Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Old video: சித்து கையைப் பிடிச்சு.. மேடையில் வச்சு.. ரசிகர் செய்த கலாட்டா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னதான் பிரபலமான நபராக இருந்தாலும் சரி விஜே சித்துவுக்கு ஸ்டேஜில் ஒரு ரசிகர் இந்த மாதிரி பண்ணுனது தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஆனால் பாருங்க.. இது கொஞ்சம் பழைய வீடியோதான்.. இப்போது வைரலாக்கி வருகிறார்கள். சீக்கிரத்தில் சித்துவுக்கு திருமணம் இருக்கும் நிலையில் இந்த வீடியோவை ஏன் வைரலாக்கினர் என்று தெரியவில்லை.

விஜே சித்தூ விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கேரக்டரில் கலக்கிக் கொண்டிருப்பவர் என்பது பலருக்குத் தெரியும்.

 கலக்கல் முல்லை

கலக்கல் முல்லை

இவரால் தான் இந்த சீரியல் இளைஞர்கள் மத்தியிலும் பாப்புலராக ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதை இவர் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது ரசிகர்களுகள் உருகும் அழகை பார்த்தாலே தெரிகிறது. நாளுக்கு நால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் கூட்டிக்கொண்டு வருகிறது. இதுவும் பல திரைப்படங்களை போல காப்பியடித்து குடும்ப கதையை மையமாக தான் இருக்கிறது.

 முல்லை கதிர் காதல் கதை

முல்லை கதிர் காதல் கதை

இருந்தாலும் இந்த சீரியலில் ஆலமரமாக முல்லை கதிரின் காதல்தான் போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் முல்லையாக வரும் சித்துவின் நடிப்பை பார்த்து பலர் ரசிகர்கள் இவருக்கு ஆர்மி அமைத்து வருகின்றனர். இப்ப இருக்கிற இளைஞர்கள் பலரும் கட்டுனா இந்த மாதிரி ஒரு பொண்ண தான் கல்யாணம் முடிக்கணும் என்று சொல்கிற அளவிற்கு இவரது அழகும் நடிப்பும் நாளுக்கு நாள் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வர� ��கிறது.

 ரசிகர்கள் கூட்டம்

ரசிகர்கள் கூட்டம்

எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் இவரது இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்று தான் இவர் ரசிகர்களை வசியப்படுத்தி வருகிறார். விஜே சித்து என்று சொன்னாலே அவரது பட பட பேச்சும் காமெடியும் தான் பலருக்கும் ஞாபகம் வரும் .ஆனால் அவர் இந்த சீரியலில் குடும்ப குத்துவிளக்காக முல்லை கேரக்டரில் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 காதல் வயம்

காதல் வயம்

அந்த மாதிரி தான் இவரது நடிப்பைப் பார்த்து காதல் வயப்பட்ட ஒரு ரசிகர் இவர் பொது நிகழ்ச்சிகளுக்கு வெளியில் செல்லும்போது நிகழ்ச்சியின் மேடையில் அணைவர் முன்னாடியும் தைரியமாக இவருக்கு வந்து லவ் ப்ரொபோஸ் பண்ணி இருக்கிறார். அதுவும் நானும் ஒரு மிகப்பெரிய முல்லையின் ரசிகர் . இவரது நடிப்பையும் சிரிப்பையும் பார்த்து முழுவதும் விழுந்துவிட்டேன் .

 முல்லையைக் கட்டணும்

முல்லையைக் கட்டணும்

கட்டுனா இந்த மாதிரி ஒரு பொண்ண தான் கட்டணும். என்பதுதான் எனது நீண்ட நாள் கனவு அதனால் என்னை லவ் பண்ணுங்க ஐ லவ் யூ என்று மேடையில் அவரது கையை பிடித்து லவ் ப்ரொபோஸ் பண்ணி இருக்கிறார். இது பழைய வீடியோதான். போன ஏப்ரலில் போட்டுள்ளனர். இப்போது இது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து காண்டான ரசிகர்களும் நெட்டிசன்கள் வயிறு எரிந்து இவருக்கு சாபம் இட்டு வருகின்றனர்.

 நமக்கும் சான்ஸ் கிடைக்காதா

நமக்கும் சான்ஸ் கிடைக்காதா

இந்த மாதிரி நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்றுதான் பலரும் புலம்பி வருகிறார்கள் .அந்த அளவிற்கு இவர் தைரியமாக முல்லையின் கையை பிடித்துக் கொண்டு, கையை விடாமல் உங்களது லைஃப்ல முழுக்க நானே வருகிறேன் என்று முல்லை ரசிகர்களை மட்டுமல்லாமல் முல்லையின் வருங்கால கணவரையும் வெறுப்பு ஏற்றிருக்கிறார்.

 இப்பப் போயி வைரலாகுதே

இப்பப் போயி வைரலாகுதே

பல ரசிகர்களும் எதிர்பார்த்திருந்த இவரது திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் தற்போது விமர்சனமாக நடைபெற்று அடிக்கடி அவரது வருங்கால கணவருடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் முலையைக் தற்போது அவரது ரசிகர் பொது மேடையில் இந்த மாதிரி ப்ரொபோஸ் பண்ணுனது தான் வைரலாக பரவி வருகிறது. பழைய வீடியோவாக இருந்தாலும் கூட இப்போது இது வைரலாகி வருகிறது. படு காமெடியாகவும் கூட இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+