8 வயசுல சாராவுக்கு நடந்த பயங்கரம்.. உயிர் பிழைச்சதே அதிசயம்.. அவ்ளோ பேசுனாங்க! விஜே அர்ச்சனா எமோஷனல்
சென்னை: முன்னணி தொகுப்பாளனியாக இருக்கும் அர்ச்சனா தன்னுடைய மகள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கண்கலங்க பேசியிருக்கிறார். அதில் தன்னுடைய மகள் சாரா 16 வயதில் அதிகமாக மெச்சூராக இருக்கிறார் என்று பலரும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி மெச்சூர் ஆக இருப்பதில் என்ன தப்பு இருக்கிறது? என்று அர்ச்சனா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதோடு சாரா இவ்வளவு மெச்சூர் ஆனதற்கு காரணம் அவள் சின்ன வயதிலே அனுபவித்த கொடுமைகள் தான். எட்டு வயதில் பயங்கரமான ஒரு சம்பவம் நடந்தது. அதில் சாரா உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்று எமோஷனலாக அர்ச்சனா பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் தொகுப்பாளினி என்று சொன்னதும் நினைவில் வருபவர்களில் முக்கியமானவர்தான் விஜே அர்ச்சனா. விஜே அர்ச்சனா மட்டுமல்லாமல் அவருடைய மகளும் ஒரு தொகுப்பாளினியாக இருக்கிறார். ஜீ தமிழில் சூப்பர்மாம் நிகழ்ச்சியை அர்ச்சனாவோடு சாராவும் தொகுத்து வழங்கி இருந்தார். அதே நேரத்தில் அம்மா எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பது போல அம்மாவுக்கு கொஞ்சம் கூட சளைக்காமல் ஒவ்வொரு இடத்திலும் தெளிவான உச்சரிப்போடு சாரா பேசிக் கொண்டிருக்கிறார்.
அதை ஒரு தரப்பினர் பாராட்டிக் கொண்டிருந்தாலும் இன்னும் ஒரு தரப்பினர் அதை வைத்தே கிண்டல் செய்து வருவதையும் காண முடிகிறது. இதனால் மனம் நொந்து போன அர்ச்சனா சமீபத்தில் ஒரு பேட்டியில் கண்கலங்க பேசியிருக்கிறார். அதாவது என்னுடைய மகளை குறித்து பலரும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். சாராவுக்கு 16 வயதில் அறுபது வயது பெண்ணுக்கு இருக்கக்கூடிய மெச்சூர் இருக்கிறது என்று கேட்கிறார்கள்.
அதற்கு நான் கேட்கும் கேள்வி ஒன்னே ஒன்னு தான். 60 வயதிலும் மெச்சூர் இல்லாமல் இருந்தால் தான் தப்பு. அது என்ன 16 வயதில் அதிகமாக மெச்சூராக இருக்கிறார் என்று எல்லோரும் கேட்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. அதே நேரத்தில் சாரா வாழ்க்கையில் அனுபவித்த கொடுமைகள் அதிகமானது. அவள் பிறந்த ஒன்பதாவது நாள் அவருடைய அப்பா ராணுவத்துக்கு வேலைக்கு போய்விட்டார். அதற்குப் பிறகு நானும் என்னுடைய அம்மாவும் தான் குழந்தையை பார்த்துக்கொண்டோம்
எந்த ஆண் துணையும் இல்லாமல் தான் நாங்கள் பெண் பிள்ளையை வளர்த்து வந்தோம். அதற்கு பிறகு எட்டு வயதில் ஒரு பயங்கரமான ஆபரேஷன் சாராவுக்கு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் சாரா உயிர் பிழைத்ததே பெரிய விஷயம். டாக்டர்கள் அவள் உயிர் பிழைக்கவே மாட்டாள் என்று சொல்லி இருந்தார்கள். ஆனாலும் அவள் போராடி அந்த நேரத்தில் உயிர் பிழைத்தார். அதற்கு பிறகு சமுதாயத்தில் அவள் பார்க்கும் விஷயங்கள் அவ்வளவு வலி நிறைந்ததாக இருக்கிறது.

நான் தொகுப்பாளினியாக வேலைக்கு சேர்ந்து புதியதில் எங்கள் குடும்பத்தை சார்ந்த பலர் எங்களை எவ்வளவு கேவலமாக பேசினார்கள் என்று எனக்கு தான் தெரியும்.. ஒரு பொம்பள புள்ள பவுடரை பூசிக்கிட்டு வெக்கமே இல்லாம இப்படி கேமரா முன்பு நிக்குதுன்னு சொன்னாங்க. ஆனால் அவர்கள் இன்று ஒரு செல்பி எடுக்கட்டுமா என்று கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.
அந்த மாதிரி சமுதாயத்தில் எத்தனையோ பேர் ஒரு பெண்கள் வெளியே வேலைக்கு போனால் பலவிதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து வளரும் சாரா அதற்கு தகுந்த மாதிரி அறிவோடு இருக்கிறார். அதுதான் பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது என்று அந்த பேட்டியில் அர்ச்சனா பேசியிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications