வீட்ல விசேஷம்.. மணிமேகலை வீட்டில் நடந்த பங்க்ஷன்.. இதுதான் சர்ப்ரைஸா? குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜே மணிமேகலைக்கு அவருடைய கணவர் நள்ளிரவு நேரத்தில் கேக் வெட்டி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் மணிமேகலைக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்

சோசியல் மீடியா பக்கங்களில் பலருக்கும் பிரபலமான வி.ஜே மணிமேகலை ஆரம்பத்தில் சன் மியூசிக்கில் தான் தன்னுடைய தொகுப்பாளினி வாழ்க்கையை தொடங்கினார். அந்த நிகழ்ச்சியில் ஆறு வருடங்களுக்கு மேலாக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது லாரன்ஸ் மாஸ்டர் உடன் டான்ஸ் ஆடிய ஹுசைனை பார்த்து பிடித்துப் போக அவரிடம் எப்படியாவது பேச வேண்டும் என்று தவியாக தவித்து வந்த மணிமேகலைக்கு அவருடைய நண்பர்கள் உதவி செய்திருந்தார்கள்.

Manimegalai Vijay TV

மணிமேகலையின் ஆரம்ப காலம்

ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய இவர்களுடைய பயணம் பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருடைய வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதம் இல்லை. இதனால் அவர்கள் வசித்து வந்த தெருவில் இருக்கும் ஒரு பிள்ளையார் கோவில் முன்பு வைத்து இருவரும் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு வாழ்ந்தால் சூரியவம்சம் சரத்குமார், தேவயானி போல வாழ வேண்டும் என்று உறுதிமொழி எடுத்த மணிமேகலை அதற்கு பிறகு சின்ன சின்னதாக தான் செய்யும் செயல்கள் எல்லாவற்றுக்குமே சூரியவம்சம் பாடலை போட்டு வைப் செய்து கொண்டிருக்கிறார்.

ரியல் சூர்யவம்சம் ஜோடி

இதை பல மேடைகளில் மணிமேகலையும் சொல்லி இருப்பார். அதனாலயே இவரை எல்லோரும் நீங்க தான் ரியல் லைஃப் சூர்யவம்சம் ஜோடி என்று பாராட்டி வருகிறார்கள். ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும் அதற்குப் பிறகு மணிமேகலை மற்றும் ஹுசைன் இருவரும் படிப்படியாக முன்னேறி இன்று சென்னையில் ஒரு வீடு, கிராமத்தில் ஒரு பண்ணை வீடு என்று அடுத்தடுத்து முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள்.

சோசியல் மீடியாவில் பிரபலம்

அதுபோல தாங்கள் வாங்கும் பைக் கார் போன்றவற்றையும் தங்களுடைய youtube சேனல்களில் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தாங்கள் சின்னதாக குக்கர் வாங்கினாலும் சரி இல்லது பெரிய பங்களா வாங்கினாலும் சரி அதை ரசிகர்களிடம் உடனே சொல்லி பகிர்ந்து கொள்கிறார். அதுபோல மணிமேகலை கடந்த வருடம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறி இருந்தார். அப்போது அவருக்கு அதிகமான ஆதரவு கிடைத்தது.

மணிமேகலை வெளியிட்ட வீடியோ

ஒரு சிலர் அவரை ட்ரோல் செய்து வந்தனர். ஆனாலும் மணிமேகலைக்கு அடுத்ததாக ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இப்போது அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மணிமேகலையின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காக மணிமேகலையின் கணவர் சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் என்கிற பெயரில் மணிமேகலையிடம் வசமாக சிக்கி இருக்கிறார்.

பிறந்தநாள் சர்ப்ரைஸ்

மணிமேகலை நள்ளிரவு நேரத்தில் எழுந்து உட்கார்ந்து கொண்டிருக்கும் போது அவருக்கு கேக் வாங்கிக் கொண்டு கேஷுவலாக நடந்து போக இதுதான் பிறந்தநாள் சர்ப்ரைஸாம் இதை தெரியாது என்பது போல நானும் நடித்து கொண்டு உட்கார்ந்து இருக்கிறேன் என்று காமெடியாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதைத் தொடர்ந்து பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக பட்டுப்புடவையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து நீண்ட பதிவு போட்டு இருக்கிறார்.

சினேகா கொடுத்த கிப்ட்

அதில் மணிமேகலை அவருக்கு அவரே வாழ்த்து கூறி இருக்கிறார். பிறகு எனக்கு இந்த பிறந்தநாள் பல ஸ்பெஷல் தருணங்கள் மற்றும் பரிசுகளுடன் தொடங்கியது. எனக்கு பிறந்தநாள் பரிசாக பட்டுப் புடவை பரிசு கொடுத்தது, நடிகை சினேகா தான். புன்னகை அரசிக்கு ரொம்ப நன்றி. இது நான் எதிர்பார்க்காதது. எல்லோரும் சொன்னது போல் நீங்க ரொம்ப ஸ்வீட் லவ் யூ என்று கூறியிருக்கிறார்.

ஸ்பெஷல் பிறந்தநாள்

அதோடு இன்னொரு ஸ்பெஷல் வரலட்சுமி எனக்காக கொடுத்திருக்கிறார். அதாவது எனக்கு கூலிங் கிளாஸ் பிடிக்கும் என்பதற்காக அவங்க அனுப்பி இருக்காங்க. எனக்கு கூலிங் கிளாஸ் ரொம்ப பிடிக்கும் என்கிறது அவங்களுக்கு தெரியும். நான் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த இரண்டு ஸ்பெஷல் பரிசுகளும் கிடைச்சி இருக்கிறது. அதோடு இன்னும் ஒரு ஸ்பெஷலும் என்னுடைய வாழ்க்கையில் நடந்திருக்கிறது அதை இந்த வார இறுதியில் நீங்க தெரிஞ்சுக்க போறீங்க. இதுதான் என்னுடைய ஸ்பெஷல் ஸ்பெஷல் பிறந்தநாள். எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் ஆக செய்ததற்கு என்னுடைய அன்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் டீமுக்கு நன்றி என்று சந்தோஷமாக மணிமேகலை அந்த பதிவு வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு நம்முடைய சார்பாகவும் வாழ்த்துக்கள் மணிமேகலை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+