குலுங்கிச் சிரித்த முல்லை.. ஆத்தாடி.. விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்!
சென்னை: வர வர இந்த பாண்டியன் ஸ்டோர் முல்லை அக்கப்போருக்கு அளவே இல்லாமல் போய்க் கிட்டு இருக்கு.
சீக்கிரமா திருமணம் இருக்கும் இந்த நிலையில் தற்போது இவர் சூட்டிங் ஸ்பாட்டில் செய்த ரகளையான வீடியோ தான் வைரலாக பரவி வருகிறது.
அதுவும் இந்த மாதிரி எப்பவும் ரொமான்ஸ் நினைப்பு தானா என்று ரசிகர்கள் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

முல்லையின் ரசிகர்கள்
பாண்டியன் ஸ்டோர் முல்லை கேரக்டரில் நடிக்கும் வி ஜே சித்துவுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர் இந்த சீரியலுக்கு வருவதற்கு முன்பு பல நகைச்சுவை சீரியல்களிலும் நிகழ்ச்சிகளிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் போகாத சேனலை இல்லை என்று சொல்லலாம் அந்த அளவிற்கு எல்லா சேனல்களிலும் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
தற்போது விஜய் டிவியில் தன்வசப்படுத்தி இருக்கிறது .இதுவரைக்கும் பல சேனல்களில் இவர் தொகுப்பாளராகவும் நிகழ்ச்சியாளராகாகவும் கலக்கி இருக்கிறார். ஆனால் இப்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் முல்லை யாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பதற்கு முக்கிய காரணமே இவர்தான் என்று சொல்லவேண்டும்.

ரசிகர்கள் மனசில்
அந்த அளவிற்கு ரசிகர்களிடம் முல்லை கேரக்டர் பெரும் மதிப்பு கிடைத்திருக்கிறது. சீரியலில் பவ்யமாக அமைதியும் சொரூபமாக இருக்கும் இவர் உண்மையில் பெரிய வாயாடி என்பது அனைவருக்கும் தெரிந்தது தான் .இருந்தாலும் இந்த கேரக்டரிலும் இவர் நன்றாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். அதனால்தான் பலரும் இவரும் கதிரும் எப்போது சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர்.

சூப்பர் முதலிரவு
ரசிகர்களின் எதிர்பார்ப்பும் தற்போது நிறைவேறிவிட்டது. இருவரும் சீரியலில் முதலிரவை கொண்டாடி ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டார்கள். சீரியலில் இவரது அத்தான் ஜீவாவுடன் ஒரு காமெடியான வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் பூனைக்குட்டி எப்படி கத்தும் என்று இருவரும் மாற்றி மாற்றி நடித்து காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெட்கிச் சிரித்த முல்லை
அதிலும் கடைசியாக பூனை ரொமான்ஸில் எப்படி கத்தும் என்று கேள்வியை கேட்டு அதற்கு ஜீவாவும் கத்தி காமிக்க முல்லைக்கு வெட்கத்தால் முகம் சிவந்து விட்டது .அவரது வெட்கப்பட்ட இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் சித்துவுக்கு வெக்கபட தெரியுமா என்று கேள்விகளைக் கேட்டு வருகிறார்கள்

விட மாட்டோம்ல
ரசிகர்களை கலாய்ச்சா நெட்டிசன்கள் சும்மாவா இருப்பார்கள் அவர்களும் அவர்கள் பங்குக்கு கலாய்ச்சு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் காமெடி செய்து கொண்டிருக்கும் இவர் இன்னொரு காமெடியையும் வெளியிட்டிருக்கிறார். அது டப்ஸ்மாஷ் வீடியோவாக இருந்தாலும் அதுவும் வைரலாக பரவி வருகிறது. அதில் கவுண்டமணியின் நடிப்பை அச்சு அசலாக அப்படியே செய்து காண்பித்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் நன்றாக ரசித்து ரசித்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications