Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமண நாளில் குழந்தை பிறந்தது.. பிஞ்சு கைகளை காட்டி உருக்கமாக விஷ்ணு விஷால் போட்ட போஸ்ட்.. குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் ஜுவாலா குட்டா என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருந்தார். இவருடைய நான்காவது திருமண நாளில் இன்று அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையின் கைவிரல்களை காட்டி அவர் மகிழ்ச்சியாக போஸ்ட் போட்டு இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்த திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் நடித்த சூரி இப்போது மிரட்டல் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல இவரும் சினிமாவில் அடுத்தடுத்து வளருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Vishnu Vishal

முதல் திரைப்படம்

முதல் திரைப்படத்தில் கபடி விளையாட்டு வீரராக விஷ்ணு விஷால் நடித்தார் என்பதை விடவும் வாழ்ந்தார் என்று சொல்லலாம். கடைசியில் அவருடைய எதிர்பாராத மரணம் ரசிகர்களை ரொம்பவும் பீல் பண்ண வைத்தது. அதற்குப் பிறகு அவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் பெரிய அளவில் பெயர் வாங்கியது. அதிலும் நீர் பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற திரைப்படங்கள் இவருக்கு அடுத்தடுத்து ஹிட் கொடுத்துக் கொண்டிருந்தது.

இரண்டாவது திருமணம்

அந்த நேரத்தில் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவருக்கு ஆரியன் என்ற மகனும் இருக்கிறார். சில ஆண்டுகளில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு 2017ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்த நிலையில் தான் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா வை இரண்டாவதாக விஷ்ணு விஷால் காதலித்து கடந்த 2021 ஆம் ஆண்டு எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

குழந்தையின் புகைப்படம்

விஷ்ணு விஷாலின் இரண்டாவது திருமணம் அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. ஜுவாலாவின் பிறந்தநாளில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. இப்போது அதே திருமண நாளில் இவர்களுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது. அந்த மகிழ்ச்சி செய்தியை விஷ்ணு விஷால் அறிவித்திருக்கிறார். தனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில் தன்னுடைய முதல் மகன் ஆரியன் அந்த குழந்தையின் கை விரல்களை கொஞ்சி விளையாடியபடி அழகாக சிரித்துக் கொண்டிருக்கிறார். அந்த க்யூட்டான புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+