விஜே மகேஸ்வரிக்கு வந்த அசிங்கமான கமெண்ட்.. அதற்கு வெளிப்படையாக அவர் கொடுத்த பதில்
சென்னை: நடிகையாகவும், தொகுப்பாளராகவும் பலருக்கும் பரிச்சயமான விஜே மகேஸ்வரி சமூக வலைதளத்தில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வரும் மகேஸ்வரிக்கு ஒரு சில நெகட்டிவ் கமெண்ட்கள் வருவதுண்டு. அது குறித்து மகேஸ்வரி இப்போது வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
விஜே மகேஸ்வரி பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே சன் மியூசிக் சேனலில் ஆங்கரிங் ஆடிசனுக்கு சென்று அதில் தேர்வாகி தொகுப்பாளராக மாறி இருக்கிறார். அன்று தொடங்கிய அவருடைய மீடியா பயணம் இப்ப வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மகேஸ்வரியின் அப்பா அவருடைய அம்மாவை விட்டு சென்று விட்டதால் 14 வயசிலேயே குடும்ப பொறுப்பு ஏற்கும் நிலைமைக்கு விஜே மகேஸ்வரி தள்ளப்பட்டு இருக்கிறார்.

ஸ்கூல் முடித்ததும் கல்லூரியில் சேர்ந்த மகேஸ்வரி பி காம் படித்துக் கொண்டு தொகுப்பாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் படித்து முடித்ததும் வேற வேலைக்கு போய்விடலாம் என்று முதலில் முடிவு எடுத்திருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு மீடியாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவும் அதையே தொடர்ந்து இருக்கிறார். அந்த நேரத்தில் தான் அவருக்கு திருமணம் ஆகி இருக்கிறது.
திருமணமாகி குழந்தை பிறந்ததும் ஒன்றரை வருடம் மீடியாவில் இருந்து விலகி இருந்த விஜே மகேஸ்வரிக்கு வாழ்க்கையில் புயல் வீச தொடங்கி இருக்கிறது. அவருடைய திருமண வாழ்க்கை அவர் எதிர்பார்த்த அளவிற்கு அமையாமல் கணவரோடு கருத்து வேறுபாடு ஏற்படவே கணவரை பிரிந்து தன்னுடைய குழந்தையை தன் அம்மாவிடம் விட்டு விட்டு மீண்டும் தொகுப்பாளராக வேலையை தொடங்கி இருக்கிறார்.
அந்த நேரத்தில் தான் ஜீ தமிழில் அதிர்ஷ்ட லட்சுமி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுபோல புதுக்கவிதை, தாயுமானவன் என்று சீரியலிலும் நடித்துக் கொண்டிருந்தார். பிறகு பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதோடு சென்னை 600028 திரைப்படத்தின் இரண்டாவது பாகம், பியார் பிரேமா காதல், ரைட்டர், விக்ரம் போன்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் காஸ்ட்யூம் டிசைனர் ஆகவும் இருக்கும் மகேஸ்வரி அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். இது குறித்து ஒரு சிலர் அவருடைய உடல் அமைப்பு மற்றும் அங்கே தெரியுது இங்கே தெரியுது என்று சில கமெண்ட் போட்டு மகேஸ்வரியின் கேரக்டர் குறித்தும் நெகட்டிவ் ஆக பேசி வருகிறார்கள்.
இது குறித்து மகேஸ்வரி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் மகேஸ்வரி பேசுகையில் இந்த மாதிரி நெகட்டிவ் கமாண்ட்களால் ஒரு சதவீதம் கூட பயன் கிடையாது. நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த விஷயம் எனக்கு பெரியதாக தெரியவில்லை. என்னைப் பற்றியோ என் உடல் அமைப்பு பற்றியோ ஒரு நிமிடம் நெகட்டிவாக பேசுறவர் பேசிட்டு போகிறார்.
அதை நினைத்து நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் என்னுடைய அடுத்த கட்டத்திற்கு நான் போக முடியாது. எனக்கு என்னுடைய மகனை சரியாக வளர்க்க வேண்டும். என்னுடைய அம்மாவை பார்த்து கொள்ள வேண்டும். என்னையும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏகப்பட்ட வேலை இருக்கிறது. இந்த நிலையில் என்னை பற்றி முகம் தெரியாத ஒருவர் பேசுவதை நினைத்து நான் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று அதில் மகேஸ்வரி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications