விஜே மணிமேகலைக்கு ஏற்பட்ட திடீர் பிரச்சனை..கணவன் காலில் விழுந்து கெஞ்சல்.. வெளியான வீடியோ
சென்னை: விஜே மணிமேகலை தன்னுடைய கணவர் ஹூசைன் காலில் விழுந்து கெஞ்சிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தன்னுடைய கணவர் பிறந்தநாளுக்கு தன்னால் எந்த சர்ப்ரைஸ் கொடுக்க முடியவில்லை என்று மணிமேகலை ஃபீல் பண்ணி இருக்கிறார்.
மணிமேகலை அவருடைய கணவர் மீது வைத்திருக்கும் காதல் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தொகுப்பாளர் மணிமேகலை தன்னுடைய திறமையால் சன் மியூசிக், சன் டிவி என பல சேனல்களில் நட்சத்திர தொகுப்பாளியாக வலம் வளர்ந்தவர்.இவர் தொகுத்து வழங்கும் போது சிரித்து சிரித்து பேசி யாருடைய மனதையும் புண்படும்படி பேசாமல் நகைச்சுவையாக பேசுவது இவருக்கு பிளஸ் பாயிண்ட் என்று ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர். இவர் நடன இயக்குனர் ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆக்டிவாக இருந்து வரும் மணிமேகலை தான் செய்யும் சின்ன சின்ன செயல்களையும் தான் சம்பாதித்து வாங்கும் பொருட்களையும் பற்றியும் அடிக்கடி வீடியோவில் தெரிவித்து வருகிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் பாராட்டு கூறி வருகிறார்கள். இந்த நிலையில் மூன்றாவது சீசனில் கோமாளியாக கலந்து கொண்ட மணிமேகலை திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதற்கு பல்வேறு காரணங்களும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரைக்கும் மணிமேகலை எந்த காரணம் என்பது பற்றி விளக்கம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் மணிமேகலை ஒரு பேட்டி ஒன்றில் தன்னுடைய கணவர் மீது தனக்கு காதல் ஏற்படுவதற்கான காரணத்தை பற்றி கூறியிருக்கிறார். அதில் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் வரும் பாடலில் ரீமிக்ஸ் பாடலில் சன் மியூசிக் லாரன்ஸ் உடன் சேர்ந்து ஹூசைன் ஒரு சில ஸ்டெப் டான்ஸ் ஆடி இருக்கிறார். அந்த பாடல் சன் மியூசிக் வரும்போதெல்லாம் இவருடைய டான்ஸ்சை பார்த்து இந்த பையன் சூப்பரா ஆடுறான் என்று மனசுக்குள் இவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல் அந்த பாடலை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்ததால் இவரை எப்படியாவது பாராட்ட வேண்டும் என்று எண்ணம் மனதிற்குள் வந்து விட்டதாம். பிறகு பலரிடம் நம்பர் கேட்டிருக்கிறார். ஒரு வழியாக அந்த நம்பரும் இவருக்கு கிடைத்து விட்டதாம். அப்போதுதான் இவருக்கு ஹூசைன் என்று பெயரை சொன்னார்களாம். என்னடா முஸ்லிமா இருக்காரே? போண் பண்ணலாமா? வேண்டாமா? என்று ஒரு மணி நேரம் யோசித்து இருக்கிறார். பிறகு இரவு 11. 10 மணிக்கு கால் பண்ணி விட்டாராம். அப்போதே போனில் இவருடைய பெயரை கிரஷ் என்று சேவ் செய்து விட்டேன் என்று தன்னுடைய காதல் கதையை கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிறகு தன்னுடைய கிராமத்தில் தாங்கள் சம்பாதித்து வாங்கிய இடத்தில் ஒரு வீடு ஒன்று கட்டப் போவதாக சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் அந்த இடத்திற்கு சென்று திடீரென்று மழை ஏற்பட்ட போது இவர்கள் அமைத்த குட்டி வீட்டுக்குள் தன்னுடைய கணவரோடு இவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதிகமான ரசிகர்கள் இதை பாராட்டி கருத்துக்களை குவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தன்னுடைய கணவரின் பிறந்தநாளுக்கு ஒவ்வொரு வருடமும் சிறப்பாக சர்ப்ரைஸ் கொடுத்து செலபரேட் பண்ணும் மணிமேகலை இந்த வருடம் கணவர் சொந்த ஊரில் இருக்க இவர் சென்னையில் மாட்டி விட்டாராம். பிறகு எப்படியாவது ஊருக்கு போய் விட வேண்டும் என்று இரவு அவரே காரை எடுத்துக் கொண்டு கிளம்பி இருக்கிறார். போகும் வழியில் ஒரு கடையில் கடை பூட்டும் நேரத்தில் கெஞ்சி கூத்தாடி ஒரு கேக் மட்டும் வாங்கிக் கொண்டு சென்று இருக்கிறார்.
என்னுடைய கணவருக்கு எந்த ஒரு சர்ப்ரைஸும் சிறப்பும் செய்ய முடியவில்லை என்று கணவர் காலில் விழுந்து மணிமேகலை மன்னிப்பு கேட்க அதற்கு அவருடைய கணவர் இது எல்லாம் பெரிய பிரச்சனையா என்று எப்போதும் போல ஜாலியாக எடுத்துக் கொள்ள, இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இருந்தால் எப்படி ஒரு ஜோடியாக இருக்க வேண்டும். காதலித்து திருமணம் செய்து கொண்டால் மட்டும் போதாது திருமணத்திற்கு பிறகும் காதல் குறைய கூடாது என்றெல்லாம் ரசிகர்கள் இவர்களை வாழ்த்தி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications