தாய்மாமன் மடியிலே.. விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் வைத்த அழகான பெயர்.. உருக்கமான பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் முன்னாள் பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை விஷ்ணு விஷால் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த குழந்தைக்கு இப்போது நடிகரும் விஷ்ணு விஷாலின் நண்பருமான அமீர் கான் பெயர் சூட்டி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை விஷ்ணு விஷால் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து நெகிழ்ந்து இருக்கிறார்.

தீவிரமான கிரிக்கெட் வீரரான விஷ்ணு விஷால் தமிழில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. இந்த திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் நடித்த சூரி இப்போது மிரட்டல் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல இவரும் சினிமாவில் வளருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vishnu Vishal Aamir Khan

முதல் திரைப்படத்தில் கபடி விளையாட்டு வீரராக விஷ்ணு விஷால் நடித்தார் என்பதை விடவும் வாழ்ந்தார் என்று சொல்லலாம். அந்தத் திரைப்படத்தில் கடைசியில் அவருடைய எதிர்பாராத மரணம் ரசிகர்களை ரொம்பவும் பீல் பண்ண வைத்தது. அதற்கு பிறகு ஒவ்வொரு திரைப்படங்களிலும் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற படங்கள் இவருக்கு அடுத்தடுத்து ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அந்த போல ஆரம்பத்தில் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2011 ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆரியன் என்ற மகனும் இருக்கிறார். சில ஆனால் சில வருடங்களில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்த நிலையில் தான் பேட்மிட்டன் வீராங்கனை ஆன ஜூவாலாவை இரண்டாவதாக விஷ்ணு விஷால் காதலித்து கடந்த 2021 ஆம் ஆண்டு எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

விஷ்ணு விஷால் இரண்டாவது திருமணம் செய்தது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த தம்பதிக்கு இப்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதுவும் ஜுவாலாவின் பிறந்தநாளில் தான் விஷ்ணு விஷால் திருமணமும் நடைபெற்றது, அதே நாளில் இப்போது அவர்களுக்கு குழந்தையும் பிறந்திருந்தது. அந்த மகிழ்ச்சி செய்தியை விஷ்ணு விஷால் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று விஷ்ணு விஷால் குழந்தைக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் பெயர் சூட்டி இருக்கிறார். இவர்களுக்குள்ளான நெருங்கிய நட்பு குறித்து விஷ்ணு விஷால் புகைப்படங்களையும் போஸ்ட்டும் வெளியிட்டு இருக்கிறார். விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் குடும்பம் ஒன்றாக சந்தித்து குழந்தைக்கு பெயர் சூட்டி இருக்கிறார்கள். அதாவது அந்த குழந்தைக்கு "மிரா" என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அந்தப் பெயருக்கு "அழகு, ஸ்மார்ட், அமைதி" என்று அர்த்தங்களை கொண்டதாம். "என் தேவதையே" என மகளின் வரவை கொண்டாடும் வகையில் விஷ்ணு விஷால் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+