புடவை கட்டி மைக்கில் பேசும் இந்த சிறுமி யார் தெரியுதா? விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தான்! ஆனால், பாவம்!
சென்னை: இந்த படத்தில் குழந்தையாக இருக்கும் நடிகை விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற பல டாப் சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்தவர். அதிலும் சின்னத்திரையில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகையாக மட்டுமல்லாமல் டான்ஸர், தொகுப்பாளர் என்று பல திறமைகளை கொண்டு இருந்தவர். சோசியல் மீடியாவில் இந்த நடிகையின் புகைப்படங்கள் என வைரலாகி வருகிறது.
மேலே உள்ள புகைப்படத்தில் இருக்கும் நடிகை வேறு யாரும் இல்லை நடிகை விஜே சித்ரா தான். இவர் குறுகிய காலத்திலேயே சின்னதிரையில் தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்து விட்டார். ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாக வலம் வந்த விஜே சித்ரா திடீரென மரணம் அடைந்தது இப்போதும் அவருடைய ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாததாக தான் இருக்கிறது. ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலைகாட்டிய விஜே சித்ராவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான் பெரிய மணிமகுடத்தை கொடுத்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்தார் என்று சொல்வதை விடவும் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால் யார் கண் பட்டதோ அவருடைய வாழ்க்கை புரியாத புதிராகவே முடிந்துவிட்டது. அவர் இறப்பு தற்கொலையா? கொலையா? என்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. சைக்காலஜி படித்த விஜே சித்ரா தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று அவருடைய நெருங்கிய நண்பர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் அவரோடு அறையில் இருந்த அவருடைய கணவர் விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியிருக்கிறார்.

ரசிகர்கள் வருத்தம்
காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் விஜே சித்ராவின் பிறந்தநாள் மற்றும் இறந்த நாளில் அவருடைய நண்பர்கள் அவர் குறித்து உருக்கமான பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜே சித்ராவின் வழக்கில் எந்த மாற்றமும் முன்னேற்றமும் இல்லை என்று அவருடைய தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். அதுவும் அனைவரையும் வருத்தத்தில் அடைய வைத்தது.

விஜே சித்ராவின் இறப்பு
வீட்டிற்கு ஒரே பிள்ளையான விஜே சித்ராவை பறிகொடுத்த அவருடைய தந்தையும் தாயும் நடை பிணமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இப்போது தந்தையும் விஜே சித்ரா வாழ்ந்த அதே அறையில் காலமான நிலையில் அவருடைய அம்மா மட்டும் அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார். விஜே சித்ராவின் அம்மாவுக்கு விஜே சித்ராவின் ரசிகர்கள் தான் உறுதுணையாக சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சில நடிகைகளை பார்க்கும் போது பக்கத்து வீட்டுக்கு பெண் போன்று இருப்பார்கள். அந்த வரிசையில் ஒருவர் தான் விஜே சித்ராவும் அவர் கடந்த 2020 டிசம்பர் 9ல் அகால மரணம் அடைந்தார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications