கல்லூரி விழாவில் பாத்ரூம் டூர் என்று கலாய்த்த மாணவர்கள்.. விஜே அர்ச்சனாவின் எதிர்பாராத பதில்
கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அர்ச்சனாவை மாணவர்கள் சிலர் பாத்ரூம் டூர் என்று கலாய்த்து இருக்கின்றனர்.
சென்னை: சமீபத்தில் விஜே அர்ச்சனா கல்லூரி பங்க்ஷனில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார்.
அப்போது அங்கிருந்த சில மாணவர்கள் அர்ச்சனாவின் பாத்ரூம் டூர் பற்றி கலாய்த்து இருக்கின்றனர்.
அதற்கு பதிலடி கொடுத்து, தான் இந்த மாதிரி ட்ரோல்களை எல்லாம் கடந்து உங்கள் முன்பு கெத்தாக இருக்கிறேன் என்று தைரியமாக பேசியிருக்கிறார்.

பரிட்சயமான தொகுப்பாளர்
தொகுப்பாளர்கள் என்று சொன்னதும் ஒரு சிலருடைய முகங்கள் தான் டக்கென்று மனதில் வந்துவிடும். அந்த வகையில் ஒரு நபராக இருப்பவர்தான் விஜே அர்ச்சனா. இவர் மட்டுமல்லாமல் இவருடைய மகளும் தற்போது விஜேவாக களம் இறங்கி இருக்கிறார். ஜீ தமிழில் தொகுப்பாளராக பல வருடங்கள் தொடர்ந்து பணியாற்றிய அர்ச்சனா பிக் பாஸ் தமிழ் சீசன் நான்காவது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜய் டிவியில் அறிமுகமானதும் பலருக்கும் வியப்பாக இருந்தது.

பிக் பாஸில் அறிமுகம்
தொகுப்பாளர்களில் அதிகமான ரசிகர்களை கொண்ட ஒரு நபராக இருந்து வந்த அர்ச்சனா இந்த நிகழ்ச்சியில் அறிமுகமானதும் இனி நிகழ்ச்சி சூடு பிடிக்கப் போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இவருடைய செயல்பாட்டை பலர் வெறுக்க தொடங்கி விட்டனர். இவருக்கு அதிகமான நெகட்டிவர்ஸ் உருவாக தொடங்கியதும் இவர் என்ன செய்தாலும் அதை வைத்து ஒவ்வொரு வாரமும் மீம்ஸ் வெளியிட்டு கலாய்த்து கொண்டிருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர் அர்ச்சனாவுக்கு அதிகமான ஹெட்டர்சஸ்கள் உருவாகி இருக்கின்றனர்.

பரபரப்பு ஏற்படுத்திய வீடியோ
இந்த நிலையில் விஜே அர்ச்சனா ஒரு youtube சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். அதில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இந்த youtube சேனலில் தன்னுடைய மகள் மற்றும் தங்கையோடு சேர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இவருடைய youtube சேனலில் பாத்ரூம் டூர் வீடியோ ஒன்று வெளியானது. இது அதிகமான விமர்சனங்களை பெற்று வந்தது. இந்த வீடியோவை வைத்து பலரும் ட்ரோல் செய்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது அர்ச்சனா கல்லூரி விழா ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக சென்று இருக்கிறார்.

கேள்வியும் அதற்கான பதிலும்
அப்போது அவர் Wow life என்று சொன்னதும், அங்கிருந்த ஒரு மாணவர், டே பாத்ரூம் டூர் டா! அப்படின்னு சொல்லி இருக்கிறார். அப்போது பாத்ரூம் காண்பிப்பது தவறு கிடையாது. உன் பாத்ரூம் காட்டுகிற நிலையில் இருந்தால் கண்டிப்பாக காட்டலாம் என்று கற்றுக் கொடுத்தது எனக்கு இந்த கல்லூரி தான். நான் பாத்ரூம் காண்பிப்பதை பற்றி அசிங்கப்பட்டது கிடையாது. நான் எப்படி மலம் கழிக்கிறேன் என்பதை காண்பிக்கவில்லை. நான் பாத்ரூமில் எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை தான் காண்பித்தேன். ஏனென்றால் உங்கள் படுக்கை அறையில் தான் பாத்ரூமில் இருக்கிறது. எனவே அதை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை தான் நான் சொன்னேன். நான் விரும்புவதை செய்யும் தைரியத்தை எனக்கு கொடுத்தது இந்த கல்லூரி தான். எனக்கு வரும் கேலி கிண்டல்கள் அதிகமான பேச்சுக்களை எல்லாம் தாண்டி தற்போது சிங்கப்பெண் போன்று, இன்று என்னவென நீங்க கதறுங்கடா நான் என்னுடைய வேலையை செய்கிறேன் என்று கெத்தை கொடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி என்று கூறி இருக்கிறார்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
சரிகமபா திவினேஷுக்கு நெப்போலியன் கொடுத்த சர்ப்ரைஸ்.. அமெரிக்காவில் நெகிழ்ந்த குடும்பம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications