VJ அர்ச்சனாவிற்கும், மகளுக்கும் மார்க் போட்ட பிக் பாஸ் பிரபலம்.. என்ன சொல்லி இருக்காங்க பாருங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுப்பாளர் அர்ச்சனாவின் மகள் சாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடையதும் தன்னுடைய அம்மாவின் இளம் வயது புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.

அதற்கு அர்ச்சனா மற்றும் அவருடைய மகள் இருவருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக் பாஸ் பிரபலம் ஒருவர் மார்க் கொடுத்து இருக்கிறார். அதற்கு அர்ச்சனா மற்றும் சாரா கொடுத்த பதில் குறித்து விரிவாக பார்க்கலாம்.

VJ Archana and her daughter are marked by Bigg Boss celebrity

ஜீ தமிழில் செல்லப்பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு பல வருடங்களாக ஜீ தமிழில் தொகுப்பாளராக இருக்கும் அர்ச்சனாவை தெரியாதவர்களை இருக்க முடியாது. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளர்களில் ஒருவராக இப்ப வரைக்கும் அர்ச்சனா இருந்து வருகிறார்.

அதிகமான ரசிகர்களை பெற்றிருந்த அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் அவருடைய கேரக்டர் குறித்தும் அவருடைய செயல்பாடுகள் குறித்தும் விமர்சனத்திற்கு உள்ளானது அனைவருக்கும் தெரியும். அதனாலேயே அர்ச்சனாவிற்கும் அவருடைய மகள் சாராவிற்கும் அதிகமான நெகட்டிவ் ரசிகர்கள் அதிகரித்தனர்.

அந்த நேரத்தில் அர்ச்சனா மற்றும் அவருடைய மகன் சாரா இருவரும் youtube சேனல்களில் தொடர்ச்சியாக வெளியிட்ட வீடியோக்களும் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து இருவரும் அதற்கு விளக்கம் கொடுத்து இருந்தாலும், இப்ப வரைக்கும் சில ரசிகர்கள் அர்ச்சனாவின் பாத்ரூம் டூர் வீடியோ குறித்து கேள்வி கேட்டு வர தான் செய்கிறார்கள்.

தனக்கு எதிராக வரும் நெகட்டிவ் கமெண்ட்களையும் கருத்துகளையும் கண்டுகொள்ளாத அர்ச்சனா அடுத்த கட்ட வாழ்க்கையில் முன்னேறி போய்க்கொண்டே இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அர்ச்சனா இப்போது மீண்டும் ஜீ தமிழ் நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்.

VJ Archana and her daughter are marked by Bigg Boss celebrity

இந்த நிலையில் சாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படம் ஒன்றும் அதே உடையில் இருக்கும் அர்ச்சனாவின் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். அதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா உடன் கலந்து கொண்ட பிரபலமான நடிகர் சோம், அர்ச்சனா மற்றும் சாராவிற்கு மார்க்க கொடுத்திருக்கிறார். அதாவது அர்ச்சனாவிற்கு ஒரு மார்க் என்றும் சாராவுக்கு ஜீரோ என்றும் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்.

அதற்கு சாரா, "ஐ ஹேட் யூ சாம்" என்று பதில் கொடுத்து இருக்கிறார். அதற்கு அர்ச்சனா "ஐ லவ் யூ சாம்" என்று கூறியிருக்கிறார். இப்படியாக இவர்கள் கொடுத்த பதில்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+