Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8 வருஷமா அந்த சேனலில் இருந்தேன், அப்படி சொன்னாங்க! கண்கலங்கிய மணிமேகலை.. பாபா மாஸ்டர் சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த விஜே மணிமேகலை இப்போது ஜீ தமிழல் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருக்கிறார். அவர் நேற்றைய நிகழ்ச்சியில் கண்கலங்க பேசியிருக்கிறார். அவருக்கு பாபா மாஸ்டர் ஆறுதல் கூறியிருக்கிறார்.

சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பலருக்கும் வி.ஜே மணிமேகலை பரிச்சயமானவர்தான். சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை ஆரம்பத்தில் ஸ்டார் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலைக்கு சேர்ந்தார். கல்லூரி படிக்கும் போது பகுதி நேரமாக வேலைக்கு சேர்ந்து பிறகு முழு நேரமாகவும் எட்டு வருடங்களாக அந்த சேனலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

Priyanka VJ Manimegalai

எட்டு வருட வேலை

அப்போது மணிமேகலைக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இவருடைய வளவளப்பேச்சு மற்றும் காமெடியான கிண்டல் ரசிக்க வைத்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது டான்ஸரான ஹுசேன் என்பவரை மணிமேகலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காதல் திருமணம்

அதற்கு பிறகு விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அது நிகழ்ச்சியில் ரன்னராகவும் தேர்வானார். அதற்கு பிறகு சில வருடங்களாக விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை உட்பட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அந்த நேரத்தில்தான் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது.

விமர்சனங்கள்

முதல் சீசனில் இவர் கோமாளியாக கலந்து கொள்ளப் போகிறார் என்ற போது அதிகமான விமர்சனங்கள் வந்தது‌. ஒரு லீட் கிடைத்தால் அதை வைத்தே பேசி சமாளிக்கும் மணிமேகலை எப்படி இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்க முடியும் என்று பலர் கூறியிருக்கிறார்கள். ஆனால் மணிமேகலையின் பெர்பார்மன்ஸ் பார்த்ததும் பலரும் வாய் அடைத்துப் போயிருந்தனர்.

மணிமேகலையின் விலகல்

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடும் மணிமேகலைக்கு அதிக பாராட்டும் வந்தது. ஆனாலும் நான்காவது சீசனில் இருந்து திடீரென்று விலகி இருந்தார். பிறகு ஐந்தாவது சீசனில் தொகுப்பாளினியாக வந்திருந்தார். நிகழ்ச்சி முடிவதற்கு கடைசி இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரியங்காவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அந்த நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேறி இருந்தார்.

போட்டியாளரின் நெகிழ்ச்சி

அது குறித்து மணிமேகலை போட்ட போஸ்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருந்தாலும் இப்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் போட்டியாளர் ஒருவர், தான் குரூப் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தேன் ஆனால் இப்போது இந்த நிகழ்ச்சியின் மூலமாக தனக்குன்னு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் நான் மேலே வரவேண்டும் என்று விரும்புகிறேன் என்று எமோஷனலாக பேசி இருந்தார்.

மணிமேகலை அட்வைஸ்

அதை பார்த்ததும் மணிமேகலை பேசும்போது, நான் எட்டு வருஷங்களாக ஒரு சேனலில் தொகுப்பாளினியாக இருந்தேன். அதற்கு பிறகு நான் ஒரு காமெடி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்ள போறேன் என்ற போது அதிகமான விமர்சனங்கள் வந்தது. ஆனாலும் நான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மணிமேகலையால் தொகுப்பாளினியாகவும் இருக்க முடியுது, கோமாளியாகவும் இருக்க முடிகிறது அவருக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதுபோல செய்ய முடிகிறது என்று பலர் பாராட்டினாங்க.

மணிமேகலை எமோஷனல்

நாம எப்படி இருக்கிறோம் என்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் நம்முடைய வேலையை சரியாக செய்து கொண்டிருக்கும்போது அதற்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும். ஒருநாள் நாம் அசிங்கப்பட்டாலும், அவமானப்பட்டாலும் அதற்கான பலன் மட்டும் கிடைக்காமல் போகவே செய்யாது என்று எமோஷனலாக கண் கலங்கி பேசியிருந்தார்.

பாபா மாஸ்டர் பாராட்டு

அப்போது அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் பாபா மாஸ்டர் தான் இருந்த இடத்தில் இருந்து எழுந்து வந்து மணிமேகலையை பாராட்டி, நீ இன்னமும் அதிகமாக உன்னுடைய திறமையை காட்டணும் என்று கூறியிருந்தார். அதுபோல அந்த போட்டியாளரையும் என்கரேஜ் செய்து இருந்தார். இந்த க்யூட்டான வீடியோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+