பெண்ணுறுப்பு.. ஏன் இந்த கேவலம்? கூட வேலை பார்த்தவங்க அந்த மாதிரி இல்ல! விஜே அர்ச்சனா ஆதங்கம்
சென்னை: விஜே அர்ச்சனா சமீபத்தில் ஒரு பேட்டியில் சிலர் பெண்களின் கால்களுக்கு நடுவே இருக்கும் உறுப்பை குறிப்பிட்டு எல்லா கெட்ட வார்த்தைகளுக்கும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிகாட்டி இருக்கிறார்.
அதோடு ஸ்லீவ்லெஸ் உடை அணிந்தால் இந்த சமுதாயத்தில் பலர் தவறாக பேசுவதால் நான் ஸ்லீவ் லெஸ் உடை அணிவதையே விட்டுவிட்டேன் என்றும் தனக்கு நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்தும் அந்த பேட்டியில் அர்ச்சனா பேசியிருக்கிறார். இது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜே அர்ச்சனாவுக்கு பெரிய அளவில் அறிமுகமே தேவை இல்லை. தொகுப்பாளர்கள் என்று சொன்னதுமே டக் என்று நினைவில் வரும் தொகுப்பாளிகளில் முக்கியமானவர்தான் விஜே அர்ச்சனா. இவர் விஜய் டிவி, ஜீ தமிழ் என்று பல சேனல்களில் பல வருடங்களாக தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
தொகுப்பாளராக பெரிய அளவில் பெயர் வாங்கி வைத்திருந்த அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருடைய கேரக்டர் வேற விதமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது. ஆனாலும் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படிப்படியாக தன்னுடைய பழைய நிலைக்கு அர்ச்சனா திரும்பிக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு தலையில் ஒரு பெரிய ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்தது.
அதுவும் பெரிய அளவில் அந்த நேரத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில் இப்போது சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தற்போதைய சமுதாயம் பற்றி பேசி இருக்கிறார். அதில் தற்போதைய சமுதாயம் பற்றி பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுவதில் இப்போ வரைக்கும் எங்களுடைய வீட்டில் பெரியவர்களை பார்த்தால் கைகூப்பி வணங்க சொல்லி தான் வளர்த்திருக்கிறார்கள். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது எங்கள் வீட்டில் இப்போதும் நடைமுறையில் இருக்கிறது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு சில தவறுகளும் நியாயப்படுத்தப்படுகின்றன. என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் நான் அந்த காரியத்தை செய்தாக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அதுபோல இப்போதைய சூழ்நிலையில் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணி செல்லுதல், காஸ்டிங் கோச் இந்த வார்த்தைகள் அதிகமாக உலா வருகிறது. இது மற்றதுறையில் இருப்பதைவிட மீடியா துறையில் அதிகமாக இருக்கிறது.
அதுபோல டீசர்ட் அணிந்து ஒரு பெண் வருகிறார் என்றால் அவள் மீது கையை போட்டால் போதும் வந்துவிடுவார் என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள். நான் ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்போது அதிகமாக ஸ்லீவ்லெஸ் போடுவேன். அது நமக்கு நல்லா இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த மாதிரி வார்த்தைகளை கேட்ட பிறகு நான் ஸ்லீவ் லேசர் டி-ஷர்ட் போடுவதையே நிறுத்திக் கொண்டேன்.
அதுபோல எந்த இடத்திலும் ஒரு பெண்ணைப் பற்றி பேசக்கூடிய எல்லா கெட்ட வார்த்தைகளுக்கும் அவரது கால்களுக்கு நடுவே இருக்கும் உறுப்பை குறிப்பிடுவதாக தான் இருக்கிறது. ஒரு பெண்ணோட கண் காது மூக்கு வாய் உள்ளிட்ட எதை வைத்தும் அடையாளப்படுத்தவில்லை. சிலர் பெண்களின் கால்களுக்கு இடையே இருக்கக்கூடிய உறுப்பை வைத்து மட்டும்தான் அடையாளப்படுத்துகிறார்கள்
எப்போதும் ஒரு பெண்ணை ஏன் அங்கிருந்து பார்க்கிறார்கள்? எல்லோருமே அந்த இடத்தில் இருந்து தான் வெளி உலகத்திற்கு வருகிறோம். ஆனால் அதை வைத்து அடுத்தவர்களை அசிங்கப்படுத்துவது எதற்காக என்று தெரியவில்லை என்று தன்னுடைய கோபத்தை காட்டியிருக்கும் அர்ச்சனா என்னுடைய ஆரம்ப கால பயணத்திலிருந்து இப்போது வரைக்கும் நான் சிறந்த ஆண்களோடு வேலை பார்த்து இருக்கிறேன்.
வெளியில் ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம் ஆனால் நீங்கள் உங்களுடைய மனசாட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும். கண்ணாடி முன்பு இன்று அர்ச்சனா இப்படி செஞ்சிட்டியே என்று நாமே பீல் பண்ண கூடாது. அது மட்டும் தான் என்னுடைய குறிக்கோள். இதுவரைக்கும் அந்த மாதிரியான ஒரு தருணம் எனக்கு நடந்தது கிடையாது என்பதை நான் இங்கு பெருமையாக கூறிக் கொள்கிறேன் என்று அந்த பேட்டியில் அர்ச்சனா பேசியிருக்கையில் இதை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications