மீண்டும் விஜய் டிவிக்கு வருகிறேன்..அதுவும் நாள் "இது” தான் மணிமேகலை கொடுத்த அப்டேட்..காரணம் இதுதானா?
சென்னை: சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலை மீண்டும் விஜய் டிவிக்கு வரப்போவதாக அவரே கூறி இருக்கிறார்.
அதிகமான ரசிகர்கள் அவரிடம் கேட்டு வந்த கேள்விகளுக்கு எல்லாம் மணிமேகலை பதில் கூறி இருக்கிறார்.
மீண்டும் விஜய் டிவிக்கு மணிமேகலை வருவது குறித்து வெளியான தகவலுக்கு ரசிகர்கள் மகிழ்ச்சியோடு காத்திருக்கிறார்களாம்.

மூன்று சீசன் கோமாளி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4இல் இருந்து சமீபத்தில் தான் மணிமேகலை வெளியேறினார். மணிமேகலையின் வெளியேற்றம் அவருடைய ரசிகர்களை மிகவும் பாதித்திருந்தது. சமூக வலைத்தளத்தில் அதிகமாக ரசிகர்கள் மணிமேகலை எதற்காக வெளியேறினார் என்று பலரும் தேடிக் கொண்டிருந்தனர். தொடர்ந்து மூன்று சீசங்களாக மணிமேகலை கோமாளியாக இருந்து வருகிறார். ஆனால் திடீரென்று தான் வெளியேறப் போகிறேன் என்று சொன்னார் மணிமேகலை எதற்காக என்ற காரணத்தை கூறவில்ல.

கேள்விக்கு பதில்
இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களிடம் நீங்கள் கேள்வி கேளுங்கள் நான் பதில் சொல்லுகிறேன் என எல்லோரையும் எப்படி இருக்கிறீர்கள் என்று பேச்சை ஆரம்பித்து வைத்திருக்கிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் நீங்கள் எதனால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்கள். உங்களை நாங்கள் ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம் என்று ஃபீல் பண்ணி கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு மணிமேகலை நானும் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

என்னது கர்ப்பமா
அதைத்தொடர்ந்து இன்னொரு ரசிகர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அப்படி ஒரு நல்ல விஷயம் நடந்திருந்தால் நானே உங்களிடம் சொல்லி இருப்பேன். வேறு ஒரு ஆள் வைத்து நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் கூறியிருக்கிறார்.

மீண்டும் வருகிறார்
அடுத்ததாக மணிமேகலை இடம் நீங்கள் விஜய் டிவியில் இருந்து விலகி விட்டீர்களா? அல்லது இனி எப்போது வருவீர்கள் என்று ஒரு கேள்வி எழுப்ப அதற்கு ரசிகர் அதற்கு மணிமேகலை நான் விஜய் டிவியை விட்டு விலகவில்லை. மீண்டும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி பட்டிமன்றம் நிகழ்ச்சியில் ஒரு பட்டிமன்ற பேச்சாளராக வர இருக்கிறேன். எனக்கு உங்களுடைய ஆதரவு வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

நலம் விசாரிப்பு
அதைத் தொடர்ந்து இன்னொரு ரசிகர் உங்களுக்கு சமீபத்தில் பிடித்த திரைப்படம் எதுவென்று கேட்க எனக்கு இப்போது நேரத்திற்கு சூரியவம்சம் திரைப்படம் தான் பிடிக்கும் என்று மணிமேகலை கூறி இருக்கிறார். அதைத் தொடர்ந்து அதிகமான ரசிகர்கள் மணிமேகலை மற்றும் அவருடைய கணவரும் நலமாக இருக்கிறீர்களா? என்று விசாரித்து வர அனைவருக்கும் தொடர்ந்து மணிமேகலை பதில் கூறி வருகிறார்.
-
சிறகடிக்க ஆசை: ஜெயிலுக்கு போன சத்யா.. மீனா கண்டுபிடித்த ரகசியம்.. இனி தான் பெரிய சம்பவம் இருக்கு! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications