சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஷால் நடிக்கும் புது படம்.. தனுஷ் தங்கச்சி தான் ஹீரோயினி! அனல் பறக்குமா?
சென்னை: சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷால் நடிக்கும் 35 வது திரைப்படத்தின் பூஜை இன்று எளிமையாக நடைபெற்று இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகி உடன் விஷால் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஷால் சமீபத்தில் தான் தன்னுடைய திருமணத்தை அறிவித்திருந்தார். தான் நடிகை தன்ஷிகாவே காதலிப்பதை தன்ஷிகாவின் திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அறிவித்திருந்தார். இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. அதுபோல சில மாதங்களுக்கு முன்பு அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த வீடியோக்களும் இணையதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதகஜராஜா திரைப்பட ப்ரோமோஷன் போது விஷாலுக்கு கைகள் நடுக்கத்துடன் நிற்க கட முடியாத நிலையில் இருந்தார் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. அவர் பேச முடியாமல் தவித்ததை பார்த்ததும் ஐயோ விஷாலுக்கு என்ன ஆச்சு என்று பலரும் தேடி வந்தனர். ஆனாலும் விஷால் முன்பு போல அதிகமான திரைப்படங்களில் நடிக்கவில்லை. இதனால் ஏன் இவர் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை என்றும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இன்று தன்னுடைய 35 வது திரைப்படத்தின் பணிகளை பூஜையை உடன் தொடங்கி இருக்கிறார்.
அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் rp சௌத்ரி தயாரிப்பில் தான் விஷால் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த நிறுவனம் தயாரித்த அதிகமான படங்கள் சூப்பர் டூப்பராக வெற்றி அடைந்திருக்கிறது. அதிலும் கேஎஸ் ரவிக்குமார், விக்ரமன், லிங்குசாமி போன்ற பல இயக்குநர்களை இந்த நிறுவனம் தான் கோலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்தது. சூரியவம்சம் உட்பட பல பேமிலி படங்களை இந்த படம் தயாரித்து இருந்தது.

விஜய் நடிப்பில் பூவே உனக்காக, லவ் டுடே, திருப்பாச்சி, ஜில்லா போன்ற படங்களையும் இந்த நிறுவனம் தான் தயாரித்திருந்தது. ஆனால் ஜில்லா திரைப்படத்திற்கு பிறகு இந்த நிறுவனத்திற்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவில்லை. ஆனால் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் நூறாவது படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்று ஆர்பி சவுத்ரி ஆசைப்பட்டு விஜய் இடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் இப்போது அரசியலில் அடி எடுத்து வைத்திருப்பதால் இனி சினிமாவில் தொடர்வாரா? இல்லையா? என்று கேள்விக்குறி இருக்கிறது.
ஆனால் விஜய் தன்னுடைய தயாரிப்பில் நடிப்பார் என்று காத்திருந்த ஆர்பி சவுத்ரிக்கு ஏமாற்றமே கிடைத்து வந்ததால் இப்போது அந்த இடத்தில் விஷாலை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்து இருக்கின்றனர். பெயர் வைக்காமல் தொடங்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். துஷாரா ஏற்கனவே நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்திருந்தார்.

அதற்கு பிறகு தனுஷ் உடன் ராயன் திரைப்படத்தில் தங்கச்சியாக நடித்திருந்தார். அதிலும் அவருடைய இன்னொரு வித்தியாசமான நடிப்பை பார்க்க முடிந்தது. அதுபோல சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் விஷால் நடிக்கும் திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது போல விஷாலுடன் நடிகர் சரத்குமார், ஜீவா உள்ளிட்ட பலரும் நடிக்க இருக்கிறார்கள். எல்லோரும் இந்த திரைப்படத்தின் பூஜையில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications