நடிகையுடன் காதல்? நான்கு மாதத்தில் திருமணம்.. கார்த்தி தான் காரணம், வெளிப்படையாக பேசிய விஷால்
சென்னை: நடிகர் விஷால் மதகத ராஜா திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் உடல்நிலை குறைபாடுடன் வந்து பேசியது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு சில மாதங்களாக அமைதியாக இருந்த விஷால் இப்போது மீண்டும் பேட்டிகளில் பேச தொடங்கி இருக்கிறார். அப்போது விஷாலுக்கு இன்னும் நான்கு மாதத்தில் திருமணம் என்று கூறியிருக்கிறார்.
விஷால் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பலருக்கும் பிரபலமானவர். அதுபோல சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். இவர் குறித்த செய்திகள் அடிக்கடி பரபரப்பு ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு முகமெல்லாம் வீங்கி கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே கை நடுக்கத்துடன் விஷால் பேசியது அனைவரையுமே அதிர்ச்சி அடைய வைத்தது. ஐயோ விஷாலுக்கு என்ன ஆச்சு? என்பதுதான் பலருடைய கேள்வியாக இருந்தது.

விஷாலின் மாற்றம்
விஷால் மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் வருத்தத்தோடு பேசி வந்தனர். ஆனால் ஒரு சிலர் அந்த நேரத்தில் கூட விஷாலின் நிலைமை இனி அவ்வளவுதான் விஷாலால் இனி பழைய நிலைக்கு வரவே முடியாது, அவருக்கு அந்தப் பழக்கம் இருந்தது இந்த பழக்கம் இருந்தது அதனால் தான் அவருடைய உடல்நிலை இப்படி மாறிவிட்டது என்றெல்லாம் பேசி வந்தனர். ஆனால் ஒரு வாரத்திலேயே விஷால் மீண்டும் பழைய நிலைக்கு வந்தார்.
வைரஸ் காய்ச்சல்
அது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதோடு தன்னைப் பற்றிய வதந்திகளுக்கும் விளக்கம் கொடுத்திருந்தார். கடுமையான வைரஸ் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் பல வருடத்திற்கு பிறகு தான் நடித்த திரைப்படம் மீண்டும் திரையில் வெளியாக இருப்பதால் அந்த ப்ரோமோஷனில் டாக்டர் கலந்து கொள்ள வேண்டாம் என்று சொன்ன பிறகும் தான் விருப்பப்பட்டு தான் கலந்து கொண்டேன் என்று கூறியிருந்தார்.
சர்ச்சைகள்
இப்படியான நிலையில் சில மாதங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் தன்னை பற்றி பரவி வந்த வதந்திகள் மற்றும் திருமண சர்ச்சை குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசும்போது சினிமாவில் சில வதந்திகள் அடிக்கடி பரவும். சில ரூமர்கள் ரூமராகவே இருந்துவிடட்டும் என்று நானும் விட்டு விடுவேன். நடிகை வரலட்சுமி உடன் என்னை தொடர்பு படுத்தி சிலர் பேசினார்கள் அதுவெல்லாம் உண்மையே கிடையாது.
வதந்திகள்
வரலட்சுமி எனக்கு நல்ல ஒரு தோழி அவ்வளவுதான். அதுபோல அபிநயா என்னுடன் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்தார் பிறகு அவருக்கும் எனக்கும் திருமணம் என்றெல்லாம் சிலர் கதை கட்டி விட்டார்கள். அதுவும் உண்மை இல்லை. அபிநயா என்னுடைய நல்ல தோழி ஒரு சகோதரி போன்றவர் இதுபோன்று சிலர் வதந்திகளை பரப்பி கொண்டிருப்பது ஆச்சரியமாகவும் கடுப்பாகவும் இருக்கும். ஆனாலும் அதை கண்டு கொள்வது கிடையாது.

திருமண அறிவிப்பு
இவர்களுக்கு வேலையே இதுதான் என்று கடந்து வந்து விடுவேன். அதே நேரத்தில் திருமணம் எப்போது என்று சிலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இன்னும் நான்கு மாதத்தில் திருமணம் செய்தியை அறிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதாவது நடிகர் மன்ற தலைவராக விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டபோது நடிகர் மற்ற கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் நான் திருமணம் செய்து கொள்வேன், என்னுடைய திருமணம் இந்த கல்யாண மண்டபத்தில் வைத்து நடக்கும் என்று விஷால் கூறி இருந்தார்.
கல்யாண செய்தி
இப்போது அதற்கான வேலையை நடிகர் கார்த்தி தான் கவனித்துக் கொண்டிருக்கிறார். கார்த்தி இன்னும் 4 மாதத்தில் வேலையை முடித்து விடுவான். அதற்குப் பிறகு நான் என்னுடைய கல்யாண செய்தியை சொல்கிறேன் என்று விஷால் பேசியிருக்கிறார்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications