லைவில் குடும்பத்தை பற்றி கணவர் பேசிய வார்த்தையால் கதறி அழுத விஜே அர்ச்சனா..இதனால் தான் அந்த முடிவா?
விஜே அர்ச்சனா தன்னுடைய கணவர் தன்னைப் பற்றியும் பேசியதை கேட்டு கதறி அழுத வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
சென்னை: தொகுப்பாளர் அர்ச்சனா சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒரு மாதத்திற்கு முன்பு தன்னுடைய கணவரும் தானும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்தோம் என்றும் அதற்குப் பிறகு அந்த முடிவை நாங்கள் விட்டு விட்டோம் என்று கூறியிருந்தார்.
தங்களுடைய முடிவு மாறியதற்கு காரணம் தன்னுடைய மகள் கேட்ட ஒரே கேள்வி என்றும் உருக்கமாக விஜே அர்ச்சனா கூறி இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் விஜே அர்ச்சனா பேட்டி ஒன்று கொடுத்துக் கொண்டிருக்கும்போது லைவில் அவருடைய கணவர் பேசிய வார்த்தையை கேட்டு கண் கலங்கி அழுது இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கலகலப்பான அர்ச்சனா
சன் டிவியில் காமெடி டைம் நிகழ்ச்சியை மயில்சாமி உடன் தொகுத்து வழங்குவதில் அறிமுகமாகி பிரபலமானவர் அர்ச்சனா.இரவில் 10 மணிக்கு ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சியை அர்ச்சனாவிற்காகவே பார்க்கும் அளவிற்கு 90ஸ் இளைஞர்களை தன் அழகாலும்,இனிமையான பேச்சாலும் கவர்ந்து வைத்திருந்தவர் அர்ச்சனா. தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு சிறிது பிரேக் எடுத்தாலும் மீண்டும் விஜே வாக களம் இறங்கி தன்னுடைய திறமையாலும் பாசிட்டிவான ஆட்டிட்யூட்டாலும் சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தார்.

அன்பால் அடிபட்ட அர்ச்சனா
அர்ச்சனாவின் அருமை பெருமைக்கெல்லாம் ஆப்பு வைத்தாற் போல் அமைந்தது பிக் பாஸ்4. பிக் பாஸ் ஷோ வில் சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவோடு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக கலந்து கொண்டவர் அர்ச்சனா. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் "அன்பு ஜெயிக்கும்னு நம்புரியா" என்று சொல்லிக்கொண்டு ரியோ, சோம்,அறந்தாங்கி நிஷா, கேபிரில்லா, ஜித்தன் ரமேஷ் போன்ற சக போட்டியாளர்களை ஒரு கூட்டமாக சேர்த்துக்கொண்டு இவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்களால் ரசிக்கப்படவில்லை. இவரது செய்கைகளால் "அன்பு கேங்க்" என்று அடைமொழி வைக்க ப்பட்டு கேங்கில் உள்ள மற்றவர்களை விட அர்ச்சனாவே ரசிகர்களின் வெறுப்புக்கும் விமர்சனத்திற்கும் உள்ளானார்.

விவாகரத்து முடிவு
இந்த நிலையில் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய கணவரோடு திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடி அந்த வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய திருமண நாளில் தன்னுடைய கணவர் பற்றி காதலோடு பதிவுகளையும் கொடுத்து இருந்தார். அந்த அளவிற்கு அவர் மீது பாசம் வைத்திருக்கும் நிலையில் திடீரென்று இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் பிரச்சினையின் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக முடிவு எடுத்து இருக்கிறார்கள். அந்த நேரத்தில் விஜே அர்ச்சனாவின் மகளான சாரா இருவரிடமும் பேசி இருக்கிறார். அப்போது இருவரிடமும் நீங்கள் ஒருவரை விட்டு ஒருவர் வாழ்ந்து விடுவீர்களா? என்று யோசித்துக் கொள்ளுங்கள் என்று கூறினாராம். அதற்குப் பிறகு அந்த முடிவை நாங்கள் விட்டு விட்டோம் என்று அர்ச்சனா கூறி இருந்தார்.

கணவரால் அழுகை
இந்த நிலையில் அவர் தன்னுடைய கணவரை பற்றி பேட்டியில் பேசிக் கொண்டிருக்கும் போதே லைவில் அவருடைய கணவர் அர்ச்சனாவால் தான் என்னுடைய வாழ்க்கையே மாறி இருக்கிறது. என்னுடைய அர்ச்சனா என்னை மட்டும் அல்லாமல் நான் அருகில் இல்லாமல் இருந்தாலும் என்னுடைய பெற்றோரையும் நன்றாகவே கவனித்துக் கொள்கிறார். அர்ச்சனாவின் அம்மா நான் பக்கத்தில் இருந்து அர்ச்சனாவையும் என்னுடைய மகளையும் பார்த்துக் கொள்வதைப் போன்று அவர் பார்த்துக் கொள்கிறார். அது மட்டும் அல்லாமல் அர்ச்சனாவின் சகோதரி என்னுடைய மகளை தன்னுடைய மகளாகத்தான் பார்க்கிறார். இப்படி ஒரு குடும்பம் எனக்கு கிடைத்திருக்கிறது என்று நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். தன் மீது கணவர் வைத்திருக்கும் பாசம் மற்றும் தன்னுடைய குடும்பத்தை பற்றி கணவர் பேசிய வார்த்தையை கேட்டு அந்த இடத்திலேயே வி ஜே அர்ச்சனா கதறி அழுதிருக்கிறார்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications