பல நாள் ஆசை நிறைவேறியது! பிறந்தநாளில் மணிமேகலை எமோஷனல், கண்ணீருக்கு பதில் கிடைத்தது! குவியும் வாழ்த்து
சென்னை: விஜே மணிமேகலை இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளில் தன்னுடைய வாழ்க்கையில் தான் ரொம்ப நாட்களாக எதிர்பார்த்து இருந்த சந்தோஷம் கிடைத்திருக்கிறது என்று எமோஷனலாக போஸ்ட் போட்டு இருக்கிறார். அதோடு தன்னுடைய பிறந்தநாளில் கிடைத்த ஒரு பெரிய சர்ப்ரைஸை நான் இந்த வார இறுதியில் சொல்கிறேன் என்றும் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்.
சோசியல் மீடியா பயன்படுத்தும் பலருக்கும் மணிமேகலை தெரிந்திருக்கும் instagram, youtube-ல் பிரபலமாக இருக்கும் மணிமேகலை விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் இருந்தார். ஆனால் கடந்த வருடத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இப்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலக்கி கொண்டு இருக்கிறார்.

ஸ்பெஷல் நாள்
இவருடைய ரசிகர்கள் இவர் மீண்டும் கம்பேக் கொடுத்தது குறித்து பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் மணிமேகலைக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவருடைய ரசிகர்கள் அவருக்கு நேற்று இரவு முதலே பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். அதை மணிமேகலை சலிக்காமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து கொண்டே இருக்கிறார். இன்னும் சிலருடைய பதிவுகளை நான் பார்த்தேன் ஆனால் அதற்கு பதில் தான் என்னால் கொடுக்க முடியவில்லை என்று இன்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் மன்னிப்பு கேட்டு போஸ்ட் போட்டு இருக்கிறார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
அதோடு தன்னுடைய பிறந்தநாளில் தனக்காக சினேகா கொடுத்த புடவையையும், நடிகை வரலட்சுமி கொடுத்த கூலிங் கிளாஸையும் போட்டு சில புகைப்படங்களையும், வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். நேற்று இரவு மணிமேகலையின் கணவர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். அதையும் எப்போதும் போல ஜாலியாகவே மணிமேகலை கொண்டாடி இருந்தார்.
எதிர்பார்க்காத சந்தோஷம்
ஆனால் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் வெளியிட்ட பதிவு தான் சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது தன்னுடைய பிறந்தநாளில் நான் எதிர்பார்க்காத இன்னொரு பெரிய சந்தோஷம் எனக்கு கிடைத்திருக்கிறது அதை இந்த வார இறுதியில் சொல்கிறேன், ஒரு வாரம் காத்திருங்கள் மக்களே என்று மணிமேகலை கூறி இருக்கிறார்.
ரசிகர்கள் கேள்வி
அதை பார்த்ததும் மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா? அதை இந்த வார இறுதியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சொல்லப் போகிறாரா? என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதே நேரத்தில் சில வாரங்களுக்கு முன்பு தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் தன்னுடைய தந்தை இப்போ வரைக்கும் என்னிடம் பேசவில்லை என்று மணிமேகலை எமோஷனலாக பேசியிருந்தார். அப்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் குழுவினர்கள் மற்றும் நடுவராக இருக்கும் பாபா பாஸ்கர், வரலட்சுமி மற்றும் சினேகா உட்பட எல்லோருமே மணிமேகலைக்கு நாங்கள் சீக்கிரமாக உங்க அப்பாவ வரவைத்து உனக்கு சர்ப்ரைஸ் கொடுப்போம் என்று கூறியிருந்தனர்.
கண்ணீர் விட்ட மணிமேகலை
ஒரு நாள் மேடையில் மணிமேகலை நின்று கொண்டிருக்கும் போது பின்பக்கமாக இருந்து உன்னுடைய அப்பா வருவாரு கண்டிப்பா, உன்கிட்ட பேசுவாரு என்று ஆறுதல் சொல்லி இருந்தார்கள். அதற்கு மணிமேகலை அது நடக்காது என்பது எனக்கு தெரியும் என்று சொல்ல அதை நாங்க பாத்துக்கிறோம் என்று பாபா பாஸ்கர் சொல்லியிருந்தார். இதனால் மணிமேகலை இப்போது தன்னுடைய பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக டான்ஸ் ஜோடி டான்ஸ் குழுவினர்கள் செய்த விஷயம் என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை கொடுத்தது என்று பகிர்ந்து இருப்பதால் அது அவருடைய அப்பாவின் வருகையாக தான் இருக்கும் என்றும் கருத்துக்கள் குவிந்து வருகிறது.

காதல் திருமணம்
மணிமேகலை மற்றும் அவருடைய கணவர் ஹுசைன் இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள். மணிமேகலை தான் காதலிக்கும் விஷயத்தை அவருடைய தந்தையிடம் தான் முதலில் சொல்லி இருந்தாராம். ஆனால் ஹுசைன் பெயரை கேட்டதுமே வேற்று மதத்தவரை திருமணம் செய்து கொள்வதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். அதனால் தான் மணிமேகலை வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டேன் என்று பல பேட்டிகளில் பேசி இருக்கிறார்.
ஏழு வருடம்
அதுபோல மணிமேகலை அவருடைய கணவரை திருமணம் செய்து 7 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இப்போது தான் அவருடைய அம்மாவும், தம்பியும் மணிமேகலையிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் மணிமேகலையின் அப்பா வரப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. எது எப்படியோ பிறந்தநாளில் மணிமேகலைக்கு அடுத்தடுத்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைத்துக் கொண்டிருப்பது சந்தோசம் தான். மணிமேகலைக்கு நம்முடைய சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications