சன்னி லியோனுக்கு விஷ்ணுகாந்த் "அந்த" மாதிரி சாட்டிங்? சம்யுக்தா வெளியிட்ட ஸ்கிரீன்ஷாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சம்யுக்தா தன்னுடைய கணவர் விஷ்ணுகாந்த் சன்னி லியோனுக்கு சாட் செய்ததாக ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே விஷ்ணுகாந்த், சம்யுக்தா ஒரு நபரோடு பேசியதாக பப்பி லவ் சாட்டிங் என்று ஒரு ஸ்க்ரீன் ஷாட் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் எங்களாலும் எடிட் செய்து ஸ்க்ரீன்ஷாட், ஆடியோ வெளியிட முடியும் என்று சம்யுக்தா விஷ்ணுகாந்த்க்கு பதில் கொடுத்திருக்கிறார்.

 Vishnu Kanth Chatting for Sunny Leone Screenshot posted by Samyuktha

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகர்கள் ஆன விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த சின்னத்திரை தம்பதிகள் திருமணம் முடிந்து சில நாட்களுக்குள் கருத்து வேறுபாடல் பிரிந்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு மேலாக இவர்கள் இணையதளத்தை குத்தகைக்கு எடுத்தது போல இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். எந்த பக்கம் திரும்பினாலும் இவர்களுடைய செய்திகள் தான் வலம் வருகிறது.

தன் மீது தவறில்லை என்று இருவரும் மாறி மாறி அடுத்தவர்கள் மீது யாரும் எதிர்பார்க்காத பல குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இதில் யார் பக்கம் சரி யாரு பக்கம் தவறு என்று புரிந்து கொள்ள முடியாமல் ரசிகர்களும் புலம்பி கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இவர்களுடைய புது புது ரகசியங்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

 Vishnu Kanth Chatting for Sunny Leone Screenshot posted by Samyuktha

இந்த நிலையில் சம்யுக்தாவிடம் ரசிகர் ஒருவர் கமெண்டில் கேள்வி கேட்டு இருக்கிறார். அதில் சம்யுக்தா உங்களை எதுக்காக விஷ்ணுகாந்த் கல்யாணம் பண்ணுனாருன்னு இப்பதான் தெரியுது. அவர பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சதால அவரை யாரும் மேரேஜ் பண்ணல. அதனாலதான் உங்கள பொய் சொல்லி கல்யாணம் பண்ணி யூஸ் பண்ணி த்ரோ பண்ணிட்டார் கரெக்டா? என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

அதற்கு சம்யுக்தா அவனுக்கு ஒரு பொண்ணு கூட எங்கேஜ்மென்ட் வரைக்கும் போய் நின்னுடுச்சு. அந்த பொண்ணு என்ன புண்ணியம் பண்ணிச்சோ தெரியல. அந்த பெண் தப்பிச்சிட்டு, நான் மாட்டிக்கிட்டேன். இந்த லூசு கிட்ட இனி எந்த பொண்ணு பலியாக போகுதோ? அந்த காம காட்டேரி கிட்ட... என்று பதில் கொடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து இருக்கிறார்.

இதை ஸ்கிரீன்ஷாட் ஆக எடுத்து விஷ்ணுகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, உங்களுக்கு அடுத்த ஸ்டோரிய பார்த்தா யாரு காம காட்டேரின்னு தெரியும் என்று கூறி, சம்யுக்தா அக்கவுண்டில் இருந்து இன்னொரு நபரிடம் பேசியது போன்ற ஒரு ஸ்கிரீன்ஷாட் பகிர்ந்திருக்கிறார்.

 Vishnu Kanth Chatting for Sunny Leone Screenshot posted by Samyuktha

அதில் ஒரு நபரிடமிருந்து சம்யுக்தாவிற்கு, எருமை உனக்கு சோறு கிடையாது போடி என்று கூறப்பட்டிருக்கிறது. அதற்கு சம்யுக்தா போட்டோ வச்ச அக்கவுண்டில் இருந்து, எனக்கு சோறு தேவையில்லை. நீ போதும் உன்னை சாப்பிடுகிறேன் என்று கூறப்பட்டிருக்கிறது. அதற்கு குறிப்பிட்ட அந்த ஐடியில் இருந்து, ஐயோ எனக்கு இது போதும், எனக்கு இது போதும் என்று கூறப்பட்டிருக்கிறது.

அதற்கு சம்யுக்தா போட்டோ வைத்த ஐடியில் இருந்து இதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வச்சுக்கோ. ஒரு வருஷம் கழிச்சு அனுப்பு பார்த்து சிரிச்சுக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதை பகிர்ந்த விஷ்ணுகாந்த் இது பப்பி லவ்வின் சாம்பிள் தான் என்று கூறி இருக்கிறார். மேலும் எல்லோரும் இந்த ஸ்க்ரீன் ஷாட்டை பார்த்து சம்யுக்தா யாரு கூட சேட் பண்ணுனாங்கனு கேக்குறீங்க.

ஆனா அவங்க நேம் இப்போ சொல்ல விரும்பல. ஆனா அவரும் அந்தப் பொண்ணால பாதிக்கப்பட்டவங்க தான். காலம் பதில் சொல்லும் என்று விஷ்ணுகாந்த் இன்னொரு ஸ்டோரியில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் விஷ்ணுகாந்த் வெளியிட்ட இந்த ஸ்க்ரீன் ஷாட்டை பாத்தீங்களா? என சம்யுக்தாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு சம்யுக்தா ஆமா பார்த்தேன்.

v

இன்னும் நான் நிறைய எக்ஸ்பர்ட் பண்ணுறேன். இது பத்தல, ஃபேக்கா, சாட் ப்ரூப் ஆடியோ ப்ரூப் என்னால இப்போ நினைச்சாலும் ரெடி பண்ணி மீடியால இவன அசிங்கப்படுத்த முடியும். இவன் எவ்வளவுக்கு எவ்வளவு பண்றானோ அது எனக்கு இப்ப பிராஃபிட் தான். சீக்கிரமே இதுக்கு ஒரு முடிவு வரப்போகுது. ஜஸ்ட் வெயிட் அண்ட் வாட்ச் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் சம்யுக்தா இப்போது லேட்டஸ்ட் ஆக ஒரு ஸ்கிரீன்ஷாட் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் விஷ்ணுகாந்த் நடிகை சன்னி லியோனின் அக்கவுண்ட்டிருக்கு சேட் செய்வது போன்று இருக்கிறது.சன்னி லியோன் போட்டோ வைத்த அக்கவுண்ட்டிருக்கு விஷ்ணுகாந்த் போட்டோ வைத்த அக்கவுண்டில் இருந்து, ஹாய் சன்னி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அனுப்பப்பட்டிருக்கிறது.

அதைத்தொடர்ந்து சன்னி லியோன் போட்டோ வச்ச அக்கவுண்டில் இருந்து, ஐ லவ் யூ டார்லிங் என்று பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு விஷ்ணுகாந்த் ஃபோட்டோ வைத்த ஐடியில் இருந்து, ஐ லவ் யூ சன்னி என்று அனுப்பப்பட்டிருக்கிறது.அதற்கு சன்னி லியோன் அக்கவுண்டில் இருந்து லவ் யூ டூ என்று அனுப்பப்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து விஷ்ணுகாந்த் ஃபோட்டோவை வைத்த ஐடியில் இருந்து வில் யு மேரி மீ என்று கேட்க, அதற்கு சன்னிலியோன் அக்கவுண்டில் இருந்து எஸ் என்று பதில் சொல்வது போல இருக்கிறது. இந்த ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்த சம்யுக்தா எனக்கு இந்த ஸ்க்ரீன் ஷாட்டை சன்னி லியோன் சென்ட் பண்ணுனாங்க மிஸ்டர் விஷ்ணுகாந்த். என்ன நீங்க சன்னிலியோனுக்கே மெசேஜ் பண்ணி இருக்கீங்க? எடிட் பண்றது எப்படின்னு எங்களுக்கும் தெரியும் என்று கலாய்த்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+