ஆசைப்பட்டு கிடைச்சது! கண்ணு முன்னாடியே போயிடுச்சு! இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல! மணிமேகலை எமோஷனல்
சென்னை: விஜே மணிமேகலை பல வருடங்களாக தொகுப்பாளினியாக சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாக இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து எமோஷனலாக பேசி இருக்கிறார்.
சின்னத்திரையில் ஒரு சில தொகுப்பாளர்கள் தான் பல வருடங்களாக தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள். அதிலும் 90ஸ் கிட்ஸ்களில் ஃபேவரைட் தொகுப்பாளியில் ஒருவரான மணிமேகலை பலருக்கும் பரிச்சயமானவர். ஆரம்பத்தில் சன் மியூசிக் நிகழ்ச்சியில் தான் இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கினார். அந்த சேனலில் கிட்டத்தட்ட ஏழு வருடங்களை தாண்டி தொகுப்பாளினியாக இருந்தார்.

டான்ஸ் நிகழ்ச்சியில் ரன்னர்
அதற்கு பிறகு ஹுசைன் என்ற டான்ஸரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவரோடு விஜய் டிவியில் டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ரன்னராக தேர்வாகி இருந்தார். தனக்கு டான்ஸ் ஆட வராது என்பதால் டான்ஸரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் என்று பல பேட்டிகளில் மணிமேகலை சொல்லி இருக்கிறார்.
டான்ஸ் ரொம்ப பிடிக்கும்
சமீபத்தில் கூட டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பாபா மாஸ்டர் இந்த மேடை எத்தனை டான்சரை உருவாக்கியிருக்கிறது தெரியுமா என்று சொல்லும் போது, மணிமேகலை நான் ஒரு டான்சருக்கே வாழ்க்கை கொடுத்திருக்கிறேன் தெரியுமா என்று நக்கல் செய்திருந்தார். அதுபோல சோசியல் மீடியாவிலும் மணிமேகலை மற்றும் அவருடைய கணவர் ஹுசைனும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்கள்.

அடிக்கடி தாங்கி செய்யும் சின்ன சின்ன செயல்களையும் youtube சேனல்களில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள். இவர்களுக்கு அதிகமான பாலோவர்ஸ் இருக்கிறார்கள். அதுபோல மணிமேகலை சமீபத்தில் சென்னையில் ஒரு வீடு வாங்கி இருக்கிறார். அது குறித்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். அதற்கு பிறகு பெரிய அளவில் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
காதல் திருமணம்
ஆரம்பத்தில் இரண்டு குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து படிப்படியாக பல கஷ்டங்களையும், அவமானங்களையும் தாண்டி இன்று தங்களுடைய வாழ்க்கையில் ஜெயித்திருப்பதற்கு காரணம் காதல் மட்டும் தான் என்று மணிமேகலை கூறியிருக்கிறார்.

ரியல் லைஃப் சூரிய வம்சம் ஜோடி
இவரை அதிகமான ரசிகர்கள் நீங்கள் தான் ரியல் லைஃப் சூர்யவம்சம் ஜோடி என்று பாராட்டி வருகிறார்கள். அதை மணிமேகலையும் சந்தோசமாக ஏற்றுக் கொள்கிறார். இப்படியான நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் மணிமேகலை கலந்து கொண்ட போது தன்னுடைய வாழ்க்கையும் நடந்த கஷ்டங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
வாடகை வீடு
அதில் நான் இப்போது புது வீடு வாங்கி இருக்கிறேன். இது எல்லோருக்கும் ஒரு எமோஷனல் மூவ்மெண்ட் தான். புது வீடு வாங்க வேண்டும் என்று எல்லோரும் கனவு காண்பார்கள். அதுவும் எந்த உதவியும் இல்லாமல் நம்முடைய சொந்த சம்பாத்தியத்தில் நாமே வாங்கும் வீடு ரொம்பவே ஸ்பெஷல்தான். எனக்கும் அது போல தான் நான் ஆரம்பத்தில் திருமணம் செய்து போது சென்னையில் வாடகை கொடுக்க முடியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டோம்.
ஆரம்பத்தில் கஷ்டம்
வண்டியில் போனால் பெட்ரோல் செலவு ஆகும் என்று பல நாள் நாங்க நடந்தே போயிருக்கிறோம். அதுபோல நாங்கள் கல்யாணம் முடிந்த புதியதில் ஒரு கார் வாங்கினோம். அந்த கார் நான்கு மாதங்களில் பைனான்ஸ் கட்ட முடியவில்லை என்று தூக்கிட்டு போயிட்டாங்க.

கையை விட்டு போன கார்
இதுபோன்ற காட்சியை படங்களில் தான் பார்த்திருக்கிறேன். முதல் முறையா நமக்கு நடக்கும்போது ரொம்ப கஷ்டமா இருந்தது. எப்படியும் நான்கு வருடத்தில் இன்னொரு புது கார் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் அடுத்த வருடத்திலேயே நாங்க புது கார் வாங்கிவிட்டோம் இது நாங்க செய்த சாதனையாக இருந்தாலும் முதல் கார் எங்கள் கையை விட்டுப் போகும்போது ரொம்பவே கஷ்டமாக இருந்தது.
மாறாத காதல்
அதுபோல எனக்கு வாழ்க்கையில் பெரிய துணை ஹுசைன் மட்டும்தான். நான் என்னுடைய தன்னம்பிக்கை எனக்கு கொடுத்துக் கொண்டே இருப்பது அவன் மட்டும்தான். அவன் இல்லை என்றால் நான் இல்லை என்று அந்த பேட்டியில் மணிமேகலை எமோஷனலாக பேசியிருக்கிறார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications