பல நாள் கனவு.. தொட்டில் பரிசு கிடைத்தது.. சந்தோஷத்தில் கணவர் காலில் விழுந்த மணிமேகலை.. குவியும் வாழ்த்து
சென்னை: விஜே மணிமேகலையின் பிறந்த நாளில் அவருக்கு எதிர்பார்க்காத பல பரிசுகள் கிடைத்து இருக்கிறது. இந்த பிறந்தநாள் அவருக்கு மகிழ்ச்சி நிறைந்ததாகவே தொடங்கி இருக்கிறது. விஜய் டிவியிலிருந்து வெளிவந்த பிறகு இந்த வருடம் தான் ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் மணிமேகலை தொகுப்பாளினியாக கலந்து கொண்டார். அவருக்கு இப்போது ஜீ தமிழ் சார்பாக பல மகிழ்ச்சியான விஷயங்கள் நடந்திருக்கிறது.
பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்கள் கையில் இருப்பது தவறினால் அதைவிட பெருசா கிடைக்கும் என்று சொல்வார்கள். அது போலதான் இப்போது மணிமேகலை வாழ்க்கையில் நடந்திருக்கிறது. மணிமேகலை விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாகவும் கோமாளியாகவும் இருந்து இருக்கிறார். ஆரம்பத்தில் சன் மியூசிக்கல் தன்னுடைய விஜே பயணத்தை தொடங்கிய மணிமேகலை தன்னுடைய கணவர் ஹுசைனை காதல் திருமணம் செய்த பிறகு விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவரும் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டனர்.

விஜய் டிவியை விட்டு விலகல்
அதற்குப் பிறகு மணிமேகலைக்கு விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் தான் குக் வித் கோமாளியில் கோமாளியாக கலந்து கொண்டார். முதல் நான்கு சீசன்கள் கோமாளியாக இருந்த மணி மேகலை ஐந்தாவது சீசனில் தொகுப்பாளினியாக மாறி இருந்தார். ஆனாலும் அந்த நிகழ்ச்சி முடிவடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜே பிரியங்கா உடன் கருத்து வேறுபாடால் அந்த நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறி இருந்தார். அந்த நேரத்தில் இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது.
மணிமேகலைக்கு கிடைத்த வாய்ப்பு
ஆனால் அந்த நிகழ்ச்சி முடிவடைந்து சில மாதங்கள் கடந்து மணிமேகலைக்கு ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக மணிமேகலைக்கு இப்போது ஆதரவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவருக்குள் இருக்கும் குழந்தைத்தனமான கேரக்டரை இப்போது எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சினேகா கொடுத்த பரிசு
இந்த நிலையில் தான் கடந்த வாரத்தில் மணிமேகலையில் பிறந்த நாள் வந்திருக்கிறது. பிறந்த நாளில் மணிமேகலைக்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் குழுவினர்கள் பல சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் நடிகை சினேகா மணிமேகலைக்கு பட்டுப்புடவை பரிசாக கொடுத்திருந்தார் அதோடு மணிமேகலை தன்னுடைய சகோதரி தான், இது ஒரு சின்ன சர்ப்ரைஸ் அவ்வளவுதான். ஆனால் நம்முடைய பயணம் இனி வாழ்க்கை முழுக்க இருக்கும் என்று உறுதி கூறியிருந்தார்.
வரலட்சுமி கொடுத்த பரிசு
அதைத் தொடர்ந்து நடிகை வரலட்சுமி மணிமேகலைக்கு பிடித்த கூலிங் கிளாஸ் வாங்கி கொடுத்திருந்தார். அடுத்ததாக பாபா பாஸ்கர் மணிமேகலைக்காக ஒரு தொட்டில் வாங்கிக் கொண்டிருந்தார். தொட்டிலை பார்த்ததும் மணிமேகலை எமோஷனல் கலந்து வெட்கப்பட்டு இருந்தார். அப்போது பாபா பாஸ்கர் மணிமேகலையின் வீட்டில் சீக்கிரமாக இந்த தொட்டிலுக்கு ஒரு குழந்தை வரவேண்டும், அந்த குழந்தையின் குழந்தையும் இந்த தொட்டிலில் தூங்க வேண்டும், இது ஒரு அப்பாவாக என்னுடைய ஆசை என்று பாபா பாஸ்கர் பேச பேச மணிமேகலை கதறி அழுதுவிட்டார்.

கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்
அந்த நேரத்தில் மணிமேகலையின் கணவர் ஹுசைனும் அந்த நிகழ்ச்சிக்கு கெஸ்ட் ஆக வந்து இருந்தார். அவரை பார்த்ததும் சர்ப்ரைஸ் ஆன மணிமேகலை ஹுசைன் காலில் விழுத்து ஆசீர்வாதம் வாங்கி இருந்தார். அப்போதும் கூட இவர்கள் எப்போதும் போல ஜாலியாகவே விளையாடிக் கொண்டிருந்தனர். மணிமேகலை நடிக்கிறார், இதையெல்லாம் நம்பாதீர்கள் என்று ஒரு உசேன் கிண்டல் செய்து கொண்டிருந்தார்.
எமோஷனல் தருணம்
பிறகு மணிமேகலையின் தம்பி கேக் வாங்கி கொண்டு வந்து இருந்தார். மணிமேகலை தன்னுடைய அப்பா தன்னிடம் பேசவில்லை என்பதால் அந்த வருத்தத்தை பல இடங்களில் காட்டியிருக்கிறார். இப்போது மணிமேகலைக்கு தம்பி அவர் அப்பாவும் தங்களுடைய குடும்பத்தில் சேர்ந்து இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பரிசு கொடுத்திருந்தார். அதை பார்த்தது மணிமேகலை கண்கலங்கி அழுதுவிட்டார். இந்த எபிசோடு வெளியான பிறகு மணிமேகலைக்கு விஜய் டிவியில் கூட இவ்வளவு சர்ப்ரைஸ் கொடுத்து இருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் இப்போது அவர் அந்த நிகழ்ச்சியை விட்டு வந்தது நல்ல முடிவு என்று பலர் பாராட்டி வருகிறார்கள். அதேபோல மணிமேகலை ஆசைப்பட்டது போலவே அவருடைய குழந்தை கனவு நிறைவேற வேண்டும் என்று பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications