இறுக்கி பிடித்து... நசுக்கி.. அர்ச்சனாவின் அதிரடி "லவ்"!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதெல்லாம் ரொம்ப ஓவரான பாசமா இருக்கே என்று சொல்லும் அளவுக்கு தனது தாய்ப்பாசத்தை காட்டியுள்ளார் பிக் பாஸ் புகழ் அர்ச்சனா.

தன் மகள் மீதான தன்னோட காதலை நிரூபிக்கிறேன் என்று காட்டுவதற்காக தன் மகளை இறுக்கி அணைத்து அவர் போஸ் கொடுத்து போட்டோ போட்டுள்ளார்.

தாயும் மகளும் செய்யும் சேட்டையை ரசிகர்களுக்காக பதிவிட்டு இருக்கும் அர்ச்சனாவின் லேட்டஸ்ட் போஸ்ட் தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது .

இனிப்புக்கு அறிமுகம் தேவையா

இனிப்புக்கு அறிமுகம் தேவையா


விஜே அர்ச்சனாவிற்கு அறிமுகமே தேவையில்லை. அந்த அளவிற்கு பல வருடமாக தொகுப்பாளராகவும் வீடியோ ஜாக்கி ஆகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் .தொகுப்பாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக இருந்து வருவதால் இவருடைய பெயரை சொன்னதுமே அனைவருக்கும் தெரிந்துவிடும் .சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளராக இருக்கும் அர்ச்சனா மீண்டும் ரேடியோ ஜாக்கி பணிக்கு செல்ல இருக்கிறார்.

பிக் பாஸ் அர்ச்சனா

பிக் பாஸ் அர்ச்சனா

அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார் இதற்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவரது முகம் அனைவருக்கும் பழக்கப்பட்ட முகமாக இருந்தாலும் இவர் பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வேற லெவலில் வைரல் ஆகி விட்டார் .இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் இப்போது பல விதங்களில் செட்டிலாகி விட்டனர்.

விஜய் டிவியில் செட்டில்

விஜய் டிவியில் செட்டில்

சிலர் இருந்த பெயரை கெடுத்து கொண்டுள்ளனர். அது ஒரு தனி லிஸ்ட்டே இருக்கிறது. அர்ச்சனா இந்த வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு வரைக்கும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென தனி இடம் இருந்தது. ஆனால் இந்த வீட்டிற்குள் இவர் போட்ட ஆட்டத்தை பார்த்து பலர் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். இருப்பினும் விஜய் டிவியிலேயே இப்போது ஆங்கராகி விட்டார் அர்ச்சனா.

பாத்ரூம் டூர் வீடியோ

பாத்ரூம் டூர் வீடியோ

கொஞ்ச நாளைக்கு முன்னாடி இவர் பதிவிட்ட பாத்ரூம் டூர் வீடியோ மெகா ஹிட்டானது. ஆனால் அது நெட்டிசன்களுக்கு வாய்க்கு கிடைத்த அவலாக மாறியது. மீம்ஸ் கிரியேட்டர்கள் பலரும் கலாய்த்து வைத்து செய்து விட்டனர். கடும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கூட கிளம்பின. இதுகுறித்து அர்ச்சனா பல்வேறு விளக்கங்களையும் கொடுத்தார் .ஆனாலும் இவரை விடாமல் ட்ரோல் செய்து வந்தனர்.

ஏதாவது சர்ச்சை

ஏதாவது சர்ச்சை

அர்ச்சனாவைச் சுற்றி அவ்வப்போது ஏதாவது சர்ச்சை வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தனக்கு வரும் நெகட்டிவ் கமெண்டுகளை கூட பாசிட்டிவாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தில் இருக்கும் அர்ச்சனா மீண்டும் தொகுப்பாளராக விஜய் டிவியில் கலக்கி வருகிறார். அடுத்து ரேடியோ ஜாக்கி ஆகவும் அசத்தப் போகிறார்.
ஏற்கனவே இவருக்கு ரேடியோ ஜாக்கியாக வேலை செய்த அனுபவம் இருந்தாலும் தற்போது ரொம்ப நாளுக்கு பிறகு இந்த வேலைக்கு செல்ல இருப்பதால் ரொம்ப சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து வருகிறார்.

ரேடியோ ஜாக்கி

ரேடியோ ஜாக்கி

மிர்ச்சி தமிழ் ரேடியோவில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியானது திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை ஏழு மணி மற்றும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டு கல்யாணம் ஜீ தமிழ் சரிகமப சீசன் 1 மற்றும் 2 சரி கம பா நீ சாம்பியன்ஸ் ,செலிபிரிட்டி கிச்சன், காமெடி டைம் உள்ளிட்ட முக்கியமான நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

சூப்பர் மாம்

சூப்பர் மாம்

எல்லாவற்றுக்கும் மேலாக இவரும் இவருடைய மகள் சாராவும் இணைந்து ஜீ தமிழில சூப்பர் மாம் நிகழ்ச்சி சீசன் 1 மற்றும் சீசன் 2 இரண்டையும் தொகுத்து வழங்கியிருந்தனர் .இவர்களுடைய தனித்திறமை இதைப்பார்த்த ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வந்தனர். அதுவும் அம்மாவுக்கு பொண்ணு சளைத்தவரில்லை .தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பது போல சாராவும் இந்த வயதிலேயே அம்மாவுக்கு டப் கொடுத்து நன்றாக ரசிகர்களை என்டர்டைன்மென்ட் பண்ணி வந்தார்.

மகள் மீது பாசம்

மகள் மீது பாசம்

எப்போதுமே தங்களைப்பற்றி நெகட்டிவாக பேசுபவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது போல தற்போது அம்மாவும் பொண்ணும் மேக்கப் இல்லாமல் கட்டியணைத்தபடி ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை அர்ச்சனா வெளியிட்டுள்ளார். என்னை நசுக்கி என்று இவர் கமெண்ட்டும் போட்டுள்ளார். வழக்கம் போல பலர் பாராட்ட, சிலர் நக்கலடிக்க என போஸ்ட் களை கட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+