விஜே மணிமேகலையின் கனவு நிறைவேறியது.. தன் வீட்டு கிரகப்பிரவேசத்தை எளிமையாக கொண்டாட்டம்
சென்னை: விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான விஜே மணிமேகலை தான் கட்டி வந்த புது வீட்டின் கிரகப்பிரவேசத்தை எளிமையாக கொண்டாடி இருக்கிறார். அது குறித்த வீடியோவை வெளியிட்டு இருக்கும் நிலையில் அது அதிகமாக பகிரப்பட்டு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
நடுத்தர வர்க்கத்தினர் அனைவருக்கும் வீடு கட்டுவது என்பது கனவாக தான் இருக்கும். அதை செய்து முடித்ததுமே பெரிய அளவில் சாதித்து முடித்ததாக எல்லோரும் ஃபீல் பண்ணுவார்கள். ஆனால் எல்லோராலும் நினைத்த மாதிரி வீடு கட்டி விடமுடியாது. பலர் லோன் வாங்கி வீடு கட்டி விட்டு அந்த லோனை அடைப்பதற்குள் படாதபாடு படுகிறார்கள். அதிலும் கணவன் மனைவி இரு வீட்டாரின் உதவியும் இல்லாமல் கணவன் மற்றும் மனைவி இருவரும் சொந்தமாக தங்களுடைய கனவு இல்லத்தை நிறைவேற்றுவது என்பது பெரிய சாதனைதான்.

அந்த மாதிரி ஒரு சாதனையை தான் இப்போது விஜே மணிமேகலை செய்திருக்கிறார். விஜே மணிமேகலை தன்னுடைய காதலன் உசேனை திருமணம் செய்து கொண்ட பிறகு பெரிய அளவில் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு இருந்தார். அதனாலையே இவர் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் "நாங்கள் தான் ரியல் லைப் சூரிய வம்சம் ஜோடி" என்று சொல்லிக் கொள்வார். அதுபோல ரசிகர்களும் அவர்களை அப்படித்தான் கூப்பிடுகிறார்கள்.
இவர்களுடைய காதலுக்கு இரண்டு வீட்டிலும் சம்மதம் கிடையாது. அதனாலேயே இவர்கள் தனியாக போராடி தங்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தில் ஜெயித்துக் கொண்டிருக்கின்றனர். மணிமேகலை தன்னுடைய சொந்த கிராமத்தில் கொஞ்சம் இடத்தை வாங்கி அதில் தான் வீடு கட்டிக் கொண்டு இருப்பதாக அடிக்கடி ரசிகர்களிடம் அப்டேட் கொடுத்துக் கொண்டே இருந்தார். இந்த நிலையில் தன்னுடைய இடத்தில் தான் புதியதாக கட்டி இருக்கும் ஒரு வீட்டின் கிரகப்பிரவேசத்தை முடித்திருக்கிறார்.

தன்னுடைய வீடு பிரமாண்டமாக இருந்தாலும் அது பக்கத்தில் இது பார்ம் ஹவுஸ் ஆனால் இதுதான் நாங்கள் முதலில் கட்டிய வீடு என்று அந்த ஃபார்ம் ஹவுஸின் கிரகப்பிரவேசத்தை எளிமையாக முடித்து இருக்கிறார். அதை தன்னுடைய youtube பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். மணிமேகலைக்கு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்தாளும் அதில் வரும் வருமானத்தை விட யூடியூப்பில் தான் அதிகமான வருமானம் வருகிறது.
காரணம் தான் செய்யும் சின்ன சின்ன செயல்களையும் அவர்களுடைய youtube சேனலில் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டே இருக்க அது அதிகமாக பகிரப்பட்டும் கருத்துக்கள் பெற்றும் வருகிறது. அந்த வகையில் இப்போது இவர் தன்னுடைய வீட்டு கிரகபிரவேச வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதை குறித்து பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே நான்காவது சீசனில் இருந்து திடீரென்று மணிமேகலை விலகி இருந்தார். பிறகு அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி இருந்தார். தற்போது வெளியாகி இருக்கும் ஐந்தாவது சீசனுக்கான ப்ரோமோவிலும் இவர் தொகுப்பாளராகவே களம் இறங்கி இருக்கிறார். இதனால் இன்னும் ஒரு சில நாட்களில் அந்த நிகழ்ச்சி தொடங்கிய பிறகு இவருடைய லூட்டியை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications