சிவகார்த்திகேயனோடு நான் பேசமாட்டேன்.. அதற்கு காரணமே இதுதான்.. வி.ஜே பாவனா ஓப்பன் அப்
சென்னை: விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களுக்கு பிரபலமடைந்த விஜே பாவனா சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும்போது கூட சிவகார்த்திகேயனோடு அதிகமாக பேச மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
அதோடு தான் சிவகார்த்திகேயனோடு பேசாததற்கு காரணம் என்ன என்பது பற்றியும் அந்த பேட்டியில் விஜே பாவனா மனம் திறந்து இருக்கிறார். அதுபோல தான் எதனால் விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து விலகினேன் என்பது பற்றியும் அந்த பேட்டியில் பாவனா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அந்த வகையில் ஆறு வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் இரண்டு வாரங்கள் மட்டுமே தொகுப்பாளராக கலந்து கொண்ட விஜே பாவனா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய தொகுப்பாளர்கள் வாழ்க்கையில் நடந்த பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார்.
அதில் நான் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும்போது மாகாபா சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் போன்றவர்களோடு சேர்ந்து தொகுப்பாளராக இருந்திருக்கிறேன். அதில் மாகாபாவுக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும். நாங்கள் இருவரும் இதைத்தான் பேசப்போகிறோம் என்று பேசி வைத்து எல்லாம் பேசியது கிடையாது. அந்த டைமில் என்ன தோன்றுகிறதோ அதை பேசுவோம் ஆனால் மற்றவர்களோடு பேசும்போது நாங்கள் என்ன பேசப்போகிறோம் அதற்கு இன்னொருவர் என்ன கமண்ட் கொடுக்க வேண்டும் என்பதை எல்லாம் எழுதி வைத்துக்கொண்டு தான் பேசுவோம்.
ஆனால் நான் சிவகார்த்திகேயனோடு அதிகமாக பேசமாட்டேன் காரணம் நான் தொகுப்பாளராக இருக்கும்போது ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் கண்டஸ்டண்டாக தான் விஜய் டிவியில் இருந்தார். பிறகு அவர் என்னோடு தொகுப்பாளராக மாறி இருந்தார். ஆனாலும் எங்கள் இருவருக்கும் ஒரு டிஸ்டன்ஸ் இருக்கத்தான் செய்தது. அதுபோல என்னோடு விஜய் டிவியில் விஜய் தொகுப்பாளராக இருக்கும்போது அவர் என்னை குருநாதா என்று சொல்வார்.
நான் அவரிடம் எப்போதும் எனக்கு ஒரு ராசி உண்டு என்னோடு தொகுப்பாளராக இருப்பவர்கள் எல்லாரும் பெரிய திரைக்கு போய்விடுவார்கள். அதனால் நீங்களும் போய்விடுவீர்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். ஆனால் விஜய்க்கு பெரிய அளவில் இன்னும் அவருடைய திறமைக்கு தகுந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பேசிக் கொண்டிருக்கும் போது, நாம் எந்த இடத்தில் வேலை பார்த்தாலும் சரி அங்கே சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.
நாம என்னதான் பெஸ்ட் ஆக வேலை செய்தாலும் ஆண்களுக்கு தான் அங்கு முன்னுரிமை கொடுப்பார்கள். நம்மை இரண்டாம் பட்சமாக தான் பார்ப்பார்கள் என்று வேதனையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அதோடு தன்னை பார்க்கும் பலரும் குழந்தை இன்னும் இல்லையே ஏனென்று கேட்கிறார்கள். இந்த வார்த்தையை கேட்கும் போது தான் கடுப்பாக இருக்கும். அது நம்முடைய பர்சனல் அதை ஏன் இவர்கள் கேட்கிறார்கள் என்று சொல்ல தோணும் ஆனாலும் நான் அதை இப்போது கண்டு கொள்வது கிடையாது என்று விஜே பாவனா பேசியிருக்கிறார்.
அதே நேரத்தில் விஜே பாவனா ஆரம்பத்தில் ராஜ் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்து பிறகு விஜய் டிவியில் முழு நேர தொகுப்பாளராக மாறி இருந்தார். அந்த நேரத்தில் சூப்பர் சிங்கர், ஜூனியர் ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார். அதற்கு பிறகு தான் அவர் 2017 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு பத்திரிகையாளராக தேர்வாகிய இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் மற்றும் கபடி லீக்கில் ஒளிபரப்புகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்து கொடுத்த ஐடியா.. சிந்தாமணி குடும்பத்திற்கு செக் வைத்த சத்யா.. ஆட்டத்தை தொடங்கிய ரோகிணி -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications