்டது என்றும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பிறகு திருமணம் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதாவது நடிகர் சங்க கட்டடம் கட்டி முடித்ததும் அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் செய்வார் என சொல்லப்படுகிறது.
விஷால் நடுக்கம்
அண்மையில் விஷால் மதகஜராஜா படத்தின் நிகழ்ச்சிக்காக வந்திருந்த போது அவரது கைகள் நடுங்கியது பெரும் பேச்சு பொருளாக இருந்தது. அவருக்கு இந்த நடுக்கம் குடிப்பழக்கத்தால்தான் என சொல்லப்பட்டது. ஆனால் இதை விஷால் மறுத்தார். குடிப்பழக்கத்தை விட்டு நீண்ட நாள் ஆவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கூவாக திருவிழாவில் கூட திடீரென மயங்கி விழுந்தார் என்பது தெரியவந்தது.


Click it and Unblock the Notifications
