இது நீ இல்ல சித்து.. கதறி அழும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்து மரணம் அதில் நடித்த அனைவரையும் உலுக்கியுள்ளது. மீனா கேரக்டரில் நடித்து வரும் ஹேமா கதறி அழுதுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்த விஜே சித்ரா தற்போது தற்கொலை பண்ணி இறந்து விட்டார் என்னும் செய்தியை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் அவருடன் ஒன்றாக நேற்று வரைக்கும் கூடவே இருந்த அந்த சீரியலில் நடித்த நடிகர்களும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அவர்கூட அந்த சீரியலில் நடிக்கும் ஹேமா ,சித்துவை பற்றி வெளியிட்ட பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

யாரும் எதிர்பாராத மரணம்

யாரும் எதிர்பாராத மரணம்

மக்கள் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் மூலமாக சீரியலுக்கு காலடி எடுத்து வைத்திருந்தாலும் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கேரக்டரில் தான் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருந்த விஜே சித்ரா யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை தற்போது எடுத்து விட்டார்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்

அதிர்ச்சியில் ரசிகர்கள்

இவர் தற்கொலை செய்து விட்டார் என்னும் செய்தியை கேள்விப்பட்டதும் நேரத்திலிருந்து இன்ஸ்டாகிராம் முதல் சமூக வலைத் தளங்கள் அனைத்திலும் இவருடைய செய்திகள் தான் தற்போது வைரலாக பரவி வந்து கொண்டிருக்கிறது. அவருடைய இறப்பிற்கு பல்வேறு காரணங்களும் சந்தேகங்களும் பேசப்பட்டு வந்தாலும் அவர் என்ன காரணத்திற்காக இறந்தார் என்பது பெரும் மர்மமாக உள்ளது.

ஹேமாவின் அதிர்ச்சி

ஹேமாவின் அதிர்ச்சி

அவருடன் நேற்று இரவு 2 மணி வரைக்கும் இருந்த நடிகையான ஹேமா கதறி அழுந்துள்ளார். இது நீ இல்லை சித்து.. இந்த மாதிரி நீ பண்ணி இருக்க கூடாது என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சித்ராவை பற்றி கூறியிருக்கிறார் ஹேமா. அதுமட்டுமல்லாமல் கடைசியாக அவர்கள் நேற்று இரவு எடுத்துக்கொண்ட சூட்டிங் ஸ்பாட் போட்டோக்களையும் வெளியிட்டு மிஸ் யூ என்று கூறியிருக்கிறார்.

நீ இல்லை சித்து.. இப்படி செய்திருக்கக் கூடாது

நீ இல்லை சித்து.. இப்படி செய்திருக்கக் கூடாது

இவர்கள் இருவரும் சீரியலில் அண்ணன் தம்பியரின் மனைவிகளாக நடித்துக் கொண்டிருந்தாலும் உண்மையில் நெருங்கிய தோழிகள் தானாம். விஜே சித்ரா உடன் இவர் மட்டுமல்லாமல் நடித்த அனைத்து நடிகைகளும் தோழிகளாக தான் பழகி வந்தார்கள் .இவர்கள் அனைவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக டிக் டாக் மியூசிக்கலி ஆப் களில் வீடியோக்களை எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துகொண்டிருந்தார்கள்.

கண்ணீரில் ரசிகர்கள்

கண்ணீரில் ரசிகர்கள்

தற்போது அந்த வீடியோக்களை மீண்டும் சித்ராவின் நினைவாக போஸ்ட் பண்ணி இருக்கிறார்கள் .அதை பார்த்து ரசிகர்கள் கண்ணீர் வடித்து தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். ஹேமாவும் அவரது கணவரும் சித்ரா இறந்தது இன்னமும் எங்களால் நம்ப முடியவில்லை. அதுவும் அவர் தற்கொலை பண்ணி இறந்தார் என்பதை கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை .ஏனென்றால் அவர் அந்த அளவிற்கு போல்டான கேரக்டர்.

இப்படிப் பண்ணாலாமா சித்து

இப்படிப் பண்ணாலாமா சித்து

அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கே ரோல் மாடலாக இருந்து கொண்டிருக்கிறார் ஏனென்றால் பலரும் சினிமா துறையில் காலடி எடுத்து வைப்பது ஒன்றும் புதிதல்ல ஆனால் இவர் இந்த அளவிற்கு கஷ்டப்பட்டு முன்னேறி வந்திருந்தார் . கஷ்டப்படும் காலங்கள் எல்லாம் தாண்டி வந்து தனக்குன்னு ஒரு அங்கீகாரத்தை கிடைத்த பிறகு இவர் எதற்காக இப்படி எல்லாம் செய்தார்.

துயரத்தில் மூழ்கிய ரசிகர்கள்

துயரத்தில் மூழ்கிய ரசிகர்கள்

அவர் சீக்கிரத்தில் இந்த மாதிரி ஒரு முடிவை எடுக்குற ஆளு கிடையாது என்று கூறியிருக்கிறார். இவர்கள் நடிகர்களாக மட்டுமல்லாமல் ஒரு குடும்ப நண்பர்களாகத்தான் பழகி வந்திருக்கிறார்கள். அதனால் சித்ராவை பற்றி நன்றாகவே தெரியும் என்று கூறி இருக்கிறார்கள். இவர்கள் இந்த மாதிரி கூறியிருப்பது சித்ராவின் ரசிகர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+