Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முல்லையை இழந்து... தனம் அக்காவின் மெளன அழுகை..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முல்லை இனி இல்லை என்பதேயே யாராலும் நம்ப முடியவில்லை. அந்த சீரியலில் சித்ராவுடன் நடித்த ஒவ்வொருவரும் துவண்டு போயுள்ளனர்.

இனி முன்பு போல இயல்பாக நடிக்க முடியுமா என்று கூட தெரியவில்லை.அப்படி நொறுங்கிப் போயுள்ளனராம் ஒவ்வொருவரும்.

முல்லை கேரக்டருக்கு அடுத்து மக்களால் அதிகம் ரசிக்கப்படும் கேரக்டர் மூத்தவரான தனம் கேரக்டர்தான். பிரபல நடிகை சுஜிதாதான் இந்த தனம் கேரக்டரில் நடித்து வந்தார்.

மூத்த மருமகள் தனம்

மூத்த மருமகள் தனம்

ஒரு குடும்பத்தில் மூத்த மருமகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சரியான உதாரணமாக தனம் கேரக்டரைத்தான் பலரும் குறிப்பிட்டு சொல்வார்கள் .அந்த அளவுக்கு அருமையான பாத்திரம் இது .இந்த கேரக்டரில் எதார்த்தமாக நடித்துக் கொண்டிருப்பவர்தான் தனம்.

முல்லை - தனம்

முல்லை - தனம்

தனம் மற்றும் முல்லை கேரக்டர்கள்தான் இந்த தொடரின் முக்கிய அடிநாதமாகவே இருக்கிறது . வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளையெல்லாம் தனம்தான் தனது தலையில் போட்டுக் கொண்டு அதை சரி செய்ய ஓடி ஓடி பாடுபடுவார் .அவருக்கு உற்ற துணையாக இருந்தவர்தான் முல்லை .இப்போது முல்லை போன வீட்டை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று சொல்கிறார்கள் ரசிகர்கள்.

சந்தோஷம் போய் சோகம்

சந்தோஷம் போய் சோகம்

நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்தவர் தனம் .அவர் சமீபத்தில்தான் கர்ப்பம் தரித்தார் என்ற நல்ல செய்தி வந்து வீடே உற்சாகத்தில் மூழ்கிப் போயிருந்தது .இந்த நிலையில் முல்லையின் மரணச் செய்தி வந்து அனைவரையும் நிலை குலைய வைத்துள்ளது .இந்த சோகத்தை எப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் தாங்கிக் கொள்ளும் என்ற வேதனையும் கூடவே எழுந்துள்ளது.

தனத்துக்கு இழப்புதான்

தனத்துக்கு இழப்புதான்

சித்ராவின் மரணத்தை தனித்துப் பார்க்க முடியாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகவே ரசிகர்களும் பார்க்கிறார்கள். என்னதான் வேறு நடிகை வந்து நடித்தாலும் கூட சித்ராவின் இடத்தில் யாரையும் வைத்துப் பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு ஒரு சீரியலை உயிரோட்டமாக வைத்துக் கொண்டு ரசிகர்களை இறுக்கிப் பிடிக்க முடியும் என்பதை காட்டி விட்டுச் சென்றுள்ளார் சித்ரா.

சந்தோஷம் பறி போனது

சந்தோஷம் பறி போனது

சமீபத்தில்தான் தனது வீட்டை ரசிகர்களுக்குசுட்டிக் காட்டி குதூகலித்திருந்தார் தனம். அந்த வீட்டில் அவர் காட்டிய கேரக்டர்களில் முல்லையும் இடம் பெற்றிருந்தார் .ஆனால் இப்படி ஆகும் என்று அப்போது தனம் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார். அது தனது யூடியூப் சானலுக்காக செய்த செயல் அது. ஆனால் இன்று முல்லை அவர்களுடன் இல்லை என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லைதான்.

உடைந்து போய் விட்ட தனம்

உடைந்து போய் விட்ட தனம்

சித்ராவின் மரணத்தால் தனமும் உடைந்து போயுள்ளார். அவரால் நீளமாக எழுதக் கூட முடியவில்லை. அமைதியாக உறங்கு முல்லை என்ற அர்த்தத்துடன் ஒரு புகைப்படத்துடன் சித்ராவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் தனம். உண்மையில் முல்லையின் இழப்பு தனத்துக்கும்தான் பேரிழப்பு.. அந்த முல்லையை பறி கொடுத்து விட்டு தனம் உடைந்து போயுள்ளார். உள்ளுக்குள் அழுது கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+