கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிந்த ரகசியம்.. ஆனால் இப்படி ஆயிடுச்சு... கணவரைப் பற்றி பேசிய மணிமேகலை
சென்னை: தொகுப்பாளர் மணிமேகலை தன்னுடைய காதல் கதையைப் பற்றி சமீபத்தில் பேசியிருக்கிறார்.
முதல் முறை தன்னுடைய கணவர் ஹுசைன் பற்றி தெரிய வந்த உண்மைகள் அப்போது தான் எடுத்த முடிவு பற்றி மணிமேகலை வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
காதல் திருமணம் செய்து கொண்ட மணிமேகலை தன்னுடைய கணவரோடு கிராமத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

மனம் கவர்ந்த தொகுப்பாளர்
தொகுப்பாளர் மணிமேகலை தன்னுடைய திறமையால் சன் மியூசிக், சன் டிவி என பல சேனல்களில் நட்சத்திர தொகுப்பாளியாக வலம் வளர்ந்தவர்.இவர் தொகுத்து வழங்கும் போது சிரித்து சிரித்து பேசி யாருடைய மனதையும் புண்படும்படி பேசாமல் நகைச்சுவையாக பேசுவது இவருக்கு பிளஸ் பாயிண்ட் என்று ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர். இவர் நடன இயக்குனர் ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு
காதல் திருமணத்திற்கு அவருடைய வீட்டில் எதிர்ப்பு வந்ததால் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதற்குப் பிறகு விஜய் டிவியில் மணிமேகலை ஹூசைன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் தான் அவருக்கு மணிமேகலைக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரு கோமாளியாக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் இவருடைய கோமாளித்தனத்தை அதிகமான ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

திடீர் விலகல்
ஆக்டிவாக இருந்து வரும் மணிமேகலை தான் செய்யும் சின்ன சின்ன செயல்களையும் தான் சம்பாதித்து வாங்கும் பொருட்களையும் பற்றியும் அடிக்கடி வீடியோவில் தெரிவித்து வருகிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் பாராட்டு கூறி வருகிறார்கள். இந்த நிலையில் மூன்றாவது சீசனில் கோமாளியாக கலந்து கொண்ட மணிமேகலை திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதற்கு பல்வேறு காரணங்களும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரைக்கும் மணிமேகலை எந்த காரணம் என்பது பற்றி விளக்கம் கொடுக்கவில்லை.

முதல் பார்வை
இந்த நிலையில் சமீபத்தில் மணிமேகலை ஒரு பேட்டி ஒன்றில் தன்னுடைய கணவர் மீது தனக்கு காதல் ஏற்படுவதற்கான காரணத்தை பற்றி கூறியிருக்கிறார். அதில் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் வரும் பாடலில் ரீமிக்ஸ் பாடலில் சன் மியூசிக் லாரன்ஸ் உடன் சேர்ந்து ஹூசைன் ஒரு சில ஸ்டெப் டான்ஸ் ஆடி இருக்கிறார். அந்த பாடல் சன் மியூசிக் வரும்போதெல்லாம் இவருடைய டான்ஸ்சை பார்த்து இந்த பையன் சூப்பரா ஆடுறான் என்று மனசுக்குள் இவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

காதல் கதை
அதுமட்டுமல்லாமல் அந்த பாடலை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்ததால் இவரை எப்படியாவது பாராட்ட வேண்டும் என்று எண்ணம் மனதிற்குள் வந்து விட்டதாம். பிறகு பலரிடம் நம்பர் கேட்டிருக்கிறார். ஒரு வழியாக அந்த நம்பரும் இவருக்கு கிடைத்து விட்டதாம். அப்போதுதான் இவருக்கு ஹூசைன் என்று பெயரை சொன்னார்களாம். என்னடா முஸ்லிமா இருக்காரே? போண் பண்ணலாமா? வேண்டாமா? என்று ஒரு மணி நேரம் யோசித்து இருக்கிறார். பிறகு இரவு 11. 10 மணிக்கு கால் பண்ணி விட்டாராம். அப்போதே போனில் இவருடைய பெயரை கிரஷ் என்று சேவ் செய்து விட்டேன் என்று தன்னுடைய காதல் கதையை கூறியிருக்கிறார்.

புதிய வீடு
இந்த நிலையில் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிறகு தன்னுடைய கிராமத்தில் தாங்கள் சம்பாதித்து வாங்கிய இடத்தில் ஒரு வீடு ஒன்று கட்டப் போவதாக சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் அந்த இடத்திற்கு சென்று திடீரென்று மழை ஏற்பட்ட போது இவர்கள் அமைத்த குட்டி வீட்டுக்குள் தன்னுடைய கணவரோடு இவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதிகமான ரசிகர்கள் இதை பாராட்டி கருத்துக்களை குவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications