பாவாடை தாவணியில் பவ்யமாய் அழகை காட்டிய அர்ச்சனா .. அடடா பார்த்து விட்டோம்.. ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சென்னை : என்ன அழகு இதில் எத்தனை அழகு என்று பார்ப்பவர்களை தவிக்க வைக்கும் பேரழகை காட்டி விஜே அர்ச்சனா ரசிகர்களை பரவசப்படுத்தி இருக்கிறாரே
பாவாடை தாவணியில் பஞ்சவர்ணக்கிளி ஆக ரசிகர்களின் மனதை கவர்ந்து சிரிப்பாலே சிலிர்க்க வைத்து விட்டாரே என்று தவிக்கும் ரசிகர்களின் கூட்டம் இன்ஸ்டாகிராமில் அலைமோதுகிறது.
சீரியலில் தான் வில்லி நிஜத்தில் தான் ஒரு தேவதை என்பதை நிரூபித்து விட்டாரே என ரசிப்பதற்காக ஓடோடி வரும் ரசிகர்கள் கவிதைகளால் காதல் பொழிகின்றனர்.

எட்டிப்பார்க்கும் பேரழகு
பாவாடை தாவணியில் தன் மனதில் இருக்கும் ஆசை எல்லாம் வீடியோவில் வெளியிட்ட அர்ச்சனாவை பார்த்து நாங்க இருக்கிறோம் என துள்ளி குதிக்கும் ரசிகர்கள் குதுகலம் இடுகின்றனர். மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது என அஜித் பாடலுக்கு ரீல்ஸ் போட்டு பல பேர் தூக்கத்தை கெடுத்து இருக்கிறாராம். மாடர்ன் உடையில் வந்தால்தான் கவர்ச்சி என்று இல்லை பாவாடை தாவணியில் வந்தாலும் ரசிக்கும் ரசிகர்கள் கூட்டம் தன்னை சுற்றி தான் வரும் என்பதை தற்போது நிரூபித்திருக்கிறார். இவர் போட்டோஸ் அப்லோட் பண்ணுனாலும் சரி ரீல்ஸ் வீடியோஸ் என்றாலும் சரி இவருடைய போஸ்ட் பார்த்ததும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் களை சும்மா தெறிக்க விட்டு வருகிறார்கள்.

அப்படியே கண்களை உருட்டி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2வில் நடிகையாக களமிறங்கியிருக்கும் விஜே அர்ச்சனா அந்த சீரியலிலும் இவருடைய பெயரிலேயே நடிக்கிறார். அர்ச்சனா என்னும் பெயரைக் கேட்டாலே பலர் இருட்டேட் ஆகிவிடுகின்றனர். அந்த மாதிரிதான் இவருடைய நடிப்பு குழந்தைத்தனமான வில்லத்தனத்தை கொண்டிருக்கிறது. சீரியலில் இவரை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் தொகுப்பாளராக இருக்கும்போது இவருடைய அழகையும், அழகான தமிழ் பேச்சையும் ரசித்து வந்தவர்கள் தான். ஆனால் இந்த சீரியலில் இவரது நடிப்பை பிடிக்காமல் பல சீரியல் ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

மெருகேறும் அழகு
இவரை சீரியலில் என்ன தான் ரசிகர்கள் திட்டினாலும் அதை எல்லாம் தன்னுடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக தான் இவர் கருதுகிறார். அதனால்தான் தன்னுடைய கேரக்டரை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று சீரியலை தாண்டி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் அடிக்கடி போஸ்ட் போட்டு வருகிறார். சீரியல் கேரக்டர் வேறு நிஜ கேரக்டர் வேறு என்பதை புரிந்து கொண்ட ரசிகர்கள் அவருக்காக லைக்குகளை குவிக்கின்றனர். இவர் நடிகை மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும் ஒரு மாடலாகவும் இருந்து வருகிறார்.

அதுதான் பிடிக்கல
ராஜா ராணி சீரியலில் சந்தியாவை எப்படியாவது தன்னுடைய மாமியாரிடம் திட்டுவாங்க வைப்பதற்காக இவர் செய்யும் தந்திரங்கள் எல்லாம் ஒவ்வொரு முறையும் தோல்வியில் முடிந்து விடுகிறது. ஆனாலும் இவர் புதுப்புது முயற்சிகளில் எடுத்து வருவதை பார்த்து சிலர் திட்டினாலும், அந்த சீரியலில் என்டர்டைன்மென்ட் இவர்தான். இவர் செய்யும் வில்லத்தனங்கள் கூட காமெடியாகத்தான் இருக்கிறது. அதனாலேயே சில ரசிகர்களுக்கு இவரை பிடித்திருக்கிறதாம். என்ன இருந்தாலும் சீரியலுக்கு இவர் ஒரு பிளஸ் பாயிண்ட் தான். இவருடைய முட்டைக் கண்ணை ரசிக்கும் ரசிகர்கள் வில்லத்தனத்தை செய்யும் போது இவர் கண்கள் படும் அல்லல் பாடுகளை கவனிக்க மறப்பதில்லை.

ரெக்கை இல்லாத தேவதையாமே
தற்போது இவர் மஞ்ச கலர் தாவணியும் பச்சை கலர் ஜாக்கெட் பாவாடையுடன் பாவாடை தாவணியில் அப்படியே தேவதையாக ஆட்டம் போட்டிருக்கிறார். இவருடைய ஆட்டத்தில் மெய் மறந்து போன ஒரு ரசிகர் இவருக்கு கவிதையை சமர்பித்து இருக்கிறார். அதில், இரண்டு கண்கள் போதாது உன்னை ரசிக்க...பெண்ணாக பிறந்த நீ வளரும்போது தேவதையாக இருக்கிறாய்...கடவுளிடம் நிறைய பணம் கேட்க மாட்டேன், மாறாக கடவுளிடம் கூடுதலாக இரண்டு கண்கள் கேட்பேன்..அது போதும் எனக்கு உன்னை பார்க்க...பெண் தேவதையே என்று சிவப்பு காட்டின் களை பறக்க விட்டு விட்டார் .இவருடைய அழகை புகழ்ந்து ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை கொட்டிக் கொண்டிருந்தாலும் இவருடைய க்யூட்டான அழகுதான் கண்ணுக்குள்ளே இருக்கிறதாம்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications