Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியம்.. டிடி கேட்ட ஒரே கேள்வி! சேனல் அஸ்திவாரத்தையே மாற்றியது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுப்பாளர்களில் பிரபலமான டிடி என்ற திவ்யதர்ஷினி அவருடைய தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியம் அதற்கு பிறகு அவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பது பற்றி "ஆர்ஜே ஷா" தன்னுடைய யூடியூப் சேனலில் பகிர்ந்து இருக்கும் வீடியோவை இணையத்தில் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து டிடியை பாராட்டி வருகிறார்கள்.

விஜய் டிவியில் அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான டிடி ஆரம்பத்தில் அவருடைய வீட்டில் செல்ல பிள்ளையாக இருந்தாலும் அப்பா பல விஷயங்களை குழந்தை பருவத்தில் இருந்து சொல்லி கொடுத்தார். அதிலும் டிடியின் குழந்தை பருவத்தில் அவருடைய அப்பா ஸ்கூல் பீஸ் கட்டுவதற்காக ஸ்கூலுக்கு வரும்போது டிடியை கூட்டிக்கொண்டு போய் அவருடைய ஸ்கூல் ஃபீஸ் செல்லானை நிரப்ப வைத்து டிடி கையில் பணத்தை கொடுத்து தான் பணத்தை கட்ட சொல்லுவாராம்.

VJ divyadarshini how the promise she made to her father changed her life

அது ஸ்கூல் படிப்பிலிருந்து தொடங்கி கல்லூரி படிப்பு வரைக்கும் நீண்டு கொண்டே இருந்திருக்கிறது. எந்த வேலையாக இருந்தாலும் நீயே கற்றுக் கொள்ள வேண்டும் என்று பக்கத்தில் இருந்து அவருடைய தந்தை சொல்லிக் கொடுக்க டிடி தான் அவருடைய வேலைகளை செய்திருந்திருக்கிறார். அப்படியான நிலையில் தான் திடீரென்று அவருடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது.

அந்த நேரத்தில் தன்னுடைய தந்தையிடம் டிடி நீங்கள் கவலைப்படாதீங்க அப்பா நான் நம்முடைய குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்து இருக்கிறார். டிடி சத்தியம் செய்து கொடுத்த சில மணி நேரத்திலேயே அவருடைய தந்தை உயிர் போய்விட்டதாம். அதற்குப் பிறகு டிடியின் அக்கா பிரியதர்ஷினி (அதாவது எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவாக நடிக்கும் பிரியதர்ஷினி) மற்றும் டிடி இருவரும் தான் தங்களுடைய குடும்பத்தின் மொத்த பாரத்தையும் சுமக்க தொடங்கி இருக்கிறார்கள்.

கல்லூரி படிக்கும் போது டிடி தனக்கு கிடைக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்து வந்து இருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க டிடிக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போதுதான் விஜய் டிவியில் நடக்கும் மீட்டிங்கில் டிடி கொடுத்த அட்வைஸ் பெரிய அளவில் அவருக்கு மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

அதாவது ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஜோடி ஒன்று, ஜோடி 2 என்று நிகழ்ச்சிகள் தான் தொடங்கி இருக்கிறது. ஆனால் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை போன்று ஜோடி சீசன் 1, ஜோடி சீசன் 2 என்று சீசன் என்ற பெயரை பயன்படுத்தலாம் என்று டி டி தான் மீட்டிங்கில் ஐடியா கொடுத்தாராம். அது பெரிய அளவில் விஜய் டிவிக்கு வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. அதுபோல விஜய் டிவியில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி என்றால் அது ஜோடி நிகழ்ச்சி தான்.

அந்த நிகழ்ச்சியை தொகுப்பாளராக தொகுத்து வழங்கியது டிடி தான். அதுவும் நடிகர் சிம்பு நடுவராக இருக்கும்போது பப்லு அதில் போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது இருவருக்கும் இடையே பெரிய அளவில் வாக்குவாதம் வெடித்தது. அந்த எபிசோடு தான் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியில் பெரிய அளவில் முதல் முறையாக கிட் அடித்த எபிசோடு.

அந்த நேரத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது டிடி தான். அதுவும் சிம்பு, பப்லுவிடம் சண்டை போட்டுவிட்டு எனக்கு நடிக்க தெரியாது.. எனக்கு நடிக்க தெரியாது என்று பேசிய வசனம் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது. அப்போது சிம்பு கோபப்பட்டு வெளியே போய்விடுவார். பிறகு சமாதானம் ஆகி மீண்டும் நிகழ்ச்சிக்கு வருவார்.

அந்த நேரத்தில் டிடி தான் சூழ்நிலையை கூலாக கையாண்டு இருந்தார். அதற்குப் பிறகுதான் டிடிக்கு பிரபலங்களை பேட்டி எடுக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் டிடி விஜய் டிவியில் டாப் தொகுப்பாளினியாக இருந்தார். அப்போதுதான் அவருக்கு திருமணம் முடிவடைந்தது. திருமணம் முடிந்து ஒரு சில மாதங்களுக்குள் அவருக்கும் அவருடைய கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் டிடி நடிகை ரம்யா கிருஷ்ணனை பேட்டி எடுப்பதற்காக ஆயத்த பணியில் இருக்கும் போது அவருக்கு ஒரு போன் பண்ணி வந்திருக்கிறது. அப்போதுதான் அவருக்கு விவாகரத்து உறுதியான செய்தி கிடைத்திருக்கிறது. திருமண வாழ்க்கை உடைந்து போய் மன வருத்தத்தில் இருந்த டிடி கேமராவுக்கு முன்னாடி ரம்யா கிருஷ்ணரிடம் சகஜமாக ஜாலியாக பேசி பேட்டியை எடுத்து முடித்து இருக்கிறார்.

பேட்டி முடிந்த பிறகு தான் தான் தனியாக இருந்து அழுதேன் என்றும் ஒரு நிகழ்ச்சியில் டிடி பேசி இருந்தார். இப்படியாக பல திறமையோடு இருந்த டிடிக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அவருடைய காலில் ஏற்பட்ட வலிக்காக ஆபரேஷன் செய்திருந்த நிலையில் அது தவறாக செய்யப்பட்டதால் மீண்டும் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. ஆனால் டிடியின் கால் வலி மட்டும் சரியாகவில்லை.

இப்போது டிடியால் அதிகமான நேரம் நிற்க முடியாது அதனாலேயே டிடிக்கு வாய்ப்புகள் குறைந்து விட்டது. நன்றாக இருக்கும் போது அவரை பயன்படுத்திக் கொண்ட சேனல் டிடிக்கு உடல்நிலை பிரச்சனை வந்ததும் வாய்ப்புகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிடி தொகுப்பாளர்களுக்கு தயவு செய்து ஒரு சீட் கொடுங்க. அவங்க அமர்ந்து பேட்டி எடுப்பது போல ஏற்பாடுகள் செய்யுங்க. அவர்கள் பத்து மணி நேரத்திற்கு மேலாக நின்று கொண்டே நிகழ்ச்சியை நடத்துவதால் அவர்களுடைய கால்கள், முதுகு பலவீனமாகி விடுகிறது என்று கூறியிருந்தார்.

இது பெரிய அளவில் இணையத்தில் பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் டிடி சொன்ன ஐடியாவிற்காக பல தொகுப்பாளர் மற்றும் தொகுப்பாளினிகள் ஆதரவு தெரிவித்து இருந்தார்கள். ஆனாலும் டிடி இப்போது நிகழ்ச்சிகளில் காணப்படவில்லை என்பது ரசிகர்களின் வருத்தமாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+