Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் டிவினாலே தொல்லை தான்! மணிமேகலை சொன்ன அந்த வார்த்தை.. ஆடிபோன அரங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜே மணிமேகலை இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருக்கிறார். நேற்று அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது திடீரென்று விஜய் டிவி குறித்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

90ஸ் தொகுப்பாளினிகள் என்று சொன்னாலே ஒரு சிலருடைய முகம் டக்கென்று நினைவிற்கு வரும் அதில் மணிமேகலையும் ஒருவர். மணிமேகலை சோசியல் மீடியாவை பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சயமானவர். தான் செய்யும் சின்ன சின்ன செயல்களையும் youtube இல் அடிக்கடி வீடியோ வெளியிட்டு அதன் மூலமும் அதிக வருமானம் பெற்று வருகிறார்.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

சர்ச்சைக்கு விளக்கம்

ஆரம்பத்தில் சன் மியூசிக்கில் தான் தொகுப்பாளினியாக வேலைக்கு சேர்ந்திருந்தார். கல்லூரி படிக்கும் போதே சன் மியூசிக்கில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கியிருந்தார். இவரும் வி.ஜே அஞ்சனாவும் ஒரே போல இருக்கிறார்கள் என்று அந்த நேரத்தில் அதிகமானோருக்கு குழப்பம் ஏற்படும். இருவரும் அக்கா தங்கச்சியா அல்லது உறவினரா என்று பலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆனால் இருவருக்கும் எந்த உறவும் கிடையாது என்று அவர்களே விளக்கம் கொடுத்திருந்தனர்.

காதல் திருமணம்

அதுபோல மணிமேகலை சன் மியூசிக்கில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும்போது தன்னுடைய நிகழ்ச்சியில் போடப்பட்ட பாடல் ஒன்றில் லாரன்ஸ் மாஸ்டருடன் ஹுசைன் டான்ஸ் ஆட அதை பார்த்து பிடித்துப்போன மணிமேகலை அவரிடம் பேசுவதற்கு பல முயற்சிகள் எடுத்திருக்கிறார். பிறகு இருவரும் பேச முதலில் நட்பாக தொடங்கி அதற்கு பிறகு காதலிக்க தொடங்கிவிட்டனர்.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

புது வாய்ப்பு

இவர்களுடைய காதலுக்கு இரண்டு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தாலும் குடும்பத்தையும் மீறி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு மணிமேகலைக்கு தன்னுடைய கணவரோடு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினாகவும் கலந்து கொண்டு வந்தார்.

விமர்சனங்கள்

அந்த நேரத்தில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக மணிமேகலைக்கு வாய்ப்பு கிடைத்தது. மணிமேகலை இதுவரைக்கும் தொகுப்பாளினியாக இருந்துவிட்டாரே இவரால் எப்படி ஒரு கேரக்டராக மாறி நடிக்க முடியும் என்று பல விமர்சனங்கள் வந்தது. ஆனால் எனக்கு எல்லாமே அத்துபிடி என்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் முதல் வாரத்திலேயே நிரூபித்து விட்டார்.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

மணிமேகலையின் விலகல்

தனக்கு கொடுத்த கேரக்டர்படி ஒவ்வொரு வாரமும் சிறப்பாக ரசிகர்களை என்டர்டைன்மெண்ட் செய்து கொண்டிருந்தார். அதற்குப் பிறகு மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் தொகுப்பாளினியாக வந்தபோது இவருக்கு தொகுத்து வழங்க தெரியுமா என்று கூட பல கேள்விகள் இருந்தன. ஆனாலும் அந்த நிகழ்ச்சியின் கடைசி இரண்டு வாரத்திற்கு முன்பு பிரியங்காவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக விலகி இருந்தார்.

திறமைக்கு அங்கீகாரம்

அந்த நேரத்தில் விஜய் டிவி பிரபலங்கள் சிலர் மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சிலர் மணிமேகலைக்கு எதிராக பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்து போஸ்ட் போட்டதையும் பார்க்க முடிந்தது. அதற்குப் பிறகு மணிமேகலைக்கு ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மணிமேகலையின் புது முயற்சி

இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு சில வாரங்கள்தான் ஆகிறது. இந்த நிகழ்ச்சியிலும் மணிமேகலை சிறப்பாக பர்பாமன்ஸ் செய்து வருகிறார். அவருடைய ரசிகர்கள் உங்களுடைய திறமைக்கு கண்டிப்பாக நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என்று பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தான் நேற்றைய நிகழ்ச்சியில் மணிமேகலை உளறிய சில வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

மணிமேகலை சொன்ன வார்த்தை

அதாவது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் மணிமேகலையும் விஜே விஜயும் தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் விஜய்யிடம் பேசும்போது இந்த விஜய் டீம் என்றாலே பிரச்சனைதான் என்று சொல்வதற்கு பதிலாக "இந்த விஜய் டிவி என்றாலே பிரச்சனைதான்" என்று மணிமேகலை கூறி இருக்கிறார். அதை பார்த்ததும் விஜய் என்ன சொன்ன இந்த வார்த்தை இன்னொரு முறை சொல்லு நீ தான் தைரியமான ஆளாச்சே என்று கேட்க, சொன்ன வார்த்தையை கேட்டு மணிமேகலை அய்யய்யோ என்று பதறி இருந்தாலும் சிரித்து சமாளித்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் விஜய் டிவி மீது தனக்கு இருக்கும் கோபத்தை மணிமேகலை மேடையில் உளறிவிட்டாரே என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

ரசிகர்கள் கருத்து

அதுபோல இன்னும் ஒரு சில ரசிகர்கள் விஜய் டிவியில் இருந்து இப்போது பல தொகுப்பாளர்கள், பிரபலங்கள் அடுத்தடுத்து சேனலுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு அங்கு ஒரு சிலருடைய ஆதிக்கம் தான் காரணம் என்று கருத்து தெரிவித்து வருவதையும்
பார்க்க முடிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+