டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போதே.. சுருண்டு விழுந்த அர்ச்சனா..பதறிப்போன ரசிகர்கள்
சென்னை : எந்திரிச்சு நிற்க முடியாத நிலையிலும் ஆட்டம் போட்ட அர்ச்சனா பாதியிலே சுருண்டு விழுந்தை பார்த்து ரசிகர்கள் பதறிப்போய் விட்டார்கள்.
தன்னுடைய மகளுடனும் சகோதரி யுடனும் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும்போது
இவர் தலையில் கைவைத்தபடி கட்டிலில் விழுந்ததைக் கூட கவனிக்காமல் அவர்கள் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் பல ரசிகர்கள் காண்டாகி விட்டனர்.
பல நாளுக்குப் பிறகு இவர் சந்தோஷமாக மாறி இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும்போது, இவருக்கு திடீரென்று இப்படியானதை பார்த்ததும் பலர் வருத்தத்தில் ஆழ்ந்து விட்டனர்.

எங்க போனாலும் சிறப்புதான்
தொகுப்பாளர்களில் எத்தனையோ பேர் புதுசு புதுசாக அறிமுகம் ஆனாலும், அவர்களில் ஒரு சிலருக்குத்தான் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தொகுப்பாளர்கள் என்று சொன்னதுமே அதில் சட்டென்று நினைவிற்கு வருவது விஜே அர்ச்சனாவும் ஒருவர். அவருடைய துடுதுடுப்பான பேச்சையும் படபடவென்று எதிரில் இருப்பவர்களை வார்த்தைகளால் பந்தாடுவதும் இவருடைய ஸ்பெஷல்தான். எத்தனையோ புதுசு புதுசாக தொகுப்பாளர்கள் களம் இறங்கினாலும் இவருடைய இடத்தில் யாரும் வரமுடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சுத் திறமையினால் அனைவரையும் வசீகரித்து வைத்திருக்கிறார். இவருடைய திறமைக்கு இவர் எந்த சேனலுக்கு சென்றாலும் அதில் பட்டையை கிளப்பி விடுவார் என்பதை தற்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அம்மாக்கு சளைத்தவர் இல்ல பொண்ணு
இதற்கு முன்பு வரைக்கும் இவர் ஜீ தமிழின் செல்லப்பிள்ளையாக அந்த சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அர்ச்சனா மட்டுமல்லாமல் அவருடைய மகளும் அந்த சேனலில் தொகுப்பாளராக மாறிவிட்டார். அம்மாவும் பொண்ணும் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தனர். இவர்களுடைய அழகான ஜாலியான பேச்சை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலர் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தனர். இவருக்கு என்று ரசிகர்களின் மத்தியில் தனியிடம் இருந்தது. ஜீ தமிழில் ஸ்பெஷல் ஷோக்கள் முதல் பல முன்னணி நிகழ்ச்சிகளையும் இவரை தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். இவர் தொகுத்து வழங்குவதை பார்த்துக் கொண்டிருக்கும்போது மனதிற்குள் ஒரு பரபரப்பும் ஜாலியும் பற்றிக் கொள்வதே ரசிகர்கள் பலரும் தெரிந்து இருப்பார்கள்.

பிக்பாஸில் வேர முகம்
அவருடைய வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அமைந்துவிட்டது. அதுவரைக்கும் ஜீ தமிழில் இவர் செல்லப் பிள்ளையாக இருந்த இவர் முதல் முறையாக விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக காலடி எடுத்து வைத்த இந்த நிகழ்ச்சியை இவருக்கு ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துவிட்டது. அதுவரைக்கும் இவருடைய நல்ல பெயரும் இந்த நிகழ்ச்சியில் மாறிவிட்டது. இவர் அந்த நிகழ்ச்சியில் விளையாடிய விளையாட்டு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அதனாலேயே இவருக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்ட்கள் வர ஆரம்பித்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் இவர் இருக்கும்போது அனைவரிடமும் அன்பாக இருக்கவேண்டும் என்று இவர் உருவாக்கிய அன்பு டீம் பார்த்து பலர் கலாய்த்தாலும் வெளியே வந்த பிறகும் என்னுடைய அன்பு மாறாது என்று அவருடைய அந்த டீமுடன் இவர் நெருக்கமாக தான் இருந்து வருகிறார்.

கலாய்ப்பு க்கு அஞ்சவில்லை
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் இவர் விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் இவருக்கு தலையில் ஆப்ரேஷன் செய்யும் நிலைமை ஏற்பட்டது. இவருடைய நிலைமையை பார்த்து அதுவரைக்கும் இவருக்கு நெகட்டிவ் கமெண்டுகளை போட்டு வந்த ரசிகர்கள் மீண்டும் ஆதரவு கொடுக்க ஆரம்பித்து விட்டனர். எப்போது உடல்நிலை சரியாகி மீண்டும் இவர் வருவார் என்று தான் ஆர்வமாக பலர் காத்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் அர்ச்சனாவின் உடல் நிலை குறித்து அடிக்கடி தெரிவிக்க சொல்லி அவருடைய மகள் சாராவிடம் ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்த நிலையில்தான் ஒரு சில தினங்களுக்கு முன்பு இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் தன்னால் தற்போது தொகுப்பாளராக வர முடியாது அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கு அதிக நேரம் நின்று கொண்டே இருக்க வேண்டும், தற்போது தனது காலில் ஆபரேஷன் செய்து 16 தையல் போட்டிருப்பதால் அப்படி அதிக நேரம் இருக்க முடியாது என்று கூறியிருந்தார்.

ஐயோ என்ன ஆச்சு. ..
இவருடைய இந்த வீடியோவை பார்த்து அவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி கமெண்ட்களை போட்டு வந்தனர். சீக்கிரத்தில் எல்லாம் சரியாகி மீண்டும் நீங்கள் கம் பேக் கொடுக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் இவருடைய வீடியோ ஒன்று வைரலாக வலம் வந்து கொண்டு இருக்கிறது. அந்த வீடியோவில் அர்ச்சனா தன்னுடைய சகோதரியின் மகன் கட்டிலில் படுத்து இருக்க குழந்தையின் முன்பாக அர்ச்சனா அவருடைய மகள் மற்றும் அர்ச்சனாவின் சகோதரியும் டான்ஸ் ஆடி கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஆடிக் கொண்டிருக்கும்போது அர்ச்சனாவிற்கு தலையில் வலி வந்துவிடவே அவர் அப்படியே கட்டிலில் படுத்து விடுகிறார். இதைப் பார்த்ததும் இந்த மாதிரி நேரத்துல இது தேவையா உடம்பு நன்றாக சரி ஆகட்டும் அதற்கு பிறகு எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்று பலர் உரிமையாக திட்டி வருகின்றனர். ரசிகர்களே இப்படி என்றால் நெட்டிசன்களை பற்றி கேட்கவே வேண்டாம், அவர்களும் தங்கள் பங்குக்கு கலாய்த்து வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications