எனக்கு அது வேணாம் டார்லிங்... கெத்து போஸுடன்.. மாஸ் காட்டிய அர்ச்சனா
சென்னை: சீரியலில் தான் நான் வில்லி நிஜத்தில் நா ஸ்டைலிஷ் தமிழச்சி என காருக்குள்ள கிழிஞ்ச பேண்ட்டோடு மாஸ் காட்டிய விஜே அர்ச்சனாவின் லேட்டஸ்ட் போட்டோஸகள் தற்போது இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகிறது.
அதை விட என்னை யாரும் ஏத்துக்க வேண்டியதில்லை, அதெல்லாம் என்னை நானே ஏத்துக் கிட்டேன் டார்லிங் என்றும் அவர் கெத்தாக கேப்ஷன் கொடுத்துள்ளார்.
அவர் போட்டுள்ள இந்த கேப்ஷனும், அவர் கொடுத்துள்ள தெனாவெட்டு போஸும் பெரும் வைரலாகியுள்ளன.

கெத்தான போஸ்
தொகுப்பாளராக பலர் களமிறங்கி இருந்தாலும் அனைவரின் மனதிலும் அனைவரும் இடத்தை பிடித்துவிட முடியாது ரசிகர்களை கவர்ந்து அழகாலயும் தன்னுடைய சிரிப்பாலயும் பக்கத்து வீட்டுப்பெண் போன்ற அழகில் ஜொலித்துக்கொண்டிருப்பவர் விஜே அர்ச்சனா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் வில்லியாக கலக்கிக் கொண்டிருந்தாலும் நிஜத்தில் நான் ஒரு பச்ச புள்ள என நிரூபிப்பவர்.

இவரா அவர்
அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார் .இவரை இந்த சீரியலில் பார்த்து கழுவி கழுவி ஊற்றிய ரசிகர்கள் கூட நிஜத்தில் இவருடைய போட்டோவை பார்த்து அவரா இவர் என அதிசயப்பட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு சீரியலில் வில்லத்தனத்தை குழந்தை போல செய்து கொண்டிருக்கும் புதுவித வில்லியாக நடித்துக்கொண்டிருக்கிறார் .

அதெல்லாம் நடிப்பும்மா
அது எல்லாமே நடிப்பு மட்டும்தான் நான் அப்படி எல்லாம் கிடையாது என இவர் கூறியிருக்கிறார் .ஆனாலும் இவருடைய நடிப்பு பார்த்த ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர் .ஆலியா மானசா விற்கும் இவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு கொண்டிருந்தாலும் அவர் மீது இவர் பொறாமையில் செய்யும் செயல்களை பார்த்து பெண் ரசிகர்கள் எல்லாம் இவருக்கு சாபம் இட்டு வருகின்றனர் .

ஜாலி கேரக்டர்தான்
அதனால்தான் இவர் சீரியலில் மட்டும் தான் நாங்கள் அப்படி மற்ற நேரங்களில் ஜாலியாக இருக்கிறோம் என இவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக இருக்கும்போது எடுக்கும் வீடியோக்களையும் போட்டோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு எல்லாம் நடிப்பு என ரசிகர்களுக்கு புரிய வைத்து வருகிறார். இவர் டிக்டாக்கில் மூலமாக பிரபலமாகி அனைவரின் மனதிலும் தனக்குன்னு ஒரு இடத்தையும் முத்திரையும் பதித்து விட்டார் .

கலக்கல் டான்ஸ்
இவருடைய கலக்கலான டான்ஸ்ஸாலயும் அழகான எக்ஸ்பிரஸனையும் பார்த்து தான் இவருக்கு டீவிகளில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்திருக்கிறது . தற்போது தொகுப்பாளராக இருந்து நடிகையாக மாறி விட்டாலும் இப்பமும் அதே போட்டோ சூட்டும் ரீல்ஸ்ஸ் வீடியோக்கள் போடுவதிலும் வெறியாக இருந்து வருகிறார். சூட்டிங் ஸ்பாட்டில் கிடைக்கும் சிறிது நேரத்தில் கூட கேமராவை எடுத்துக்கொண்டு தனியாக சென்று விடுவாராம் .

ஜாலி வீடியோ
இவர் வீடியோ எடுப்பது போதாது என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களையும் ஆடவைத்து பாடாய்ப்படுத்தி அவர்களுடனும் வீடியோ எடுத்து விடுவது தான் இவருக்கு என்டர்டைன்மென்டாம். அதனாலேயே இவர் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது ரொம்பவே ஜாலியாக இருக்கும் என அவருடன் நடிக்கும் நடிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ராஜாராணி சீரியலும் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னேறி வந்து கொண்டிருக்கிறது .

அதிக ரசிகர்கள்
இந்த சீரியலில் இவர் நடித்திருந்தாலும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர் . அதனாலேய தான் வந்த இடத்தை மறந்து விடக்கூடாது என ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப போட்டோஸ்களை எடுத்து குவித்து வருகிறார். அந்த மாதிரி தான் தற்போது மாடல் உடையில் கிழிஞ்ச பேண்டும் டீ ஷர்ட்டும் போட்டுக்கொண்டு கலக்கலாக காருக்குள் அமர்ந்தபடியே ஒரு போட்டோ ஷூட்டை எடுத்துவிட்டார்.

காருக்குள் போட்டோஷூட்
இந்த நேரத்தில் வெளியே சென்று போட்டோஷூட் எடுக்க முடியாது என வீட்டுக்குள்ளேயே காரை செட்டாக மாற்றி கலக்கி விட்டீர்கள் என இவருடைய ரசிகர்கள் இவருக்கு கமெண்ட் போட்டு வருகின்றனர். சீரியலில் புடவையில் வில்லத்தனத்தை செய்து கொண்டிருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் மாடல் உடையில் ரசிகர்களை கண்களாலே பாடாய்ப்படுத்தி வருகிறார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications