நடிகை அனுபமாவுக்கு நடந்தது தான் என் வாழ்க்கையிலும்.. டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்! விஜே மகேஸ்வரி ஓபன்
சென்னை: சில நாட்களுக்கு முன்பு நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது முன்னாள் காதலினால் தான் பட்ட வலி, வேதனைகள் குறித்து பேசி இருந்தார். இதுதான் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. இந்த பேட்டி வெளியாகிய சில நாட்கள் கடந்துவிட்ட நிலையில் தன்னுடைய திருமண வாழ்க்கையிலும் அனுபமாவிற்க்கு நடந்தது போல தான் நடந்தது என்று ஒரு பேட்டியில் விஜே மகேஸ்வரி பேசி இருக்கிறார்.
விஜே மகேஸ்வரி ஆரம்பத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். அதுபோல விஜய் டிவி, எஸ்எஸ் மியூசிக்கிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார். அதற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. அதுபோல ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
நடிகை விஜே மகேஸ்வரி பேட்டி
குறிப்பாக விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாகவும் நடித்திருந்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும் சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். தன்னுடைய ஹோம் டூர் வீடியோக்களை வெளியிட்டு பெரியளவில் பரபரப்பு ஏற்படுத்தினார். வீட்டிற்குள் பார் செட்டப் வைத்து இருப்பதை அவர் காட்ட அது அதிகமான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் இப்போது அவர் தனது முதல் திருமண வாழ்க்கை குறித்து பேசும்போது, எல்லோருமே கல்யாணம் பண்ணும் போது இந்த வாழ்க்கையின் ரொம்ப ஜாலியாக, சந்தோஷமாக இருக்க வேண்டும், இந்த வாழ்க்கை தான் நமக்கு கடைசி வரைக்கும் வரவேண்டும் என்று நினைப்போம். அதேபோலத்தான் நானும் நினைத்தேன். ஆனால் அங்கே இருக்கும் சில விஷயங்கள் நமக்கு அதிர்ச்சியை கொடுத்து விடும்.
20 வருட வலி
அதாவது நம்முடைய வாழ்க்கை துணையுடைய கேரக்டர் நாம எதிர்பார்த்தபடி இல்லாமல் இருக்கும்போது நமக்கு ஒரு ஏமாற்றம் கிடைக்கும். அது தான் என்னுடைய வாழ்க்கையிலும் கிடைத்தது. சமீபத்தில் கூட நடிகை அனுபமா தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து பேசினார். அதில் அவங்க சொல்ற விஷயங்களை எல்லாம் பார்த்தால் நான் 20 வருஷத்துக்கு முன்னாடி அனுபவித்த பிரச்சினைகள் போலவே தான் இருந்தது.
என்னுடைய திருமண வாழ்க்கையில் நானும் எவ்வளவோ பிரச்சனைகளையும் சமாளித்து கொண்டிருந்தேன். ஆனால் அந்த நபர் ஒரு நாள் அந்நியன் போல தான் நடந்து கொள்வார். இன்னொரு நாள் ரெமோ போல நடந்து கொள்வார். அடுத்த நாள் அம்பி போல நடந்து கொள்வார். ஆனால் அதை எல்லாம் தாங்குற மாதிரி நம்முடைய உடல் நிலையும், மனநிலையும் இருக்காது. பொதுவாக நீங்கள் பார்த்தீங்க என்றால் உங்களுக்கே தெரியும் அவங்க ரொம்ப சந்தோஷமா இருக்கிறவங்களுடைய முகத்திலேயே ஒரு பொலிவு தெரியும். ஆனா அது நம்முடைய வாழ்க்கையிலே இல்லை.
திருமண வாழ்க்கை பிரச்சனைகள்
அதனால் தான் ஒரு கட்டத்தில் அந்த இடத்தை விட்டு வந்து விடுவது நல்லது என்று முடிவெடுத்திருக்கிறோம். டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்து தினமும் அழுது கொண்டிருப்பதை விட அதிலிருந்து வெளியே வந்து விடுவது நல்லது என்று மகேஸ்வரி பேசியிருந்தார். அப்போது அவரிடம் 2வது கல்யாணத்தை பற்றி என்ன முடிவு எடுத்து இருக்கீங்க? என்று கேட்டதற்கு, இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை. என்னுடைய பையன் வளர்ந்து விட்டான் அவன் என்னை நன்றாகவே புரிந்து கொண்டு இருக்கிறார்.

விவாகரத்துக்கான காரணம்
என்னுடைய வாழ்க்கையில் இனி ஒரு துணை தேவை என்றால் அது நானும் என்னுடைய பையனும் எடுக்கிற முடிவாக இருக்கும் அவ்வளவுதான் என்று சொல்லி இருக்கிறார். விஜே மகேஸ்வரி சாணக்யா என்பவரை திருமணம் செய்திருந்தார். அவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். தான் விவாகரத்து செய்வதற்கு முக்கிய காரணம் தன்னுடைய கணவரும் அவருடைய குடும்பத்தினரும் மன்னாதளவிலும், உடல் அளவிலும் தன்னை கொடுமைப்படுத்தினார்கள் என்றும், நான் நடிப்பதற்கும், ஆங்கரிங் செய்வதற்கும் அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்றும் ஆரம்பத்தில் பேசி இருந்தார். இப்போது நடிகை அனுபமாவை போலவே தானும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
