விஜய் டிவி சீரியல் நடிகரோடு ஜோடி சேருகிறாரா அர்ச்சனா? அவரே வெளியிட்ட க்ளூ.. இதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் அருண் தற்போது எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஒரு பெண்ணோடு போட்டிங் போகும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

அதேபோல சீரியல் நடிகையாகவும் பிக் பாஸ் பிரபலமாகவும் பலருக்கும் பரிட்சயமான அர்ச்சனாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தான் புதியதாக நிகழ்ச்சி ஒன்றில் இணைந்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

VJ Archana and bharathi kannamma serial arun new project

தொகுப்பாளராக அறிமுகம் ஆகி ராஜா ராணி சீரியலின் மூலம் நடிகையாக கலக்கிய அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரையும் வியக்க வைத்திருந்தார். இவருடைய பாடல்கள் ரசிகர்களுக்கு ரொம்ப மிகவும் பிடித்திருந்தது. அதனாலேயே இவருடைய குரலை பலரும் பாராட்டி வந்தனர். அதே நேரத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டது பலருடைய பாராட்டுகளை பெற்று வந்தது.

VJ Archana and bharathi kannamma serial arun new project

ஒரு சிலருடைய விமர்சனங்களையும் பெற்று வந்தது. இப்படியான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற தேடல் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இன்னொரு நபரோடு நிற்பது போன்ற நிழல் மட்டும் காட்டி "நியூ ப்ராஜெக்ட்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் அந்த நிழல் படத்தில் அர்ச்சனா பக்கத்தில் நிற்கும் நபர் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் அருண் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் அருண் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பெண்ணோடு போட்டிங் போவது போன்று பேக் சைட் போட்டோவை பகிர்ந்து இருக்கிறார். அதோடு புதிய தொடக்கம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதனால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று ஒரு வதந்தி சில வருடங்களுக்கு முன்பே பரவி வந்தது. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்துவதற்காக இவர்கள் இப்படி ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார்களா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அல்லது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் பிரபலமடைந்த அர்ச்சனா புது ப்ராஜெக்டில் தான் கமிட்டாகி இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்துவதற்காக இப்படி போஸ்ட் போட்டிருக்கிறாரா? அல்லது பக்கத்தில் இருப்பது அவருடைய காதலரா என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இது குறித்து அர்ச்சனாவோ அல்லது பாரதி கண்ணம்மா சீரியல் அருணோ எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் புதியதாக எந்த சீரியலிலும் இணைந்தது போல தெரியவில்லை. ஆனால் ஒருவேளை ஏதாவது ஷார்ட் பிலிம் ஆக இருக்கலாம் அல்லது திரைப்படத்திற்காக இவர்கள் இருவரும் இப்படி போஸ்ட் போட்டிருக்கிறார்களா? என்பதும் சந்தேகத்தை கிளப்புகிறது. அதே நேரத்தில் அர்ச்சனா சில தினங்களுக்கு முன்பு ஏற்காட்டில் ஒரு ரெஸ்டாரண்டில் தான் இருப்பதாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதே நேரத்தில் அருணும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரை மற்றும் ஏற்காட்டில் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்களின் சந்தேகத்துக்கு மேலும் தீனி போடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+