Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரம்ஜானோடு மணிமேகலையின் ஸ்பெஷல் கொண்டாட்டம்.. சந்தோஷமாக போட்ட போஸ்ட்.. குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜே மணிமேகலை தன்னுடைய காதல் கணவர் ஹுசைன் உடன் சேர்ந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை மணிமேகலை பகிர்ந்து இருக்கும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

கல்லூரியில் படிக்கும் போது சன் மியூசிக்கில் விஜேவாக மணிமேகலை பணியாற்ற தொடங்கியிருந்தார். அப்போதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். அதைத்தொடர்ந்து இவருக்கு சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் காதல் கதை சுவாரசியமாக இருக்கும். அதை மேடை கிடைக்கும் இடம் எல்லாம் மணிமேகலை சொல்லிக் கொண்டே இருப்பார்.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

காதல் ரகசியம்

ராகவா லாரன்ஸ் மாஸ்டர் உடன் டான்ஸ் ஆடிய ஹுசேனை பார்த்து பிடித்துப்போன மணிமேகலை எப்படியாவது அவருடைய நம்பரை வாங்க வேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறார். பிறகு நண்பர்கள் மூலமாக ஹுசைன் நம்பர் கிடைத்தது. ஆரம்பத்தில் அவருடைய டான்ஸ் குறித்து பாராட்டி பேசி இருக்கிறார். இருவருக்கும் நட்பாக உரையாடல் தொடங்கி காதல் வந்திருக்கு.

காதல் திருமணம்

இவர்களுடைய காதல் விஷயத்தை வீட்டிலும் சொல்லும் போது சம்மதிக்கவில்லையாம் மணிமேகலை இது பற்றி சொல்லும் போது தன்னுடைய காதலைப் பற்றி என்னுடைய அப்பாவிடம் சொல்லும்போது எங்க அப்பா அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள் அப்படியே என்னை பார்த்து முறைச்சாங்க எனக்கு அப்பவே புரிஞ்சிடுச்சி அப்பாவுக்கு துளி கூட விருப்பம் இல்லை என்று ஹுசேன் என்ற பெயரை சொன்னதும் தான் அவர்களுக்கு அதிர்ச்சி. அதனால் தான் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி எளிமையாக திருமணம் செய்து கொண்டோம்.

வைராக்கியம்

ஆனால் திருமணத்திற்க்கு பிறகு எல்லோரும் சொன்ன மாதிரி கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதால் தங்களுடைய திருமண வாழ்க்கைக்காக பல கஷ்டங்களை பட்டோம். ஆரம்பத்தில் எல்லாம் கஷ்டங்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் கொடுத்த சப்போர்ட்டால் இன்று நாங்கள் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறோம் என்று மணிமேகலை கூறியிருக்கிறார்.

சூரியவம்சம் ரியல் ஜோடி

அதுபோல ரியல் லைப் சூரியவம்சம் ஜோடி என்று ரசிகர்கள் இவர்களை அழைக்கப்படுகிறார்கள். தாங்கள் வாங்கும் பைக் முதல் கார், வீடு என சின்ன பொருட்கள் முதல் பெரிய பொருள்கள் வரை எல்லாவற்றையும் தங்களுடைய youtube சேனலில் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதால் மட்டும் அல்லாமல் மணிமேகலைக்கு youtube சேனல் மூலமாக அதிக வருமானம் கிடைக்கிறது.

புது வீடு

சென்னையில் சொந்த வீடு வாங்கி அந்த வீட்டில் கிரகப்பிரவேச வீடியோ மற்றும் புகைப்படங்களை சமீபத்தில் தான் மணிமேகலை பகிர்ந்து இருந்தார். ஏற்கனவே தங்களுடைய கிராமத்திலும் ஒரு வீட்டை மணிமேகலை கட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான் பெரிய கனவாக இருந்தது அது நிறைவேறிவிட்டது என்று மணிமேகலை கூறியிருந்தார்.

புது சேனல்

இந்த நிலையில் 5 வருடங்களுக்கு மேலாக விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை இப்போது விஜய் டிவியில் இருந்து வெளியேறி ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக மாறி இருக்கிறார். அதே நேரத்தில் நேற்று ரம்ஜானை முன்னிட்டு அவர் தன்னுடைய புது வீட்டில் ரம்ஜானை கணவரோடு கொண்டாடி இருக்கிறார்.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

குவியும் வாழ்த்து

அப்போது எடுத்த புகைப்படங்களை மணிமேகலை பகிர்ந்து தன்னுடைய புது வீட்டில் தன் முதல் ரம்ஜான் கொண்டாட்டம் என்று மணிமேகலை கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். மணிமேகலையின் புகைப்படங்களை நடிகை வரலட்சுமி தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து மணிமேகலைக்கு வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+