Exclusive: விஜய் டிவியை விட்டு விலகிய மணிமேகலைக்கு கிடைத்த பெரிய நிகழ்ச்சி.. எந்த சேனல் தெரியுமா?
சென்னை: வி.ஜே மணிமேகலை விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கும் போது மனக்கசப்பால் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இப்போது அவருக்கு ஜீ தமிழில் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது எந்த நிகழ்ச்சி என்று விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் மகாநடிகை நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து விரைவில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆடிஷன் நடந்து முடிந்துள்ளது.

மெகா ஆடிசன் மூலமாக நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் இறுதி போட்டியாளர்கள் யார் யார் என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் மாஸ்டர், ஸ்னேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வந்த நிலையில் இந்த முறை அதில் மாற்றம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.
நடுவர் பக்கம் தரப்பில் நடந்த மாற்றம் மட்டுமின்றி தொகுப்பாளர் தரப்பிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆமாம் இந்த முறை ஆர்.ஜே விஜயுடன் இணைந்து மணிமேகலையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

மணிமேகலை ஆரம்பத்தில் பல சேனல்களில் வேலை பார்த்து இருந்தாலும் அவருக்கு பெரிய அளவில் பெயரையும் புகழையும் வாங்கி கொடுத்தது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த மணிமேகலை பிறகு தொகுப்பாளராக மாறி இருந்தார்.

ஆனால் கடைசியாக முடிவடைந்த குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்த ஒரு தொகுப்பாளர் ஒருவர் என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார், நான் வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் சொல்வது தான் நடக்க வேண்டும் என்று என்னுடைய வேலையில் தலையிடுகிறார். எனக்கு சுயமரியாதை இருக்கிறது அதனால் நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணிமேகலை சொன்னது விஜே பிரியங்கா தான் என்று பிரியங்காவை பல ரசிகர்கள் திட்டி தீர்த்து வந்தனர்.

ஆனால் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்து போஸ்ட் போட்டனர் அதற்குப் பிறகு வழக்கம் போல சமூக வலைதள பக்கங்களில் மணிமேகலை ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்திருப்பதை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications