நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. இதனால் தான் மீண்டும் விஜய் டிவிக்கு.. விஜே பாவனா வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

: விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் பல வருடங்களுக்குப் பிறகு தொகுப்பாளராக மாறி இருக்கும் விஜே பாவனா அது குறித்து விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் எதற்காக விஜய் டிவிக்கு வந்தேன் என்பதை பற்றி வி ஜே பாவனா விலக்கி இருக்கிறார்.

அதோடு தான் மீண்டும் விஜய் டிவிக்கு வந்ததால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்களுக்கு சில தகவல்களையும் பாவனா பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

 VJ Bhavana Returning to Vijay TV what reason

அந்த வகையில் விஜே பாவனா 90ஸ் கிட்ஸ் களின் பேவரைட் தொகுப்பாளர்களில் ஒருவராக தான் வலம் வந்து இருந்தார். ஆரம்பத்தில் ராஜ் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்து பிறகு ஸ்டார் விஜய் சேனலில் முழு நேர தொகுப்பாளராக மாறி இருந்தார். அதுவும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர், airtel சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தன்னுடைய தனித்துவத்தின் மூலமாக ரசிகர்களின் மனதில் பதிந்திருந்தார்.

இந்த நிலையில் தான் 2017 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு பத்திரிக்கையாளராக தேர்வாகி இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் மற்றும் கபடி லீக்கின் ஒளிபரப்புகளை தொகுத்து வழங்கினார். 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் ஸ்போர்ட்ஸ் தமிழில் வர்ணனையாளராக பணியாற்றி அந்த சீசனில் இரண்டு பெண் தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஒரு பாடலை இவரே பாடி அதை தன்னுடைய youtube பக்கத்தில் பகிர்ந்து அரை மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. அது போல மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகில் ரமேஷை திருமணம் செய்து மும்பையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஆறு வருடம் கழித்து விஜய் டிவியில் மீண்டும் தொகுப்பாளராக ஆர் ஜே பாவனா கலந்து கொண்டிருக்கிறார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் விஜே பாவனாவை பார்த்ததும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் விஜே பாவனா இன்று தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது உங்களுடைய கடிகாரத்தை ரிவைண்ட் செய்து இந்த வார இறுதியில் சூப்பர் சிங்கரை மாலை 6:30 மணி முதல் பாருங்கள்.

இறுதி போட்டிக்கு முன் மூன்று எபிசோடுகளையும் கெஸ்ட் கோஸ்ட் செய்ய செட்டுக்கு நான் மீண்டும் திரும்பி சென்றது, மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுபோல என்னை மீண்டும் திரும்பி வர சமாதானப்படுத்தியது க்ளோபல் வில்லேஜஸ் மற்றும் ரிச்சர்ட், சுரேந்தர் என ஒரு சிலரின் இன்ஸ்டாகிராம் ஐடியை டேக் செய்து அனைவருக்கும் ஆதரவு மற்றும் நன்றியையும் சொல்லி இருக்கிறார்.

அதோடு என்னை மீண்டும் இந்த மேடையில் பார்த்து விரும்புவர்களிடம் நான் ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன். இது தற்காலிகமானது மட்டும் தான் நிரந்தரமானது அல்ல. என்னுடைய முக்கியமான வேலை ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தொடங்கும் கபடி தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+