சைந்தவி என்னோட சின்ன பொண்ணு தான்.. ஆனால் சரிகமபவில் இப்படித்தான் இருப்பாங்க.. Vj அர்ச்சனா ஓபன்
சென்னை: தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனா பாடகி சைந்தவி குறித்து சில விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். சைந்தவி பல பாடல்கள் பாடி இருந்தாலும் சரிகமப நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும்போது அவர் கேமராவுக்கு தெரியாமல் எப்படி நடந்து கொள்வார் என்று பல விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக அர்ச்சனா பகிர்ந்து இருக்கிறார்.
விஜே அர்ச்சனா பல வருடங்களாகவே சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருக்கிறார். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று பல சேனல்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். 90ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கும் அர்ச்சனா கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவார்.

அர்ச்சனாவிற்க்கு அதிகமான ரசிகர்கள் இருந்த நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதுதான் அவருக்கு நெகட்டிவ்வர்ஸ் உருவாக தொடங்கினர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட்டணி சேர்ந்து அர்ச்சனா விளையாடியது இப்ப வரைக்கும் பலராலும் விமர்சிக்கப்படுகிறது. அதே நேரத்தில் youtube சேனல்களில் அர்ச்சனா மற்றும் அவருடைய மகள் வெளியிட்ட பாத்ரூம் வீடியோவும் பலரால் பேசப்பட்டது.
ஆனாலும் தன்னை பற்றி வரும் நெகட்டிவ் கருத்துகளை எல்லாம் கண்டுகொள்ளாத அர்ச்சனா அடுத்தடுத்து தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பாடகி சைந்தவி குறித்து பேசி இருக்கிறார். சைந்தவி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். அதே நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அர்ச்சனா இருக்கிறார்.
இந்த நிலையில் அர்ச்சனா பேசுகையில் சைந்தவி என்னோட சின்ன பொண்ணுதான். அஞ்சு ஆறு வயது கம்மியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் சைந்தவி அந்த இடத்தில் இருக்கிறார் என்றால் அங்கு அவ்வளவு எனர்ஜி இருக்கும். துறுதுறுவென ஓடிக்கொண்டே இருப்பார். ஒரு இடத்தில் கூட சைந்தவி இருக்க மாட்டார். நாம இவ்வளவு பாடல் பாடி இருக்கிறோம் நமக்கு எவ்வளவோ ரசிகர்கள் இருக்கிறார்களே நாம் ஏன் இப்படி சின்ன சின்ன வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும் என்று சைந்தவி யோசிக்கவே மாட்டார்.

சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் கடைநிலை ஊழியர்கள் வரை எல்லோரிடமும் சைந்தவி நன்றாகவே பேசுவார். அதுபோல
மரியாதையாகவும் பேசுவார். நிகழ்ச்சியில் ஒரு முடிவு எடுக்கப் போகிறார் என்றால் அது பற்றி அவரோடு இருக்கும் நடுவர்களிடம் முதலில் பேசிவிட்டு தான் சைந்தவி தன்னுடைய முடிவை வெளியே சொல்வார்.
எந்த முடிவையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று சைந்தவி முடிவெடுக்க மாட்டார். அவருடைய நடவடிக்கைகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். நானும் அவருடைய நடவடிக்கைகளை கவனித்திருக்கிறேன். எந்த இடத்திலும் பந்தாவோ திமிரோ தெரியாது என்று சைந்தவி குறித்து அர்ச்சனா பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications