டாப் இயக்குநர்கள் விசு, மௌலி! இருவருக்கும் இடையே இப்படி ஒரு பிளாஷ்பேக்கா? சுவாரஸ்யம்!
சென்னை: இயக்குநர்கள், நடிகர்கள் விசுவும் மௌலியும் தமிழ்த் திரையுலகில் கிடைக்க முடியாத ஆசான்கள்.
இதுகுறித்து செல்வன் அன்பு தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மௌலி மற்றும் விசு... சிறந்த தமிழ் இயக்குனர்கள்... மன்னன்னு ஒரு படம். அதுல நாயகி ஒரு திமிர்ப் பிடிச்ச பொண்ணு. அந்தப் பொண்ணோட அப்பா விசு. பிஸ்தான்னு ஒரு படம். அதுல நாயகி பணக்காரத் திமிர் பிடிச்ச பொண்ணு. அதுல நாயகியோட அப்பா மௌலி. இப்படி இரண்டு பேருமே நிறைய விஷயங்களில் ஒரே மாதிரி இருப்பது ஆச்சர்யமான விஷயம்.

விசு, மௌலி இருவருமே நாடகத்தில் இருந்து வந்தவர்கள்....நாடகம் தான் அவர்களின் முதல் சொத்து... பிறகுதான் சினிமா...இவர் மணலை கயிறாக திரிப்பார். அவர் புல்லாங்குழலால் அடுப்பு ஊதுவார். இருவருமே சிறந்த திரைக்கதை ஆசிரியர்கள்....குடும்ப வாழ்க்கையை கதைகளில் ஒருவர் சீரியஸாக அணுகினால் மற்றவர் காமெடியாக அணுகுவார்... மௌலி பள்ளி காலத்திலிருந்து கிரிக்கெட் விளையாடக் கூடியவர்..... அவர் விசுவின் தம்பி கிஷ்முவின் பள்ளி தோழன்.... ஆனால் அலைவரிசை ஒத்துப் போனது என்னவோ கிஷ்மூவின் அண்ணன் விசுவோடு தான்...
மௌலி கிரிக்கெட் கேம் விளையாட பணம் தேவைப்பட இசை நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்தார்கள். அது முடிந்ததோ நாடகம் நடத்த எனும் முடிவில்.. தொடக்கத்தில் நாடகம் போட ஸ்ரீதரின் ரத்தப் பாசம் நாடகத்தை வாங்கி அதை நாடகமாகப் போட்டனர். அது தொடர முடியாமல் அப்படி நாடகம் எழுதி தீர்மானித்து மௌலி எழுதத் தொடங்கினார்.
விசு வேலை செய்த ட்ராவல் ஏஜன்சியில் விசுவை பாசஞ்சர்களை ரிஸீவ் செய்ய ஏர்போர்ட்டுக்கு அனுப்புகிறார்கள். விசுவோடு ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து கொண்டு மௌலியும் பயணித்து ஏர்போர்ட் லவுஞ்சில் உட்கார்ந்திருக்கிறார் மௌலி. அப்போது அவர் பார்த்த ஆட்களின் பாவனைகளை பார்த்து மௌலி எழுதிய முதல் நாடகம் தான் ஃப்ளைட் 172.
அதன் வெற்றியின் மூலம் சிறந்த நாடகாசிரியராகிறார் மௌலி. இதன் பின்னால் நடிகை சச்சு ஒரு முறை தனக்காக ஒரு நாடகம் எழுதி கேட்க, மௌலியின் வேலை, நாடக நடிப்பு போன்ற பிஸிக்கிடையில் எழுத முடியாமல் கதையை மட்டும் சொல்லி விசுவை எழுதச் சொல்கிறார். அப்படி விசு எழுதிய நாடகம் ஹிட்டாக விசு தன் அண்ணன் ராஜாமணி, தம்பி கிஷ்மு மற்றும் நண்பர்களோடு நாடகக் கம்பெனி தொடங்குகிறார்.
இரு பெரும் நாடகக் கதாசிரியர்கள் தங்களை அறியாமல் மற்றவர்களின் வளர்ச்சிக்கு காரணமாகிறார்கள். பின் இருவருமே பாலச்சந்தரிடம் கற்று விசு தமிழ் சினிமாவிலும், மௌலி தெலுங்கு சினிமாவிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை பெறுகிறார்கள். விசு ஏற்றெடுத்த பாத்திரங்களும், அதேப்போல் மௌலி நடித்த பாத்திரங்களும் தமிழ் சினிமாவில் அப்போது மறக்க முடியாதவை.
இயக்குனர் மகேந்திரன் 'ஹிட்லர் உமாநாத்' என்கிற கதையை எழுதினார். அதன் திரைக்கதை, வசனத்தை எழுதியவர் மௌலி. இந்தப் படத்தை தெலுங்கில் சில மாற்றங்கள் செய்து ரீமேக் செய்தார்கள். 'தர்மாத்முடு' என்கிற அப்படம் தெலுங்கில் நன்றாக ஓடியது.
அந்தக்கதையை ஏவிஎம் வாங்கி ஒரு இயக்குனரை அழைத்துக்காட்ட அவரும் "நல்ல கதை. சில மாற்றங்கள் செய்தால் வெற்றி நிச்சயம்" எனச்சொல்ல நீங்களே திரைக்கதை, வசனம் எழுதுங்கள் எனச்சொல்ல அவரே எழுதி அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
அப்படம் நல்லவனுக்கு நல்லவன். அதை எழுதியது விசுவே தான். மௌலியால் எழுத அழைக்கப்பட்டு மௌலியின் தோல்வியடைந்த திரைக்கதையை வெற்றித் திரைக்கதையாக மாற்ற விசுவால் முடிந்தது தான் காலம் இரண்டு நண்பர்களிடம் செய்த ஆச்சர்யம்.... விசு-மௌலி இனிமேல் தமிழ்த் திரையில் கிடைக்க முடியாத ஆசான்கள்... இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications