மணிமேகலை என் தங்கச்சி தான்.. எவ்வளவோ கஷ்டம் வந்திருக்கு! எமோஷனலாக பேசிய விஜே அஞ்சனா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான விஜே அஞ்சனா பேட்டி ஒன்றில் பேசும்போது மணிமேகலை பற்றி பேசி இருக்கிறார். அதோடு மணிமேகலையும் அஞ்சனாவும் சகோதரிகளா என்று பரவி வரும் கேள்விகளுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பொதுவாக ஒரு சிலரை பார்க்கும்போது இவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று தோன்றும், அதிலும் ஒரு சிலர் இவங்க நமக்கு சொந்தக்காரங்களா என்று பீல் கொடுப்பார்கள். அதுபோல பலருக்கும் பரிட்சயமான தொகுப்பாளினி வி.ஜே அஞ்சனாவும் ஒருவர். விஜே அர்ச்சனாவே பல வருடங்களாக 90ஸ் ரசிகர்கள் பார்த்து வந்தாலும் அப்போ பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கிறாரே அவருக்கு மட்டும் வயதே ஆகாதா என்பது பலருடைய கேள்வி.

விஜே அஞ்சனா வயது
ஆனால் விஜே அஞ்சனாவுக்கு இப்போது 35 வயது ஆகிறது. ஆரம்பத்தில் சன் மியூசிக்கில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய அஞ்சனா அதற்குப் பிறகு சன் டிவியில் 10 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளனியாக இருந்தார். இப்போது டிவி நிகழ்ச்சிகளில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும் பட பிரமோஷன், பட இசை வெளியீட்டு விழா போன்ற பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
மணிமேகலை சகோதரி
அதுபோல சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதுபோல அஞ்சனாவை பார்க்கும் பல ரசிகர்கள் இவரும் மணிமேகலையும் அக்கா தங்கச்சியா..? இருவரும் ஒன்றுபோலவே இருக்கிறார்களே என்று கேள்விகளும் எழுந்து வருகிறது.

அஞ்சனா விளக்கம்
இது குறித்து பேட்டி ஒன்றில் அஞ்சனா பேசுகையில் என்னிடம் பலர் இதே கேள்வியை கேட்கிறார்கள். நீங்களும் மணிமேகலையும் சகோதரியா? என்று கேட்பார்கள். நான் இல்லைங்க என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். உங்களை பார்த்தாலே அப்படித்தான் தெரிகிறது நீங்க எதற்காக பொய் சொல்லுறீங்க என்று கேட்கிறார்கள். எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியாது.
குடும்ப சுமை
ஒரு கட்டத்தில் ஆமா மணிமேகலை என்னுடைய தங்கச்சி தான் என்று நானே சொல்லி இருக்கிறேன். அதுபோல என்னுடைய வாழ்க்கையில் நான் பல கஷ்டங்களை பட்டிருக்கிறேன். அப்பாவின் இறப்பிற்கு பிறகு குடும்பத்தை சுமந்து செல்லும் பெரிய சுமை என்னை நோக்கி வந்தது. அதை தாங்கிக் கொண்டு என்னுடைய திருமண வாழ்க்கையில் அதிலும் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

கயல் சந்திரன்
என்னுடைய கணவர் சந்திரன் எனக்கு பல உதவிகள் செய்து கொண்டிருக்கிறார். என்னைப் பற்றி எத்தனையோ வதந்திகளும் பிரச்சனைகளும் வந்தாலும் கூட அவர் எனக்கு சப்போர்ட்டாக இருக்கிறார். அதுபோல என்னுடைய குடும்பத்தினரும் என்னை முழுமையாக நம்புகிறார்கள்.
கணவர் உதவி
அவர்களால் தான் நான் இத்தனை வருடங்களாக மீடியாவில் நிலைத்து நிற்க முடிகிறது என்று அஞ்சனா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதுபோல அஞ்சனாவின் கணவர் சந்திரன் வேறு யாரும் இல்லை கயல் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான கயல் சந்திரன் தான். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சத்தியம் புரொடக்ஷனில் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.
மணிமேகலையின் மாற்றம்
கயல் சந்திரன் மற்றும் அஞ்சனா இருவரும் காதலித்து கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. அதுபோல மணிமேகலை பல வருடங்களாக விஜய் டிவியில் பணியாற்றி இருந்தாலும் கடந்த வருடத்தில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறி இருந்தார். இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications