முதலில் எல்லோரும் சொல்லும்போது நம்பவில்லை... இப்போதான் தெரிகிறது.. மணிமேகலை வெளியிட்ட வீடியோ
வி.ஜே மணிமேகலை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் புதியதாக வீடியோ ஒன்றை அப்லோடு செய்திருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு விஜே மணிமேகலை திடீரென வெளியேறி இருந்தார்.
இந்த நிலையில் புதியதாக வீடியோ ஒன்றை மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
தனக்கு வெள்ளை கலர் உடை நன்றாக இருக்கும் என்று பலர் சொல்லும்போது நான் நம்பவில்லை ஆனால் இப்போதுதான் அது தெரிகிறது என்று மணிமேகலை அந்த வீடியோவில் கூறி இருக்கிறார்.

கலகலப்பான தொகுப்பாளர்
பொதுவாக நாம் நம்முடைய கவலைகளை மறப்பதற்காக டிவியில் சில நிகழ்ச்சிகளை பார்ப்போம். நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்வதற்கு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் கலகலப்பானவர்களாக இருந்தால் தான் ரசிகர்களால் ரசிக்க முடியும். அந்த வகையில் ஒரு சில தொகுப்பாளர்கள் ரசிகர்களின் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் விஜே மணிமேகலை. விஜே மணிமேகலை சன் மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும்போது அவருடைய லைவ் நிகழ்ச்சியில் பலர் போன் செய்து அவரிடம் பேசுவதற்காக போட்டி போட்டு கொண்டிருப்பார்கள்.

ஃபேவரைட் கோமாளி
அந்த அளவிற்கு 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் தொகுப்பாளராக வி ஜே மணிமேகலை அப்போ இருந்து இப்போ வரைக்கும் இடம் பிடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அதற்கு பிறகு விஜய் டிவியில் அவர் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாகி, குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட பிறகு தனக்குள் இன்னொரு முகம் இருக்கு என்பதை இவர் அனைவருக்கும் காட்டிவிட்டார். ஒரு கோமாளியாக இவர் நிகழ்ச்சியில் சுவாரசியத்திற்காக செய்யும் சேட்டைகளால் அதிகமான ரசிகர்கள் இவரை தேட தொடங்கிவிட்டனர். இதுவரைக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பலருக்கு நெகட்டிவ் கருத்துக்கள் வந்து கொண்டு இருந்தாலும் மணிமேகலைக்கு அப்படி நெகட்டிவ் கருத்துக்கள் வராமல் அவருடைய ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.

காரணத்தை சொல்லலையே
இந்த நிலையில் தான் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறி இருந்தார். இப்ப வரைக்கும் அதற்கான காரணம் என்ன என்பதை சொல்லாமல் இருந்து வரும் மணிமேகலை சமூக வலைத்தளத்தில் எப்போதும் போல ஆக்டிவாக இருந்து வருகிறார். அவரும் அவருடைய காதல் கணவர் ஹுசேனும் காதலிக்கும் நபர்களின் ஃபேவரைட் ஜோடியாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டு தங்களுடைய விடாமுயற்சியால் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர் இதை பலர் பாராட்டி வருகின்றனர்.

வெள்ளை உடை
இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மணிமேகலை எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு தான் இதுவரைக்கும் வெள்ளை கலரில் சுடிதார் அணிந்தால் அழகாக இருக்கும் என்று பலரும் கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் நம்பவில்லை. ஆனால் இப்போதான் தெரிகிறது நானும் அழகாகத் தான் இருக்கிறேன் என்று வெள்ளை உடையில் இவர் எடுத்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் அவரை மணிமேகலையை பாராட்டி வருகிறார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications