Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரியல் சூரியவம்சம் தம்பதியாக மாறிய மணிமேகலை.. கணவரோடு சொன்ன மகிழ்ச்சி செய்தி.. குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜே மணிமேகலை கடந்த வருடத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறி இருந்தார். அதற்கு பிறகு இப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக மாறி இருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மணிமேகலை நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டிருக்கிறார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு சன் மியூசிக் தொலைக்காட்சியில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய மணிமேகலை இப்போது சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பலருக்கும் பரிட்சயமானவராக இருக்கிறார். சின்னத்திரையில் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதேபோல சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

யூடியூப்பர் மணிமேகலை

தான் செய்யும் சின்ன சின்ன செயல்களையும் தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். இதன் மூலம் இவருக்கு அதிகமான ரசிகர்கள் பாலோவராக இருக்கிறார்கள். அதன் மூலம் இவருக்கு அதிகப்படியான வருமானமும் வந்து கொண்டிருக்கிறது. அதுபோல காலேஜ் படிக்கும் போதே சன் மியூசிக்கில் வேலைக்கு சேர்ந்த மணிமேகலை ஒன்பது வருடங்களாக அதில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

காதல் திருமணம்

அந்த நிகழ்ச்சி மூலமாக மணிமேகலைக்கு அதிகமான ரசிகர்கள் உருவானார்கள். பேமஸான தொகுப்பாளினியாக இருக்கும்போது டான்சர் ஹுசேனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹுசேன் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் உடன் டான்ஸ் ஆடுவதை பார்த்து தான் மணிமேகலைக்கு ஹுசேனை பிடித்து போனதாம்.

திடீர் திருமணம்

போனிலேயே தன்னுடைய காதலை ஹுசேனிடம் சொல்ல அதற்கு முதலில் ஹுசேன் மறுத்திருக்கிறார் பிறகு இரண்டு பேரும் நட்பாகப் பழகி பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி எளிமையாக ரிஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணத்தில் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது. இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் பல விமர்சனங்கள் வந்தது ஆனால் அதை எல்லாம் தாண்டி மணிமேகலை தன்னுடைய கணவரோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை

திருமணத்திற்கு பிறகு ஆரம்பத்தில் ஒரு சாதாரண வீட்டில் குடியேறிய மணிமேகலை இரண்டு குடும்பத்தினரின் சப்போர்ட் இல்லாமல் முன்னேறுவதற்கு பல சவால்களை சந்தித்து இப்போது அடுத்தடுத்து வெற்றி கொண்டே இருக்கிறார்கள். தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவரோடு சேர்ந்து டான்ஸ் ஆடி இது இரண்டாவது ரன்னர் மாறினார்.

குக் வித் கோமாளி பிரபலம்

அதற்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர்ந்து நான்கு சீசன்களாக கோமாளியாக இருந்து ஐந்தாவது சீசனில் தொகுப்பாளினியாக மாறி இருந்தார். அப்போது அவருக்கும் பிரியங்காவிற்கும் இருந்த கருத்து வேறுபாடால் அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மறைமுகமாக பதிவு வெளியிட்டிருந்தார்.

பிரியங்கா உடன் சண்டை

அப்போது மணிமேகலைக்கு ஆதரவாக ரசிகர்கள் பிரியங்காவை திட்டி தீர்த்து வந்தனர். ஆனால் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்து கொண்டு இருந்தனர். இந்த பஞ்சாயத்து சில மாதங்களாக அமைதியாக இருக்கும் இந்நிலையில் இப்போது மணிமேகலை ஜீ தமிழில் தொகுப்பாளினியாக மாறி இருக்கிறார்.

அடுத்தடுத்து வளர்ச்சி

இந்த நிலையில் கொரோனா சமயத்தில் ஹுசைன் கிராமத்தில் நிலம் ஒன்றை வாங்கி அங்கு பண்ணை வீட்டை கட்டிக் கொண்டிருக்கும் மணிமேகலை அதற்கு முன்பே சென்னையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதுபோல் இரண்டு சொகுசு கார், சொகுசு பைக் என்று அடுத்தடுத்து வளர்ந்து கொண்டே இருக்கிறார். இதைத்தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் தான் புதியதாக அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி உள்ளதாக ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

புது வீட்டின் சாவி

அந்த வீட்டின் மதிப்பு ஒரு கோடியில் இருந்து ஒன்றரை கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மகிழ்ச்சியான தகவலை தன்னுடைய கணவரோடு சேர்ந்து மணிமேகலை அறிவித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த வீட்டின் சாவி தற்போது மணிமேகலை மற்றும் அவருடைய கணவரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

ரியல் சூர்ய வம்சம் ஜோடி

இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் விரைவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. என்னதான் தன்னைப் பற்றிய விமர்சனங்கள் வந்தாலும் மணிமேகலை எப்போதும் சொல்வது போலவே ரியல் சூரியவம்சம் ஜோடியாக இப்போது மணிமேகலை வளர்ந்து கொண்டு இருப்பது குறித்து அவருடைய ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வாழ்த்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+